ஆத்மிகா
இயற்பெயர்/ அறியும் பெயர் |
ஆத்மிகா |
---|---|
பிறந்ததிகதி | 9 பெப்ரவரி 1993 |
பிறந்தஇடம் | கோவை, தமிழ்நாடு, இந்தியா |
பணி | *நடிகை |
தேசியம் | இந்தியர் |
கல்வி | எம். ஓ. பி. வைணவ மகளிர் கல்லூரி |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | மீசைய முருக்கு |
ஆத்மிகா (Aathmika) ஓர் இந்திய நடிகையும், வடிவழகியும் ஆவார். இவர், தமிழ் திரைப்படத் துறையில் பணிபுரிகிறார். மீசைய முருக்கு (2017) திரைப்படத்தில் அறிமுக கதாபாத்திரத்திற்காக அறியப்படுகிறார்.
ஆரம்ப கால வாழ்க்கை
ஆத்மிகா, கோயம்புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர். இவரது குடும்பத்துக்கு திரைப்படத் துறையுடன் எந்த தொடர்பும் இல்லை. இவர், எம். ஓ. பி. வைணவ மகளிர் கல்லூரியில் பட்டப்படிப்பை முடிப்பதற்காக சென்னை சென்றார்.[1] இவருடைய தந்தை 26 ஜூன் 2020 அன்று இறந்து போனார்.[2]
தொழில்
ஆத்மிகா,ராஜிவ் மேனன் இயக்கிய ஒரு குறும்படத்தில் நடித்து தனது நடிப்புத் தொழிலைத் தொடங்கினார். இவரது நடிப்பு ஆர்வம் கல்லூரியிலேயே தொடங்கியது, அங்கு இவர் சில குறும்படங்களின் ஒரு பகுதியாக இருந்தார். மேலும், இரண்டு விளம்பரங்களிலும் தோன்றினார். இவரது சுயவிவரத்தைக் கண்ட ஆதித்யா என்கிற ஹிப்ஹாப் தமிழா இவரை மீசையா முருக்கு என்ற தமிழ் படத்தில் முக்கிய பெண் வேடத்தை வழங்கினார்.[3][4] அந்த படத்தில் ஆத்மிகாவின் நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.[5][6][7][8] துருவங்கள் பதினாறு புகழ் கார்த்திக் நரேன் இயக்கிய இவரது இரண்டாவது படமான நரகாசுரன் திரைப்படத்தில் 2017 இல் நடித்தார்.[9][10] அதே ஆண்டில் இவர் ஓப்போ சென்னை டைம்ஸ் ஃப்ரெஷ் பேஸ் 2017 என்ற போட்டியில் நடுவராக இருந்தார்.[11]
2018இல், காட்டேரி என்ற படத்தில் மூன்று பெண் முன்னணி வேடங்களில் நடிகை ஓவியாவிற்கு பதிலாக நடித்தார்.[12] பிப்ரவரி 2019இல், இவர் நடிகர் உதயநிதி ஸ்டாலினுடன் மு. மாறனின் "கண்ணை நம்பாதே" என்ற பரபரப்புத் திரைபடத்தில் நடித்தார்.[13] செப்டம்பர் 2020இல், இவர், ஆனந்த் கிருஷ்ணன் இயக்கிய அரசியல் படமான "கொடியில் ஒருவன்" படத்தின் நடித்தார்.[14][15]
திரைப்படவியல்
இதுவரை வெளியிடப்படாத படங்களை குறிக்கிறது |
Year | திரைப்படம் | பாத்திரங்கள் | குறிப்புகள் |
---|---|---|---|
2017 | மீசைய முறுக்கு | நிலா | அறிமுக படம் |
2021 | கோடியில் ஒருவன் | வேதாவதி | |
2022 | காட்டேரி | காமினி | |
2023 | கண்ணை நம்பாதே | திவ்யா | |
திருவின் குரல் | பவானி | ||
அறிவிக்கப்படும் | நரகாசூரன் | தாரிணி | படம் வெளியாவதில் தாமதம் |
மேற்கோள்கள்
- ↑ IndiaGlitz Tamil Movies (2 July 2020). "Actress Aathmika வீட்டில் திடீர் சோகம் | Meesaya Murukku, Hip Hop Aadhi, Emotional | Tamil News". YouTube. பார்க்கப்பட்ட நாள் 23 January 2021.
- ↑ Balachandran, Logesh (3 July 2020). "Aathmika pens emotional post on her dad's demise: Never had a chance to say goodbye". இந்தியா டுடே. Archived from the original on 6 September 2020. பார்க்கப்பட்ட நாள் 24 August 2020.
- ↑ Rajendran, Gopinath (20 July 2017). "Aathmika: The accidental heroine". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. Archived from the original on 21 December 2019. பார்க்கப்பட்ட நாள் 23 February 2020.
- ↑ Manohar, Niveda (24 July 2017). "Aathmika is on cloud nine". தி டெக்கன் குரோனிக்கள். Archived from the original on 27 April 2019. பார்க்கப்பட்ட நாள் 21 August 2020.
- ↑ Ramanujam, Srinivasa (21 July 2017). "'Meesaya Murukku' review: Sound engineering". தி இந்து. Archived from the original on 6 September 2020. பார்க்கப்பட்ட நாள் 21 August 2020.
- ↑ "Meesaya Murukku review: Clicks mainly because of real life connect". Sify. 24 July 2017. Archived from the original on 16 January 2020. பார்க்கப்பட்ட நாள் 21 August 2020.
- ↑ "Meesaya Murukku review roundup: Hiphop Tamizha infuses life in this coming of age film". Firstpost. 22 July 2017. Archived from the original on 22 September 2018. பார்க்கப்பட்ட நாள் 21 August 2020.
- ↑ Menon, Thinkal (28 July 2017). "Meesaya Murukku Review {3/5}: The film has ample moments for youngsters to cheer". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 22 July 2017. பார்க்கப்பட்ட நாள் 21 August 2020.
- ↑ Rajendran, Gopinath (31 August 2017). "Aathmika joins Karthick Naren's Naragasooran". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. Archived from the original on 23 February 2020. பார்க்கப்பட்ட நாள் 23 February 2020.
- ↑ Lakshmi, V. (16 March 2020). "Patience is the key to sustaining in the industry". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 17 March 2020. பார்க்கப்பட்ட நாள் 24 March 2020.
- ↑ "Say hello to Chennai's freshest faces". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 7 November 2017. Archived from the original on 16 November 2017. பார்க்கப்பட்ட நாள் 14 June 2021.
- ↑ Subramanian, Anupama (25 April 2018). "Aathmika replaces Oviya in Kaatteri". தி டெக்கன் குரோனிக்கள். Archived from the original on 23 February 2020. பார்க்கப்பட்ட நாள் 23 February 2020.
- ↑ "Udhayanidhi Stalin, Aathmika team up for a crime thriller". தி நியூஸ் மினிட். 6 February 2019. Archived from the original on 23 February 2020. பார்க்கப்பட்ட நாள் 23 February 2020.
- ↑ "Vijay Antony, Aathmika begin shooting for Ananda Krishnan's political thriller". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 2 September 2020. Archived from the original on 6 September 2020. பார்க்கப்பட்ட நாள் 6 September 2020.
- ↑ "Vijay Antony's next titled Kodiyil Oruvan". The News Today. 24 September 2020. Archived from the original on 23 January 2021. பார்க்கப்பட்ட நாள் 23 January 2021.