இராமச்சந்திர தொண்டைமான்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
இராமச்சந்திர தொண்டைமான்
புதுக்கோட்டை அரசர்
ஆட்சிக்காலம்13 சூலை 1839 – 15 ஏப்ரல் 1886
முன்னையவர்இரண்டாம் இரகுநாத தொண்டைமான்
பின்னையவர்மார்த்தாண்ட பைரவ தொண்டைமான்
பிறப்பு(1829-10-20)20 அக்டோபர் 1829
புதுக்கோட்டை சமஸ்தானம், புதுக்கோட்டை
இறப்பு15 ஏப்ரல் 1886(1886-04-15) (அகவை 56)
புதுக்கோட்டை
குழந்தைகளின்
பெயர்கள்
கமலாம்பாயி ராஜம்மணி பாயி சாகிப்,
மங்கலம்பாயி ராஜம்மணி பாயி சாகிப்,
சிவராம ரகுநாத தொண்டைமான்,
பிரகதம்பாள் ராஜம்மணி பாயி சாகிப்
மரபுபுதுக்கோட்டை
தந்தைஇரகுநாத தொண்டைமான்
தாய்இராணி கமலம்பாயி ஆய் சாகிப்

இராஜா ஸ்ரீ பிரகதம்பாதாஸ் இராஜா ராமச்சந்திர தொண்டைமான் பகதூர் (Raja Sri Brahdamba Dasa Raja Ramachandra Tondaiman Bahadur) (20 அக்டோபர் 1829 – 15 ஏப்ரல் 1886) என்பவர் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் அரசராக 1839 சூலை 13 முதல் 1886 ஏப்ரல் 15 வரை இருந்தவர் ஆவார்.

முன்வாழ்கை

புதுக்கோட்டை அரசர் இரகுநாத தொண்டைமானுக்கும் அவரது இரண்டாவது மனைவியான இராணி கமலம்பாள் பாயி சாகிப்புக்கும் மகனாக இராமச்சந்திர தொண்டைமான் 1829 அக்டோபர் 20 அன்று பிறந்தார்.[1] இவர் தனியாக ஆசிரியரிடம் கல்வி பயின்றார். இவரின் தந்தை இறந்ததையடுத்து இவர் தன் ஒன்பதாவது வயதில் அரசராக முடிசூட்டப்பட்டார். இவரு தன் உரிய வயதை அடையும்வரை பிரித்தானிய அரசியல் முகவர் இவரது அரசப் பிரதிநிதியாக இருந்து ஆட்சிப் பொறுப்பை கவனித்து வந்தார்.

ஆட்சி

இராமச்சந்திர தொண்டைமானின் ஆட்சியின் துவக்க ஆண்டுகளில் புதுக்கோட்டையானது அரசப் பிரதிநிதியால் நிர்வகிக்கப்பட்டது. இராமச்சந்திர தொண்டைமான் பொறுப்பை ஏற்றபிறகு, விரைவில் இவருக்கு பிரித்தானிய அரசாங்கத்தால் ஹிஸ் எக்சலன்சி என்ற விருது வழங்கப்பட்டது. 1844 இல் இருந்து இவர் தாமே அரசாண்டு வந்தார்.

இராமச்சந்திர தொண்டைமானின் நிர்வாகமானது ஆடம்பரமானதாகவும், தவறான நிதிநிர்வாகம் கொண்டதாகவும் இருந்தது.[2] இதனால் பிரித்தானிய அரசானது இவரை தண்டிக்கும் விதமாக இவருக்கு அளிக்கப்பட்ட ஹிஸ் எக்சலன்சி என்ற பட்டத்தை 1859 மற்றும் 1873 ஆகிய இருமுறை திரும்பப் பெற்றது. 1878 ஆம் ஆண்டில் சர் டி. மாதவ ராவின் ஆலோசனைப்படி, சென்னை அரசாங்கமானது புதுக்கோட்டை திவானாக திருவிதாங்கூர் முன்னாள் திவானான ஏ. சேசைய்ய சாஸ்திரியை நியமித்தது. சாஸ்திரி ஆட்சி நிர்வாகத்தை சீர்திருத்தம் செய்து தலைநகரான புதுக்கோட்டை நகரை நவீனமயமாக்கினார். நகரத்தில் இருந்த புதுக்குளம் மற்றும் பல்லவன்குளம் ஆகிய குளங்கள் புனரமைக்கப்பட்டன. 1884இல் அஞ்சல் மற்றும் தந்தி அலுவலகம் திறக்கப்பட்டது. சாஸ்திரியின் ஆலோசனையின்படி, இராமச்சந்திர தொண்டைமான் சமஸ்தானத்தில் இருந்த பல இந்து கோயில்களைப் புதுப்பித்தார். 1881 ஆம் ஆண்டு, சாஸ்திரியின் உடன்பாட்டுடன் இராமச்சந்திர தொண்டைமான் அதிகாரப்பூர்வமாக "பிரகதம்பாதாஸ்" என்ற பரம்பரை பட்டத்தை ஏற்றுக்கொண்டார்.[3]

1884 மே 16 அன்று பிரித்தானிய இந்திய அரசியான விக்டோரியா மகாராணி இராமச்சந்திர தொண்டைமானுக்கும் இவரது சந்ததியினருக்கும் ஹிஸ் ஹைனெஸ் என்ற பட்டத்தையும் 11 துப்பாக்கி வேட்டு மரியாதை போடும் நிரந்தர உரிமையை அளித்தார். மேலும் இவர் 1875 ஆம் ஆண்டு வேல்ஸ் இளவரசர் விருதையும், 1877 ஆம் ஆண்டு இந்தியப் பேரரசி தங்க பதக்கத்தையும் பெற்றார்.

குடும்பம்

படிமம்:HH Subbamma Bai Sahib Rani of Pudukottai.jpg
இராமச்சந்திர தொண்டமானின் துணைவியாரும், புதுக்கோட்டை சமஸ்தானத்தின் அரசியான சுப்பம்மா பாயி சாகிப்

இராமச்சந்திர தொண்டைமான் 1845 சூன் 13 அன்று இராணி பிரகதம்பாள் ராஜம்மணி பாயி சாகிப் அவர்களை மணந்தார். இந்த இணையருக்கு இரு மகள்கள்.

  • கமலாம்பாயி ராஜம்மணி பாயி சாகிப் (இ. 24 சனவரி 1903)
  • மங்கலம்பாயி ராஜம்மணி பாயி சாகிப் (இ. 1873)

நெடுவாசல் சமீந்தாரின் மூத்த மகளான ஜானகி சுப்பம்மாளை இரண்டாவதாக இராமச்சந்திர தொண்டைமான் 1848 ஆகத்து 31 அன்று மணந்தார். இந்த இணையருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் ஆவர்.

  • சிவராம ரகுநாத தொண்டைமான் (இறப்பு 1867)
  • பிரகதம்பாள் ராஜம்மணி பாயி சாகிப் (1852–1903)

இராமச்சந்திர தொண்டைமானின் ஒரை மகனான சிவராம ரகுநாத தொண்டைமான் தன் தந்தைக்கு முன்பே இறந்து விட்டதால். இரமச்சந்திர தொண்டைமான் தன் மூத்தமகளான பிரகதாம்பாயியின் மகனை மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் என்ற பெயரில் தத்தெடுத்துக் கொண்டு. தன் வாரீசாக ஆக்கினார்.

இசையமைப்பாளர்

இராமச்சந்திர தொண்டமான் அவரது அரண்மனையில் கர்நாடக இசைக் கச்சேரிகளை ஆதரித்து வளர்த்தார்.[4] இராமச்சந்திர தொண்டமானும், தன்னைப் பொறுத்தவரையில் ஒரு சிறந்த இசையமைப்பாளர் ஆவார். மேலும் இவர் குறவஞ்சி நாடகத்துக்கு இசையமைத்து அதை விராலிமலை முருகன் கோயிலில் அரங்கேற்றினார்.[5]

குறிப்புகள்

  1. "Pudukkottai 3". Tondaiman Dynasty. Christopher Buyers.
  2. "The architect of Pudukkottai". The Hindu. 9 April 2000 இம் மூலத்தில் இருந்து 7 அக்டோபர் 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101007212621/http://www.hinduonnet.com/2000/04/09/stories/1309078a.htm. 
  3. Waghorne, Joanne Punzo (1989). "From Robber Baron to Royal Servant?". In Alf Hiltebeitel (ed.). Criminal Gods and Demon Devotees: Essays on the Guardians of Popular Hinduism. SUNY PRESS. pp. 405–426. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-88706-981-9.
  4. Kuppuswamy, Gowri; Hariharan, Muthuswamy (1982). Glimpses of Indian music. Sundeep. p. 79.
  5. Rajagopalan, N. (1992). "Cradles of Music II". Another Garland: Biographical Dictionary of Carnatic Composers & Musicians, Book II. Carnatic Classicals. pp. 77–78.