ஆடுதுறை மாசாத்தனார்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

ஆடுதுறை மாசாத்தனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். அவர் பாடியதாக ஒரே ஒரு பாடல் சங்கநூல் தொகுப்பில் உள்ளது. அது புறநானூறு 227 (பொதுவியல்- கையறுநிலை)

பெயர் விளக்கம்

சாத்தன் என்னும் சொல் நிலவணிகனைக் குறிக்கும். இக்காலத்தில் செட்டியார் என்று பெயரிட்டு வழங்குவது போல அக்காலத்தில் சாத்தனார் என்று வணிகரைப் பெயரிட்டு வழங்கினர். மாசாத்தனார் என்பது பெருவணிகரைக் குறிக்கும்.
இவரது ஊர் ஆடுதுறை. இந்த ஆடுதுறையை இக்காலத்தில் திருவாடுதுறை என்கின்றனர். ஊருக்குப் பெயர் சூட்டப்பட்ட காலத்தில் மயில் ஆடிய இடம் மயிலாடுதுறை. குரங்கு ஆடிய இடம் குரங்காடுதுறை. அது போல ஆடுகள் மிகுதியாக இருந்த இடம் ஆடுதுறை. பிற்காலத்தில் திருமந்திரம் இயற்றிய திருமூலர் இவ்வூரில் வாழ்ந்தவர். திருமூலர் ஆடுமேய்த்த வரலாற்றைப் பெரியபுராணம் குறிப்பிடுகிறது.

"https://tamilar.wiki/index.php?title=ஆடுதுறை_மாசாத்தனார்&oldid=11846" இருந்து மீள்விக்கப்பட்டது