ஆத்திசூடி திறவுகோல்
Jump to navigation
Jump to search
ஆத்திசூடி திறவுகோல் என்னும் நூல் ஆத்திசூடி நூலின் பெருமையை உணர்ந்து போற்றிப் பாடும் நூல்களில் ஒன்று.
குறுமுனி என்பவரால் செய்யப்பட்டது.
இந்தக் குறுமுனி என்பவர் யார் என விளங்கவில்லை,
அ முதல் ஃ வரை உள்ள ஆத்திசூடி வருக்கக் கோவைக் அடி ஒவ்வொன்றையும் ஈற்றில் வரும்படி வைத்து ஒவ்வொன்றுக்கும் ஓர் எண்சீர் விருத்தப்பாடல் இந்த நூலில் பாடப்பட்டுள்ளது.
பாடலின் உட்பொருள் அந்த ஆத்திசூடியின் பொருளை விளக்குவதாக உள்ளது.
- அறஞ்செய விரும்பு – என்பதற்கான பாடல்
அறனென்ற பொருளல்லால் உலகின் கண்ணே
- அண்டருக்குத் தான்முனிவர் காணார் சூக்மம்
சரமென்று பெயர்பெற்று உலகில் தானும்
- தனக்குள்ளே தானாகி அண்ட மாகிப்
பரமென்ற கீர்த்தியுள்ள சித்தர் யோகி
- பரிவாக உச்சரித்து நமனை வெல்வார்
குருவென்றும் சீடரென்றும் கற்பம் என்றும்
- குவலயத்தில் அறம்செய்ய விரும்பும் ஆச்சே.
- இந்தப் பாடல் மிகவும் தாழ்ந்த நடையில் உள்ளது.
- ஆத்திசூடி நூலின் காலம் 12ஆம் நூற்றாண்டு. இந்தத் திறவுகோல் நூலின் காலம் மிகவும் பிற்பட்டது. சொல்வதற்கில்லை.
கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, பாகம் 1, 2005