ஈரோடு புத்தக திருவிழா
ஈரோடு புத்தகத் திருவிழா (Erode Book Festival) என்பது தமிழ்நாட்டின் ஈரோட்டில், ஒவ்வொரு ஆண்டும் ஏற்பாடு செய்யப்படும் புத்தகக் கண்காட்சியாகும். மக்கள் சிந்தனைப் பேரவை என்ற சமூக அமைப்பால் இத்திருவிழா ஏற்பாடு செய்யப்படுகிறது. தமிழ் நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய புத்தகத் திருவிழாவாக சென்னை புத்தகத் திருவிழாவிற்கு அடுத்து இடத்தைப் பெற்றுள்ளது.[1][2]
கண்காட்சியின் உருமாற்றமே கலாச்சார விழா
ஈரோடு புத்தக திருவிழா 12 நாள் நிகழ்ச்சியாக நடைபெறுகிறது. பல்வேறு புத்தக வெளியீட்டாளர்கள், வெளியிட்ட புத்தகங்களை விற்பனைக்குக் காட்சிப்படுத்தப்படுவது மட்டுமல்லாது, சிறந்த பேச்சாளர்களின் மேடைச் சொற்பொழிவுகள், ஆராய்ச்சியாளர்களையும் புத்தக வெளியீட்டாளர்களையும் சிறப்பித்தல், பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் எனப் பல்வேறு நிகழ்ச்சிகள் விழாவில் நடைபெறுகின்றன.
கண்காட்சி நடைபெறும் இடம் மற்றும் காலம்
பொதுவாக ஒவ்வோர் ஆண்டும் சூலை மாதத்தின் கடைசி வாரம் முதல் ஆகத்து மாதத்தின் மூன்றாவது வாரம் ஆகியவற்றிற்கு இடையேயுள்ள எதாவது 12 நாட்களுக்கு இத்திருவிழா நடைபெறும். ஈரோடு, வ.உ.சி. (V.O.C.) பூங்கா அருகில் உள்ள நகராட்சி மைதானத்தில் வழக்கமாக நடைபெறுகிறது. 230 புத்தக வெளியீட்டாளர்கள் பங்கு கொண்டு கடைகளை அமைக்கின்றனர். புத்தகத் திருவிழா மூலம் சராசரியாக ஆறு கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்படுகிறது. கண்காட்சி காலை 11 மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும். புத்தகத் திருவிழாவிற்கு அனுமதி இலவசம்.[3][4][5]
பிரபலங்கள் பங்கேற்பு
கலாச்சார விழாவின் ஒரு பகுதியாக, பல்வேறு பிரபலங்கள் வெவ்வேறான தலைப்புகளில் பேச இங்கு அழைக்கப்படுகின்றனர். இந்தியாவின் முன்னாள் சனாதிபதியான டாக்டர்.ஏ.பி. ஜே. அப்துல் கலாம் இந்த விழாவில் பங்கேற்று இரண்டு முறை உரையாற்றியுள்ளார். நடிகர் சிவகுமார், இசையமைப்பாளர் இளையராஜா, புஷ்பவனம் குப்புசாமி,சுகி சிவம்,சாலமன் பாப்பையா, போன்ற பிற பிரபலங்களும் இவ்விழாவில் அடிக்கடி பங்கேற்பவர்களாவர். [6][7]
ஜி. டி. நாயுடு விருது
2016 ஆம் ஆண்டில், புத்தக விழாவின் ஒரு பகுதியாக, அறிவியல் துறையில் இளம் ஆராய்ச்சியாளர்களை கௌரவிப்பதற்காக ஜி. டி. நாயுடு விருது உருவாக்கப்பட்டது. மேலும் இந்த விருதுக்கு இந்திய கண்டுபிடிப்பாளரும் பொறியியலாளருமான கோபால்சாமி துரைசாமி நாயுடுவின் பெயரிடப்பட்டுள்ளது. ஆராய்ச்சி செய்யும் இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக இவ்விருது வழங்கப்படுகிறது. விருதுடன் ஒரு லட்சம் ரொக்கப்பணமும் வழங்கப்படுகிறது. [8]
ஈரோடு புத்தக திருவிழா -2017
ஈரோடு புத்தக கண்காட்சியின் 13 ஆவது பதிப்பு 2017 ஆகத்து மாதம் நான்காம் தேதி முதல் 2017 ஆகத்து 15 ஆம் தேதி வரை 12 நாட்களுக்கு வ.உ.சி. (V.O.C.) பூங்கா அருகே உள்ள நகராட்சி மைதானத்தில் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது. .[9]
குறிப்பு
மேற்கோள்கள்
- ↑ "Erode book festival from July 31". தி இந்து. http://www.thehindu.com/news/national/tamil-nadu/erode-book-festival-from-july-31/article7454250.ece. பார்த்த நாள்: 24 December 2016.
- ↑ "Erode book festival from July 31". தி இந்து. http://www.thehindu.com/news/national/tamil-nadu/Book-festival-from-August-5/article14546383.ece. பார்த்த நாள்: 24 December 2016.
- ↑ "வ.உ.சி. பூங்கா மைதானத்தில் 12 நாட்கள் நடைபெறும் ஈரோடு புத்தகத் திருவிழா 31–ந் தேதி தொடக்கம்". Daily Thanthi. http://www.dailythanthi.com/News/Districts/Erode/2015/07/22023228/Vauci-Park-grounds--Erode-Book-Festival-will-be-held.vpf. பார்த்த நாள்: 24 December 2016.
- ↑ "Good response to book festival". தி இந்து. http://www.thehindu.com/news/national/tamil-nadu/Good-response-to-book-festival/article14556762.ece. பார்த்த நாள்: 24 December 2016.
- ↑ "Erode book festival from August 5". Live Chennai. http://www.livechennai.com/detailnews.asp?catid=9&newsid=28254. பார்த்த நாள்: 24 December 2016.
- ↑ "70s actor has reinvented himself as an interpreter of epics". Times of India. http://timesofindia.indiatimes.com/india/70s-actor-has-reinvented-himself-as-an-interpreter-of-epics/articleshow/50578476.cms. பார்த்த நாள்: 24 December 2016.
- ↑ "Ilaiyaraja inaugurating the Erode Book fair". Kollytalk இம் மூலத்தில் இருந்து 25 டிசம்பர் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161225075743/http://www.kollytalk.com/cinenews/maestros-songs-enthrall-move-erode-audiences-166604.html/attachment/ilaiyaraja-inaugurating-the-erode-book-fair. பார்த்த நாள்: 24 December 2016.
- ↑ "IISER professor wins G.D. Naidu Young Scientist Award". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/IISER-professor-wins-G.D.-Naidu-Young-Scientist-Award/article14574904.ece. பார்த்த நாள்: 24 December 2016.
- ↑ "Schedule of 13th Erode Book Festival". Erode Book Festival இம் மூலத்தில் இருந்து 9 அக்டோபர் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161009053348/http://erodebookfestival.com/images/ind123.jpg. பார்த்த நாள்: 24 December 2016.