இசையாயிரம்

இசையாயிரம் என்னும் நூலைப்பற்றித் தமிழ்நாவலர் சரிதை [1] என்னும் நூலில் ஒரு குறிப்பு வருகிறது. அந்தக் குறிப்பு

ஆடுவதும் செக்கே அளப்பதுவும் எண்ணெயே
கூடுவதும் சக்கிலியக் கோதையே – நீடுபுகழ்
கச்சிச்செப் பேட்டில் கணிக்குங்கால் செக்கார்,தாம்
உச்சிக்குப் பின்புகார் ஊர்.
  • செட்டிகள் மேல் இசையாயிரம் பாடியபோது, புகார் தங்களுக்கு ஊர் என்று பாடச்சொல்ல, சயங்கொண்டார் பாடியது

மேலே கண்ட பாடலும் குறிப்பும் தமிழ்நாவலர் சரிதையில் உள்ளன.

  • கச்சிச் செப்பேடு என்பது செக்கார் ஒழுகவேண்டிய விதிகள் பற்றி அரசாணையோடு பிறந்த சாசனமாம். திரிபுவன சக்கரவர்த்தி ஸ்ரீ ராஜ ராஜ தேவர்க்கு யாண்டு ஐந்தாவது - - - நாடும் நகரமும் கூடியிருந்து ஸ்ரீ காஞ்சிமா நகரில் செப்பேட்டுப்படி செய்யக்கடவ முறைமை என்று தொடங்கிச் செக்கார் செய்யக் கடவனவும், அல்லாதனவுமான விதிகளைக் கூறும் சாசனம். [2]
பொதுக்கருத்து
  • இசையாயிரம் என்னும் நூல் செக்கார் புகழையோ, பல சாதியினரின் புகழையோ பாடும் நூல் ஆகலாம்.
  • சயங்கொண்டார் காலம் 12-ஆம் நூற்றாண்டு.
  • சயங்கொண்டார் கலிங்கத்துப் பரணி பாடிய பெருமிதம் எங்கே! இப்படிக் கீழ்த்தர பாடல் பாடிய நிலை எங்கே!

கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, பாகம் 1, 2005

அடிக்குறிப்பு

  1. 17-ஆம் நூற்றாண்டு நூல், சரிதை 110
  2. கச்சிச் செப்பேடு பற்றி மு. இராகவையங்கார் எழுதியுள்ள குறிப்பு. (மு. ராகவையங்கார் ஆராய்ச்சித் தொகுதி)
"https://tamilar.wiki/index.php?title=இசையாயிரம்&oldid=17140" இருந்து மீள்விக்கப்பட்டது