இடிந்தகரை

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

இடிந்தகரை (Idinthakarai), இந்தியாவின் திருநெல்வேலி மாவட்டத்தின் இராதாபுரம் வட்டத்தில் உள்ள இராதாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள விஜயாபதி ஊராட்சியில் அமைந்த கடற்கரை மீனவ கிராமம் ஆகும். இந்த மக்கள் பரதவர் இனத்தை சார்ந்தவர்கள். இக்கிராமம் அருகே கூடங்குளம் அணுமின் நிலையம் உள்ளது.

அமைவிடம்

விஜயாபதி ஊராட்சியில் உள்ள இடிந்தகரை கிராமம், இராதபுரத்திற்கு தெற்கே 12 கி.மீ. தொலைவிலும், கன்னியாகுமரிக்கு வடகிழக்கே 27 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

தொழில், போக்குவரத்து & மக்கள்

இக்கிராம மக்களின் முக்கியத் தொழில் கடலில் மீன் பிடித்தலாகும். இடிந்தகரையிலிருந்து இராதாபுரம், திருநெல்வேலி, வள்ளியூர், கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடிக்கு நேரடி பேருந்து வசதிகள் உள்ளது. இடிந்தகரையில் 2 தொடக்கப் பள்ளிகளும், 1 மேல்நிலைப் பள்ளியும் மருத்துவமனை ஒன்றும் உள்ளது. இக்கிராம மக்களில் பெரும்பாலோர் உரோமன் கத்தோலிக்கர்கள் ஆவர். இடிந்தகரை கிராமம் கடல்மட்டத்திலிருந்து 3 அடி உயரத்தில் உள்ளது.

போராட்டங்கள்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=இடிந்தகரை&oldid=270395" இலிருந்து மீள்விக்கப்பட்டது