இலியானா டி 'குரூஸ் (நடிகை)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
இலியானா டி 'குருஸ்
Ileana Dcruz at the launch of 'Barfi!' promo 08.jpg
பர்ஃபி விளம்பர வெளியீட்டு நிகழ்ச்சியில் இலியானா டி 'குருஸ் ஜூலை 2012.
பிறப்பு1 நவம்பர் 1987 (1987-11-01) (அகவை 37)[1][2]
மும்பை, மகாராஷ்டிரா,இந்தியா
இருப்பிடம்ஐதராபாத், ஆந்திர பிரதேசம்,இந்தியா
பணிநடிகை, வடிவழகி
செயற்பாட்டுக்
காலம்
2006–நிகழ்காலம்

இலியானா டி'குரூஸ் (Ileana D'Cruz, பிறப்பு:1 நவம்பர் 1987) என்பவர் இந்திய-போர்த்துகீசிய நடிகை ஆவார். இவர் பெரும்பாலும் இந்தி, தெலுங்கு, தமிழ்த் திரைப்படங்களில் நடிக்கிறார். ஆரம்பத்தில் வடிவழகியாக தனது தொழில் வாழ்க்கையை தொடங்கினார். டி'குரூஸ் 2006 ஆம் ஆண்டு தேவதாசு என்ற தெலுங்கு மொழித் திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார், இது வணிக ரீதியாக வெற்றி பெற்றது, இத்திரைப்படம் இவருக்கு சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதைப் பெற்று தந்தது. [3]

போக்கிரி (2006), ராக்கி (2006), முன்னா (2007), ஜல்சா (2008), கிக் (2009), ஜூலாய் (2012) உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் தெலுங்கு திரைப்படத்துறையில் முன்னணி நடிகையாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். இவர் போக்கிரி, ஜல்சா, கிக் ஆகியத் திரைப்படங்களுக்காக தெலுங்கு பிலிம்பேர் சிறந்த நடிகை விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். [4] இவர் தமிழ் திரைப்படத்துறையில் கேடி (2006) திரைப்படம் மூலம் அறிமுகமானார்.

2012 இல் அனுராக் பாசு இயக்கிய பர்ஃபி! திரைப்படம் மூலம் இந்தி திரைத்துறையில் அறிமுகமானார், இத்திரைப்படத்திற்காக இவர் சிறந்த பெண் அறிமுகத்திற்கான பிலிம்பேர் விருதை வென்றார். [5] மெயின் தேரா ஹீரோ (2014), ருசுடோம் (2016), ரெய்டு (2018) போன்ற வெற்றிகரமான திரைப்படங்களில் இவர் முன்னணிப் பெண்மணியாக நடித்துள்ளார். இவர் தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், பிலிம்பேர் விருதுகள் உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார். [6]

வாழ்க்கை

1 நவம்பர் 1987 அன்று பம்பாயில் (இப்போது மும்பை) மாகிமில் ஒரு கத்தோலிக்க தந்தைக்கும் முசுலீம் தாய்க்கும் பிறந்தார். [7] [8] [9] இவர் ஒரு இறைமறுப்பாளர். [10] இவருக்கு 10 வயதாக இருந்தபோது இவரது குடும்பம் கோவாவின் பர்ராவுக்கு குடிபெயர்ந்தது. [11]

தமிழ் படம்

2006 ஆம் ஆண்டு கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான இவர் பின்பு பெரிதாக தமிழ் படங்களில் நாட்டம் செலுத்தவில்லை இருந்தும் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த நண்பன் திரைப்படத்தில் நடித்துள்ளார்.[12]

திரைப்படங்கள்

ஆண்டு படம் கதாபாத்திரம் மொழி குறிப்புகள்
2006 தேவதாசு பானுமதி கடம்ராஜு தெலுங்கு சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது - தென்
போக்கிரி சுருதி தெலுங்கு
கேடி ஆர்த்தி தமிழ்
கதற்நாக்(Khatarnak) நக்‌ஷத்திரா தெலுங்கு
ராக்கி திரிபுரா தெலுங்கு
2007 முன்னா நிதி தெலுங்கு
ஆட்டா(Aata) சத்யா தெலுங்கு
2008 ஜல்சா பாக்யமதி தெலுங்கு பரிந்துரைக்கப்பட்டார்—சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது-தெலுங்கு
பலே தொங்கலூ(Bhale Dongalu) ஜோதி தெலுங்கு
2009 கிக்(Kick) நைனா தெலுங்கு பரிந்துரைக்கப்பட்டார்—சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது-தெலுங்கு
ரேசிபோ(Rechipo) கிருஷ்ணா வேணி தெலுங்கு
சலீம் சத்யவதி தெலுங்கு
2010 உடுகா உடுகி(Huduga Hudugi) சிறப்பு தோற்றம் கன்னடம்
2011 சக்தி ஐஸ்வர்யா தெலுங்கு
நேனு நா ராக்‌ஷசி(Nenu Naa Rakshasi) மீனாட்சி,
சிராவ்யா
தெலுங்கு
2012 நண்பன் ரியா தமிழ்
ஜூலை(Julai) மது தெலுங்கு
தேவுடு சேசினா மனுசுலு(Devudu Chesina Manushulu) இலியானா தெலுங்கு
பர்ஃபி சுருதி கோஷ் / செங்குப்தா இந்தி சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது-ஹிந்தி
பரிந்துரைக்கப்பட்டார் — சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருது
2013 பதா போஸ்டர் நிக்லா ஹீரோ(Phata Poster Nikla Hero) இந்தி
2014 மேய்ன் தேரா ஹீரோ (Main Tera Hero) சுனைனா இந்தி
ஹேப்பி என்டிங் (Happy Ending) ஆன்ச்சல் ரெட்டி இந்தி
2015 கிக் 2 (Kick 2) நைனா தெலுங்கு சிறப்புத் தோற்றம்

மேற்கோள்கள்

  1. Debut Deck: Ileana D'Cruz, Slide 2
  2. Social Post. "Ileana D Cruz - Movies, Photos, Filmography, Biography, Wallpapers, Videos, Fan Club". entertainment.oneindia.in இம் மூலத்தில் இருந்து 2012-11-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121125123725/http://entertainment.oneindia.in/celebs/ileana-d-cruz.html. பார்த்த நாள்: 2012-09-18. 
  3. "Traditional Beauty Ileana D'Cruz!". 5 March 2023 இம் மூலத்தில் இருந்து 27 August 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190827152228/https://www.indiatoday.in/visualstories/entertainment/traditional-beauty-ileana-dcruz-25121-05-03-2023. 
  4. rediff.com: 'Acting was never my dream' பரணிடப்பட்டது 4 மார்ச் 2016 at the வந்தவழி இயந்திரம். Specials.rediff.com. Retrieved on 28 May 2011.
  5. "How Ileana D'Cruz has made her mark in Bollywood with Barfi!" (in en). 19 September 2012 இம் மூலத்தில் இருந்து 15 January 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210115201749/https://www.firstpost.com/entertainment/how-ileana-dcruz-has-made-her-mark-in-bollywood-with-barfi-461227.html. 
  6. "Ileana D'Cruz: The idea of dropping the jacket in Baadshaho was mine". Coleman & Co. Ltd.. 27 September 2013 இம் மூலத்தில் இருந்து 21 June 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140621081636/http://timesofindia.indiatimes.com/entertainment/bollywood/news-interviews/No-one-can-contain-me-Ileana-DCruz/articleshow/23101020.cms?referral=PM. 
  7. "Happy Birthday Ileana D'Cruz: Barfi to Raid, 5 MUST watch movies of the actress". 21 December 2012 இம் மூலத்தில் இருந்து 1 November 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221101043706/https://zeenews.india.com/people/happy-birthday-ileana-dcruz-barfi-to-raid-5-must-watch-movies-of-the-actress-2529360.html. 
  8. "Ileana D'Cruz turns 30: Let the birthday girl and her beau Andrew Kneebone give you relationship goals" (in en) இம் மூலத்தில் இருந்து 12 October 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201012030130/https://www.indiatoday.in/amp/movies/photo/happy-birthday-ileana-dcruz-boyfriend-andrew-kneebone-photos-1079928-2017-11-01. 
  9. Gupta, Priya (27 September 2013). "No one can contain me: Ileana D'Cruz". Bennett, Coleman & Co. Ltd. இம் மூலத்தில் இருந்து 21 June 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140621081636/http://timesofindia.indiatimes.com/entertainment/bollywood/news-interviews/No-one-can-contain-me-Ileana-DCruz/articleshow/23101020.cms?referral=PM. 
  10. "'Rustom' actress Ileana D'Cruz confesses of being an atheist". 3 August 2016 இம் மூலத்தில் இருந்து 18 January 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230118024803/https://www.indiatvnews.com/entertainment/bollywood-rustom-actress-ileana-d-cruz-confesses-of-being-an-atheist-342238. 
  11. "Bollywood Calling Ileana D'Cruz!" இம் மூலத்தில் இருந்து 17 December 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131217090244/http://beta.vivagoaonline.com/bollywood-calling-ileana-dcruz/. 
  12. "Will Vijay's Nanban touch the Rs. 100 Crore mark?". Sify.com. 21 January 2012. http://www.sify.com/movies/will-vijay-s-nanban-touch-the-rs-100-crore-mark-news-tamil-mbvkqKbfhia.html?scategory=tamil. பார்த்த நாள்: 25 January 2012. 

வெளி இணைப்புகள்