உத்தமி (1985 திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
உத்தமி
இயக்கம்எம். வெள்ளைச்சாமி
தயாரிப்புமாருதி மூவி ஆர்ட்ஸ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புசுஜாதா
ராஜேஷ்
சங்கீதா
வெளியீடு1985
மொழிதமிழ்

உத்தமி (Uthami) என்பது 1985 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் திரைப்படமாகும். எம். வெள்ளைச்சாமி இயக்கிய இப்படத்தில் சுஜாதா, ராஜேஷ், சங்கீதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.[1]

கதை

சிவசங்கரும் ( ராஜேஷ் ), கங்காவும் ( சங்கீதா ) ஒத்துப்போகாத தம்பதிகளாக உள்ளனர். அவன் தன் மனைவி பாரம்பரியம் மிக்க மனைவியாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறான். அவளோ மிகவும் நவீனமான, தாராள சிந்தனையுள்ள கணவராக இருக்கவேண்டும் என்று விரும்புகிறாள். சிவசங்கர் பராந்தமனிடம் ( நிழல்கள் ரவி ) பணிபுரிகிறார், ஆனால் அவன் தனது முதலாளியால் தான் வைரங்களை கடத்தப் பயன்படுகிறேன் என்பதை அறியாமல் உள்ளார். பராந்தமனும் கங்காவும் அலுவலக விருந்து ஒன்றில் சந்தித்து விரைவில் இருவருக்கும் இடையில் தகாத உறவு ஏற்படுகிறது. இதை அறிந்து மனம் உடைந்த சிவசங்கர் ஓடும் தொடருந்திலிருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சிக்கிறான். அவனை அறியாமல், அவனது ஆடையில் பரந்தமனின் உத்தரவின் பேரில் கங்கா மறைத்து வைத்த வைரங்கள் உள்ளன. கங்கா சிவசங்கரின் தற்கொலைக் கடிதத்தைக் காண்கிறாள். பின்னர் பரந்தமனுடன் சேர்ந்து வைரங்களை மீட்கும் பணியில் ஈடுபடுகிறாள். அந்த முயற்சிகள் தோல்வியுற்றன. பரந்தாமனை நம்ப முடியாது என்பதை கங்கா உணர்கிறாள். அவள் அவனைக் கொலை செய்து அவனது கடத்தல் வைர மோதிரத்தை எடுத்துக் கொள்கிறாள்.

இதற்கிடையில், தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சிவசங்கரை காயத்ரி (சுஜாதா ) மீட்கப்படுகிறாள். இதை அவன் வாழ்க்கையின் மறு பிறப்பாக பார்க்கிறான். அவன் விரைவில் காயத்ரியை மணந்து, அவர்களது மகன் ராஜாவுடனும் (இளவரசன்) மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்துகிறார். குடும்ப நண்பர் ஜெகநாத் (விஜயன்) என்பவரால் ஈர்க்கப்பட்ட ராஜா ஒரு காவல் துறை அதிகாரியாகிறான். அவன் மேடம் என்று குறிப்பாக அழைக்கப்படும் வைர கடத்தல்காரியை பிடிப்பதில் கவனம் செலுத்துகிறான். ராஜா விசாரணை நடத்த நடத்த அவன் மேடம் எனப்படும் கங்காவை நெருங்குகின்றான். இந்த புதிய, காவல் அதிகாரியைப் பற்றி எச்சரிக்கை பெறும் கங்கா அவனைப் பற்றி விசாரிக்கையில், சிவசங்கர் இன்னும் உயிருடன் இருப்பதை அறிந்து கொள்கிறாள். அவள் ராஜாவுடன் நட்பை வளர்த்து, சிவராம் / சிவசங்கருக்கு எதிராக மெல்லிய ஒரு சந்தேகத்தை விதைக்கிறாள். சிவசங்கரைக் கொலை செய்த குற்றவாளி தனது தந்தை என்று ராஜா என விரைவில் நம்புகிறான். சிதைந்த தனது குடும்பத்தை மீண்டும் ஒன்றிணைக்க காயத்ரி பழைய ரகசியங்களை வெளிப்படுத்துகிறாள்.

நடிகர்கள்

இசை

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=உத்தமி_(1985_திரைப்படம்)&oldid=30991" இருந்து மீள்விக்கப்பட்டது