இலங்கையின் நிறைவேற்றுப் பேரவை
இலங்கையின் நிறைவேற்றுப் பேரவை Executive Council of Ceylon | |
---|---|
வகை | |
காலக்கோடு | |
நிறைவேற்றுப் பேரவை | பிரித்தானிய இலங்கை |
தோற்றம் | மார்ச் 13, 1833 |
முன்னிருந்த அமைப்பு | எதுவுமில்லை |
பின்வந்த அமைப்பு | இலங்கையின் அமைச்சரவை |
கலைப்பு | 1931 |
தலைமையும் அமைப்பும் | |
இலங்கையின் பிரித்தானிய ஆளுநர்கள் | சேர் ரொபர்ட் வில்மட்-ஹோல்ட்டன் - ஹென்றி மொங்க்-மேசன் மூர், |
உறுப்பினர்கள் | 6 பேர் (ஆளுநர் உட்பட) |
தேர்தல் | |
தலைமையகம் |
இலங்கையின் நிறைவேற்றுப் பேரவை (Executive Council of Ceylon) என்பது கோல்புறூக்-கேமரன் ஆணைக்குழுவின் பரிந்துரையின் படி, பிரித்தானிய இலங்கையில் (இன்றைய இலங்கை) பிரித்தானிய காலனித்துவ நிருவாகத்தினால் 1833, மார்ச் 13 ஆம் நாள் இலங்கை சட்டவாக்கப் பேரவையுடன் இணைந்து அமைக்கப்பட்ட ஒரு நிறைவேற்றுப் பேரவை ஆகும்.
இப்பேரவை ஆளுனரின் தலைமையின் கீழ் ஆளுனரினால் நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய குழுவாகும். காலனித்துவச் செயலாளர், சட்டமா அதிபர், கணக்காளர் நாயகம், பொருளாளர், மற்றும் இலங்கைக்கான படைத்துறை அதிகாரி ஆகிய ஐந்து அரசுப் பதவிகளில் உள்ளோர் இப்பேரவியில் உறுப்பினர்களாக இருந்தனர். நிறைவேற்றுப் பேரவை மொத்த இலங்கையின் நிறைவேற்று அதிகாரம், மற்றும் ஆளுநருக்கு ஆலோசனை வழங்கல் போன்ற அலுவல்களைக் கவனித்தது. முதலாவது மானிங் சீர்திருத்தத்தை அடுத்து மூன்று அதிகாரபூர்வமற்ற உறுப்பினர்களும் நிறைவேற்றுப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
1947 ஆம் ஆண்டில் இலங்கை டொமினியனாக கொண்டுவரப்பட்டதை அடுத்து நிறைவேற்றுப் பேரவை ஒழிக்கப்பட்டு அதற்குப் பதிலாக இலங்கையின் அமைச்சரவை அறிமுகப்படுத்தப்பட்டது.
வெளி இணைப்புகள்
- First taste of representative government
- [1] பரணிடப்பட்டது 2010-12-05 at the வந்தவழி இயந்திரம்