இளவேனில், எழுத்தாளர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

இளவேனில் (இறப்பு: 2, சனவரி. 2021[1]) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு தமிழ் எழுத்தாளர், திரைக்கதை ஆசிரியர், ஓவியர், திரைப்பட இயக்குநர், பத்திரிக்கையாசிரியர் ஆவார்.[2]

வாழ்க்கை

இளவேனில் தமிழ்நாட்டின், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்தவர் ஆவார். இவர் தன் 14 வயதில் வீட்டைவிட்டு சென்னைக்கு ஓடிவந்துவிட்டார்.[3] பொது உடைமை சிந்தனையில் பற்றுகொண்ட எழுத படிக்கத் தெரியாத ஒரு சரக்குந்து ஓட்டுநருக்கு கார்ல் மார்க்சு, மாக்சிம் கார்க்கி ஆகியோரின் நூல்களை படித்துக் காட்டியபோது இவருக்கு இலக்கியம் அறிமுகமானது. இவர் கார்க்கி, பிரகடனம், நயன்தாரா ஆகிய சிற்றிதழ்களை நடத்தியுள்ளார். மேலும் நந்தன், மக்கள் செய்தி, தாய்நாடு, தென்னகம் போன்ற இதழ்களில் பத்திரிக்கையாளராக இருந்துள்ளார்.[4]

பாரதி குறித்த பார்வை

இவர் சுப்பிரமணிய பாரதிபாரதியை அங்கீகரிக்கவில்லை. இந்தியாவின் சகல வர்க்கங்களும் தீபாராதனை நடத்துகிற மகாமகா-மகாகவி பாரதியின் இமாலயப் படைப்புக் கூட, பாட்டாளி வர்க்கத்திற்காக இப்போதுதான் பேனா பிடிக்கிற ஒரு நர்ஸ்ரிக் கவிஞனின் நாலாந்தரக் கவிதைக்கு முன் குப்பை என்று மிகுந்த ஆரவாரத்துடன் சொல்வோம் என்றும் 1972-ல் இளவேனில் எழுதியுள்ளார்.[5]

இயக்கிய திரைப்படங்கள்

மறைவு

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்த இளவேனில் மாரடைப்பு காரணமாக 02 சனவரி 2021 அன்று காலமானார்.

எழுதிய நூல்கள்

  • ஆத்மா என்றொரு தெருப்பாடகன்
  • இங்கேயும் ஒரு பூ மலரும் (புதினம்)
  • இளவேனில் கவிதைகள்
  • ஒரு ரஷ்ய மூளை எனபதாலா
  • எனது சாரளத்தின் வழியே
  • கவிதா
  • காருவகி (வரலாற்று புதினம்)
  • கார்கி என்னும் புயற்பறவை
  • புயலுக்கு இசை வழங்கும் பேரியக்கம்
  • புரட்சியும், எதிர்ப்பு புரட்சியும்
  • வாளோடும் தேன் சிந்தும் மலர்களோடும்
  • 25 வெண்மணித் தெரு

குறிப்புகள்

  1. எழுத்தாளர் இளவேனில் மறைவு- நக்கீரன் ஆசிரியர் அஞ்சலி!, nakkheeran.in, 2021 சனவரி 3
  2. எழுத்தாளர் இளவேனில் மறைவு.. பேரா. சுப. வீரபாண்டியன் ஆழ்ந்த இரங்கல், tamil.oneindia.com. 2021 சனவரி 3
  3. வாழ்க்கை அழைக்கிறது 04: இரும்பல்ல; காந்தம்!, கட்டுரை, இளவேனில், 2017 திசம்பர் 7
  4. இளவேனில்: சிவந்து கருத்த சிந்தனை நதி!, கட்டுரை, மேனா உலகநாதன், இந்து தமிழ் (நாளிதழ்), 2021 சனவரி 5
  5. வல்லிக்கண்ணன் (2004). "தமிழில் சிறு பத்திரிகைகள்". நூல். மணிவாசகர் பதிப்பகம். pp. 168–174. பார்க்கப்பட்ட நாள் 13 நவம்பர் 2021.
  6. எழுத்தாளர் இளவேனில் மரணம், indianexpress.com, 2021 சனவரி 3
"https://tamilar.wiki/index.php?title=இளவேனில்,_எழுத்தாளர்&oldid=3396" இருந்து மீள்விக்கப்பட்டது