இராமானுச நூற்றந்தாதி வியாக்கியானம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

இராமானுச நூற்றந்தாதி எனப் போற்றப்படும் நூலைத் திருவரங்கத்தமுதனார் என்னும் வைணவர் ‘பிரபன்ன காயத்திரி’ என்னும் பெயரில் பாடினார். இந்த நூலுக்கு மணவாள மாமுனிகளின் மாணவரான அப்பிள்ளை என்பவர் ஒர் உரை எழுதினார். பின்னர் பிள்ளை லோகம் சீயர் என்பவர் விரிவானதோர் உரை எழுதினார். இந்த விரிவுரையே இராமானுச நூற்றந்தாதி வியாக்கியானம் எனப் போற்றப்படுகிறது.

நூலமைதி

  • மேற்கோள்கள் மிகுதியாகத் தரப்பட்டுள்ளன.
  • சிவனைப் பற்றிய குறிப்பு வருமிடங்களில் சிவனை ஏளனமாக எழுதுகிறார். காரணம் நரபலி காபாலியர், சாம்பல் பூசிய பாசுபதர் உருவங்களே அவர் உள்ளத்தில் பதிந்திருந்தன.
  • அனிருத்தனை ‘அனிருத்தாழ்வார்’ என்கிறார்.
இவர் உரைப்பாங்கு
”இனி ப்ராத்தி நிமித்தமாக நீ கிலாசிக்க வேண்டாம் என்கிறார்”
இவர் நயம்பட எழுதிய ஒரு உரைப்பகுதி
”ஈரத்தமிழ் சம்சார தாபமெல்லாம் ஆறும்படியான ஈரப்பாட்டை உடையது, (இந்த நூல்)”

நூலின் காலம் 16ஆம் நூற்றாண்டு.

கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 3, 2005