ஆன்மலிங்க மாலை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

ஆன்மலிங்க மாலை என்னும் நூல் சிவபூசை செய்பவரின் ஐங்களத் தூய்மை [1] பற்றிக் கூறுகிறது.

  1. உடலிலுள்ள ஐம்பொறிகள் (பூதம்)
  2. பூசை செய்யும் இடம் (ஸ்தலம்)
  3. பூசைக்குப் பயன்படுத்தப்படும் பொருள்கள் (திரவியம்)
  4. வழிபாட்டு மொழி (மந்திரம்)
  5. பூசை செய்யப்படும் லிங்கம்

ஆகிய ஐந்தும் தூய்மையானதாக இருக்கவேண்டும் என இந்நூல் விளக்குகிறது.

  • 14 சீர் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம் என்னும் பாடல் 11 கொண்டது இந்த நூல்.

இந்த நூலின் ஆசிரியர் கமலை ஞானப்பிரகாசரின் மாணவர் என்பதை இந்நூலின் பாடல் பகுதிகள் தெரிவிக்கின்றன. இந்த நூலிலுள்ள பாடல்கள் எல்லாம்

--- காட்சம் வைத்தருள்
சிவோக மாயிருக்கச் சிதம்பரனே
கமலைவாழ் தியாகா, காசிவிச்சு வேகா
கயிலாய பதியெனும் குருவே.

என்று முடிகின்றன.

கமலை ஞானப்பிரகாசர் காலம் 1565. எனவே இவரது மாணாக்கர் காலம் 16-ஆம் நூற்றாண்டு எனத் தெளிவாகிறது.

  • பாடலாசிரியரின் ஆன்மலிங்கமாக விளங்குபவர் அவரது ஆசிரியர். அவர்மீது பாடப்பட்டதால் இந்த நூல் ஆன்மலிங்க மாலை எனப் பெயர் பெற்றது.

கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 2, 2005

அடிக்குறிப்பு

  1. பஞ்ச சுத்தி
"https://tamilar.wiki/index.php?title=ஆன்மலிங்க_மாலை&oldid=17138" இருந்து மீள்விக்கப்பட்டது