ஆயிரம் பொற்காசுகள்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஆயிரம் பொற்காசுகள்
Aayiram Porkaasukal
இயக்கம்இரவி முருகையா
இசைஇயோகன்
நடிப்பு
ஒளிப்பதிவுபானு முருகன்
வெளியீடு15 திசம்பர் 2023 (2023-12-15)
ஓட்டம்125 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஆயிரம் பொற்காசுகள் (Aayiram Porkaasukal) 2023 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ் மொழி நாடகத் திரைப்படமாகும். இரவி முருகையா திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். ஜிஆர்எம் புகைப்பட நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் விதார்த், சரவணன் மற்றும் அருந்ததி நாயர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். திரைப்படம் 15 டிசம்பர் 2023 ஆண்டு திசம்பர் மாதம் 15 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.[1]

நடிகர்கள்

தயாரிப்பு

படத்தின் தயாரிப்பு பணிகள் 2017 ஆம் ஆண்டின் மத்தியில் தொடங்கியது, விதார்த் மற்றும் அருந்ததி நாயர் ஆகியோர்[2][3][4] முக்கிய வேடங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.[5][6] படத்தின் படப்பிடிப்பு 2018 ஆம் ஆண்டு முழுவதும் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் நிறைவடைந்தது,

வெளியீடு மற்றும் வரவேற்பு

2023 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 15 ஆம் தேதியன்று ஆயிரம் பொற்காசுகள் திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் ஒரு விமர்சகர், "நடிகர்களைப் பொறுத்தவரை, சிறப்பாக நடித்து கதாபாத்திரங்களின் தொடர்ச்சி நகைச்சுவையின் தரத்தை உயர்த்துகிறது" என்றார். நடிகர்களைப் பொறுத்தவரை, அனைத்து நடிகர்களும் ஒருமனதாக நன்றாக நடித்துள்ளனர். குறிப்பாக பெரிய வாய்ப்பு கிடைக்காத சின்ன நடிகர்களும் தங்கள் திறமைகளை நிரூபித்துள்ளார்கள் என்றும் குறிப்பிட்டார். தி சவுத் பர்ஸ்ட் இணையத்தில் ஒரு விமர்சகர் இவ்வாறு எழுதினார்; “இரவி முருகையாவின் இயக்கம் ஒரு கர்ச்சிக்கும் நகைச்சுவை அல்ல, ஆனால் அது உங்கள் முகத்தில் புன்னகையைக் கொண்டுவரும் காட்சிகளைக் கொண்டுள்ளது” என்ற போக்கில் விமர்சனங்கள் அமைந்துள்ளன. [7].[8]

மேற்கோள்கள்

  1. "திரை விமர்சனம்: ஆயிரம் பொற்காசுகள்", Hindu Tamil Thisai, 2023-12-25, பார்க்கப்பட்ட நாள் 2023-12-29
  2. "Vidhaarth's next, Ayiram Porkasugal". The New Indian Express.
  3. "Vidaarth's next is with Bala's assistant". The Times of India. July 31, 2018. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/vidaarths-next-is-with-balas-assistant/articleshow/65198692.cms. 
  4. "ஆயிரம் பொற்காசுகள்". www.dailythanthi.com. June 25, 2018.
  5. "Vidharth is getting the midas touch'".
  6. "Arundhathi Nair picks village-based scripts".
  7. "Aayiram Porkaasukal Movie Review : A series of well-acted characters elevates this comedy of errors", The Times of India, பன்னாட்டுத் தர தொடர் எண் 0971-8257, பார்க்கப்பட்ட நாள் 2023-12-29
  8. KR, Manigandan (December 21, 2023). "Aayiram Porkaasukal review: An out-and-out entertainer".

புற இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ஆயிரம்_பொற்காசுகள்&oldid=30569" இருந்து மீள்விக்கப்பட்டது