இரா. இரவி
இரா. இரவி (Ra. Ravi) இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு கவிஞராவார்.[1][2] 1963 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். கவிஞர், எழுத்தாளர், விமர்சகர். புதுக்கவிதை, ஐக்கூ,[3] லிமரிக், துளிப்பா என்று பல கவிதை வடிவங்களில் எழுதி வருகிறார். பல கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார். தமிழக அரசின் சுற்றுலாத் துறையில் உதவிச் சுற்றுலா அலுவலராகப் பணியாற்றினார்.
வாழ்க்கைக் குறிப்பு
இராமகிருட்டிணன்-சரோஜினி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். மதுரையில் மேல் நிலைக் கல்வி பயின்றார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் அஞ்சல்வழியில் இளங்கலை வணிகவியல் பயின்று பட்டம் பெற்றார். தமிழ்நாடு அரசு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தில் 1982-ஆம் ஆண்டு முதல் பணிபுரிந்தார். பின் பதவி உயர்வு பெற்று, உதவிச் சுற்றுலா அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
இவரது ஐக்கூ கவிதைகள் பாரதியார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், காமராசர் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக் கழகங்களின் பாடநூல்களில் இடம்பெற்றன.
வெளிவந்த நூல்கள்
- கவிதைச் சாரல் - 1997
- ஹைக்கூ கவிதைகள் - 1998
- விழிகளில் ஹைக்கூ - 2003
- உள்ளத்தில் ஹைக்கூ - 2004
- என்னவள் - 2005
- நெஞ்சத்தில் ஹைக்கூ - 2005
- கவிதை அல்ல விதை - 2007
- இதயத்தில் ஹைக்கூ - 2007
சிறப்புகள்
- 26-01-92 குடியரசு தின விழாவில் சிறந்த அரசுப் பணியாளர்களுக்கான விருதினை மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரிடமிருந்து பெற்றுள்ளார்.[சான்று தேவை]
- இலண்டன் சுடரொளி வெளியீட்டுக் கழகம் உலக அளவில் நடத்திய இரண்டு கவிதைப் போட்டிகளில் பரிசு பெற்றுள்ளார்.
- இவரது சில ஹைக்கூ கவிதைகள் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பாட நூலில் இடம் பெற்றுள்ளது.[சான்று தேவை]
- சிறந்த நூலிற்கான பரிசினை புதுவை துணைவேந்தரிடமிருந்து பெற்றுள்ளார்.
- இவரது 100க்கும் மேற்பட்ட ஹைக்கூ கவிதைகளை விஞ்ஞானி நெல்லை சு. முத்து "புத்தாயிரம் "தமிழ் ஹைக்கூ என்ற நூலில் மேற்கோள் காட்டி உள்ளார்.
- இவரது இணையத்தளக் கவிதைகளை சென்னை இலயோலா கல்லூரி மாணவர் இரவிக்குமார் ஆய்வு செய்து ஆய்வேடு சமர்ப்பித்துள்ளார்.
- தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அறிவியல் தமிழ்த்துறை மாணவர் அன்பு ஷிவா இவரது கவிதைகளை ஆய்வு செய்து வருகிறார்.
மேற்கோள்கள்
- ↑ "இணை(த)யத்தில் வாழும் எம் தமிழ்:கவிஞர் இரா.இரவி". தினமணி. https://www.dinamani.com/specials/kavithaimani/2016/Apr/17/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4-1315185.html. பார்த்த நாள்: 31 January 2025.
- ↑ "சுமைகளும் சுகங்களும் :கவிஞர் இரா,இரவி". தினமணி. https://www.dinamani.com/specials/kavithaimani/2017/May/15/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-----%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF--2702721.html. பார்த்த நாள்: 31 January 2025.
- ↑ jeyamohan (2025-01-26). "இரா.இரவி". எழுத்தாளர் ஜெயமோகன். Retrieved 2025-01-31.