இரங்கல் மூன்று
Jump to navigation
Jump to search
இரங்கல் மூன்று என்னும் நூல் சிற்றம்பல நாடிகள் என்னும் சைவப் பெரும்புலவரால் எழுதப்பட்டது. காலம் 14-ஆம் நூற்றாண்டு.
செல்காலம், நிகழ்காலம், வருங்காலம் என்பன மூன்று காலங்கள். இந்தக் காலப் பேறுகளை எண்ணி அவற்றைப் பெறவில்லையே என ஏங்குவதாப் பாடல்கள் அமைந்துள்ளன.
- செல்காலத்திரங்கல் பகுதியில் 54 கண்ணிகள் உள்ளன.
பாடல் எடுத்துக்காட்டு:
- பொங்கும் பவத்தொடர்ச்சி போக்குதற்கு முன்னமே
- கங்கைநகர் மெய்கண்டான் காற்கமலம் பெற்றிலமே
- மெய்கண்டான் என்பது இவரது ஆசிரியர் பெயர்
- நிகழ்காலத்திரங்கல் பகுதியில் 50 கண்ணிகள் உள்ளன.
பாடல் எடுத்துக்காட்டு:
- ஆகம சீலரைப் பாரீர் அம்பலவாணரைப் பாரீர்
- ஏகன் அனேகனைப் பாரீர் இன்ப உருவனைப் பாரீர்
- வருங்காலத்திரங்கல் பகுதியில் 49 கண்ணிகள் உள்ளன.
பாடல் எடுத்துக்காட்டு:
- நீங்காத பேரறிவில் நீங்காமல் ஒன்றுபட்டே
- ஆங்காரம் தீர அடங்குவதும் எக்காலம்
கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினானகாம் நூற்றாண்டு, 2005