இராம சித்தனன்
இராம கிருட்டிண சித்தனன் Rama Krishna Sithanen | |
---|---|
மொரிசியசு துணை பிரதம மந்திரி | |
பதவியில் 5 சூலை 2005 – 5 மே 2010 | |
குடியரசுத் தலைவர் | அனெரூட் ஜக்நாத் |
பிரதமர் | நவின்சந்திரா ராம்கூலம் |
முன்னையவர் | புது அலுவலகம் |
பின்னவர் | பிரவிந்த் ஜக்நாத் |
Finance Minister of Mauritius | |
பதவியில் 5 சூலை 2005 – 5 மே 2010 | |
குடியரசுத் தலைவர் | அனிரூத் சக்நாத் |
பிரதமர் | நவின்சந்திரா ராம்கூலம் |
முன்னையவர் | பிரவிந்த் சக்நாத் |
பின்னவர் | பிரவிந்த் சக்நாத் |
மொரிசியசு நாட்டின் நிதி அமைச்சர் | |
பதவியில் 7 செப்டம்பர் 1991 – 5 திசம்பர் 1995 | |
பிரதமர் | அனிரூத் சக்நாத் |
முன்னையவர் | விசுனு லட்சுமீனராயுது |
பின்னவர் | வசந்த் கே பன்வாரி |
நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 5 சூலை 2005 – 5 மே 2010 | |
முன்னையவர் | சுசில் குசிராம் |
பின்னவர் | சேவியர் லக் துவல் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 21 ஏப்ரல் 1954 மொரிசியசு |
அரசியல் கட்சி | இராணுவ சமூக இயக்கம் மொரிசியசு தொழிலாளர் கட்சி |
பிள்ளைகள் | 3 |
முன்னாள் கல்லூரி | இலண்டன் பொருளியல் பள்ளி |
வேலை | பொருளாதார வல்லுநர் |
இணையத்தளம் | [1] |
இராம கிருட்டிண சித்தனன் (Rama Krishna Sithanen) மொரிசியசு நாட்டின் முன்னாள் நிதி அமைச்சராவார். 1954 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். 1991 முதல் 1995 வரையிலான ஆண்டு காலத்தில் இவர் மொரிசியசு நாட்டின் துணை பிரதம மந்திரியாவும் இருந்துள்ளார். அப்போது சர் அனிரூத் யக்னௌத் மொரிசியசின் பிரதம மந்திரியாக இருந்தார். 2005 முதல் 2010 வரையிலான ஆண்டுக் காலத்தில் பிரதம மந்திரியாக இருந்த நவின் ராம்கூலம் அமைச்சரவையிலும் இவர் இருந்தார் .
பின்னணி மற்றும் கல்வி
முனைவர் சித்தனன் ஒரு நடுத்தரமான குடும்பப் பின்னணியைச் சேர்ந்தவர். வறுமை காரணமாக இவர் சிறு வயதிலேயே பள்ளியை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எனினும், பின்னாளில் தனது படிப்பைத் திரும்பத் தொடர்ந்து இலண்டன் பொருளியல் பள்ளியில் பொருளாதாரத்தில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டங்களைப் படித்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.[1] பின்னர் நிதி அமைச்சராக இவர் ஆணை பெற்றபோது தனது 51 வது வயதில் அரசியலில் முனைவர் பட்டம் பெற்றார். 'மொரிசியசுக்கான மாற்று தேர்தல் முறைகளின் தேர்வு முறை என்பது சித்தனனின் முனைவர் பட்ட ஆய்வறிக்கையாகும் [2] ஆய்வறிக்கை புரூனல் பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
விருதுகள்
மொரியசு நாட்டின் குடியரசுத் தலைவரால் சித்தனன் கௌரவிக்கப்பட்டார் . உயர்ந்த நட்சத்திரத் தகுதி அளிக்கப்பட்டு மிக உயர்ந்த பதவிக்கும் உயர்த்தப்பட்டார். மதிப்பு மிக்க முன்னொட்டுலகளை பெயருக்கு முன்னால் சேர்த்துக் கொள்ளவும் அனுமதிக்கப்பட்டார்.
மேற்கோள்கள்
- ↑ "Archived copy". Archived from the original on 22 July 2011. பார்க்கப்பட்ட நாள் 2009-11-07.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "News and Events - Brunel University London". www.brunel.ac.uk.
புற இணைப்புகள்
- brunel.ac.uk
- தொழிலாளர் கட்சி.மு பரணிடப்பட்டது 2021-07-24 at the வந்தவழி இயந்திரம்