அருந்ததி நாயர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

அருந்ததி நாயர் (Arundhati Nair) என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் குறிப்பாக தமிழ் மற்றும் மலையாள மொழி படங்களில் பணிபுரிகிறார்.

தொழில்

அருந்ததி தமிழில் பொங்கி எழு மனோகரா (2014), விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும் (2016) ஆகிய படங்களில் முதலில் நடித்தார். விஜய் ஆண்டனியின் மனைவியாக சைத்தான் (2016) படத்தில் நடித்த பிறகு இவர் உரிய அங்கிகாரத்தைப் பெற்றார். [1] [2] [3] [4] டெக்கான் குரோன்சிக்கிள் எழுதிய படத்தின் ஒரு விமர்சனத்தில், "அருந்ததி நாயர் இரண்டு நல்ல கதாபாத்திரங்களில் நடித்துள்ளார், அதற்காக அவர் நல்ல பாராட்டுக்கு தகுதியானவர்" என்று குறிப்பிட்டார். [5] ஒட்டகோரு காமுகன் (2018) படத்தின் வழியாக இவர் மலையாளத்தில் அறிமுகமானார். அப்படத்தில் ஷைன் டாம் சாக்கோ மீது காதல் கொண்டவராக நடித்தார். [4] ஷிரிஷ் சரவணன் ஜோடியாக பிஸ்தா படத்தில் நடிக்கிறார். [6]

திரைப்படவியல்

படங்கள்
ஆண்டு படம் பாத்திரம் மொழி குறிப்புகள்
2014 பொங்கி எழு மனோகரா ஆனந்தி தமிழ்
2016 விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும் நந்தினி தமிழ்
சைத்தான் ஐஸ்வர்யா / ஜெயலட்சுமி தமிழ்
2018 ஒட்டகோரு காமுகன் அன்னி மலையாளம்
2020 கன்னிராசி அவராகவே தமிழ் சிறப்பு தோற்றம்
2020 பிஸ்தா நந்தினி தமிழ்
தொலைக்காட்சித் தொடர்கள்
ஆண்டு தலைப்பு பங்கு அலைவரிசை மொழி
2019-2020 கேரள சமாஜம் ரியா ஏசியநெட் மலையாளம்

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=அருந்ததி_நாயர்&oldid=22344" இருந்து மீள்விக்கப்பட்டது