உதயா (நடிகர்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
உதயா (நடிகர்)
இயற்பெயர்/
அறியும் பெயர்
உதயா
பணி நடிகர்
பெற்றோர் ஏ. எல். அழகப்பன் (தந்தை)

உதயா ஒரு இந்திய திரைப்பட நடிகர். அவர் தமிழ் மொழி படங்களில் நடித்துள்ளார். அவர் பிரபல தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் மகனும், இயக்குனர் ஏ.எல் விஜய்யின் சகோதரரும் ஆவார்.[1]

தொழில்

இயக்குனர் பாரதி கண்ணனின் திருநெல்வேலி திரைப்படத்தில் உதயா அறிமுகமானார். பிரபு மற்றும் கரண் ஆகியோருடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். திருநெல்வேலி திரைப்படத்தில் விந்தியாவுக்கு ஜோடியாக நடித்தார். இந்த படம் மோசமான விமர்சனங்களை பெற்று மக்களின் கவனத்தை பெறவில்லை. உதயாவின் நடிப்பு "சராசரி" என்று விவரிக்கப்பட்டது.[2] அவர் அடுத்ததாக கலகலப்பில் விஜயலட்சுமிக்கு ஜோடியாக நடித்தார், அதில் நெப்போலியன் மற்றும் ஜெயா சீலா ஆகியோரும் நடித்திருந்தனர்.[3]

பூங்குழலி, சகலகலா பேபி போன்ற திரைப்படங்களில் நடித்தார்.[4] 2004 ஆம் ஆண்டில், நடிகர் அசாமி என்ற திரைப்படத்தினை அறிவித்தார். ஆனால் படமாக உருவாகவில்லை.[5]

உதயா ஆகஸ்ட் 2007 இல் கீர்த்திகாவை மணந்தார்.[6] காதல் சாதி, விண்ணைத்தாண்டி வருவாயா ஆகிய படங்களில் நடித்தார். விண்ணத்தாண்டி வருவாயா திரைப்படத்தின் பெயர் உன்னைக் கண் தேடுதை என 2009 இல் வெளியிட்டனர்.[7]

உதயா நடித்த 2011 இல் ரா ரா திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. ஆனால் வசூல் செல்லவில்லை. நடிகை செரீனுடன் நடித்த பூவா தலையா திரைப்படம் சுமாரான வரவேற்பு பெற்றது. தலைவா திரைப்படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்தார்.

திரைப்பட வரலாறு

ஆண்டு திரைப்படம் பங்கு குறிப்புக்கள்
1998 இனி எல்லம் சுகமே அங்கீகரிக்கப்படாத பங்கு
2000 திருநெல்வேலி Satha
2001 கலகலப்பு கர்ணன்
2002 ஷகலகா பேபி உதய் விருந்தினர் தோற்றம்
2009 உன்னைக் கண் தேடுதே ருத்ரா
2011 பூவா தலையா கொடுவா
ரா ரா பாரதி
2013 தலைவா வீடியோ குமார்
2015 அவி குமார் குமார்
2018 உத்தரவ் மகாராஜா ரவி மேலும் தயாரிப்பாளர்

குறிப்புகள்

  1. http://articles.timesofindia.indiatimes.com/2010-10-05/news-interviews/28213046_1_vijay-mani-ratnam-film[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-05-30. பார்க்கப்பட்ட நாள் 2020-02-26.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-05-30. பார்க்கப்பட்ட நாள் 2020-02-26.
  4. https://web.archive.org/web/20040824132434/http://www.chennaionline.com/location/poonguyile.asp
  5. http://www.indiaglitz.com/channels/tamil/article/13881.html
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-04-27. பார்க்கப்பட்ட நாள் 2020-02-26.
  7. http://www.indiaglitz.com/channels/tamil/article/28201.html
"https://tamilar.wiki/index.php?title=உதயா_(நடிகர்)&oldid=21527" இருந்து மீள்விக்கப்பட்டது