இலட்சுமி குமாரி சுந்தாவத்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

இலட்சுமி குமாரி சுந்தாவத் (Lakshmi Kumari Chundawat)(24 சூன் 1916 - 24 மே 2014) என்பவர் இராசத்தானைச் சேர்ந்த இந்திய எழுத்தாளர் மற்றும் அரசியல்வாதி ஆவார்.

இலட்சுமி குமாரி சுந்தாவத்
இலட்சுமி குமாரி சுந்தாவத்
இயற்பெயர்/
அறியும் பெயர்
இலட்சுமி குமாரி சுந்தாவத்
பிறந்ததிகதி (1916-06-24)24 சூன் 1916
பிறந்தஇடம் தியோகார், இராசத்தான், மேவார்
இறப்பு 24 மே 2014(2014-05-24) (அகவை 98)
பணி ஆய்வாளர், அரசியல்வாதி, எழுத்தாளர்
தேசியம் Indian
குறிப்பிடத்தக்க விருதுகள் பத்மசிறீ
துணைவர் ராவாத் தேஜ் சிங், ராவாதார்

வாழ்க்கை

இலட்சுமி குமாரி 1916ஆம் ஆண்டு சூன் 24ஆம் தேதி மேவாரில் உள்ள தியோகரில் பிறந்தார்.[1] இவர் இராசத்தானில் உள்ள மேவார் சமஸ்தானத்தின் முதன்மையான திகானாசு (தோட்டங்கள்) தியோகரின் ராவத் விஜய் சிங்கின் மூத்த மகள் ஆவார்.[2] இவர் 1934-ல் ராவத்சரின் ராவத் தேஜ் சிங்கை மணந்தார். இவர் 24 மே 2014 அன்று 97 வயதில் இறந்தார்.[3]

அரசியல் வாழ்க்கை

இராணி லட்சுமி குமாரி இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியில் சேர்ந்தார். 1962 முதல் 1971 வரை தியோகரிலிருந்து இராசத்தான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.  இவர் ஏப்ரல் 1972 முதல் ஏப்ரல் 1978 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். இவர் இராசத்தான் பிரதேச காங்கிரசு குழுவின் தலைவராகவும் இருந்தார்.[4]

புத்தகங்கள்

  இராணி இலட்சுமி குமாரியின் எழுதிய புத்தகங்கள்:

  • பர்தாவிலிருந்து மக்களுக்கு: பத்மசிறீ இராணி லட்சுமி குமாரி சுண்டாவத்தின் நினைவுகள்
  • ராஜஸ்தானின் நாட்டுப்புறக் கதைகள்
  • சம்ஸ்கிருதிகா ராஜஸ்தான்
  • முமல்
  • தேவநாராயண் பக்தாவத் மகாகதா
  • முமல்
  • லெனின் ரி ஜீவானி
  • இந்துகுஷ் கே உஸ் பார்
  • சாந்தி கே லியே சங்கர்ஷா
  • அந்தர்த்வனி
  • ராஜஸ்தான் கே ரிடீ ரிவாஜ்
  • के रे चकवा बात
  • हंकारो दो सा
  • கஜபன்
  • மஞ்சள் இரவு
  • பாபூஜி ரி பாத்

மேற்கோள்கள்