அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர்
Alladi Krishnaswamy Iyer.jpg
அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர்
நாடாளுமன்ற உறுப்பினர், ராஜ்ய சபா
(நியமனம்)
பதவியில்
3 ஏப்ரல்1952 – 2 ஏப்ரல் 1958
இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்ற உறுப்பினர்
பதவியில்
9 திசம்பர்1946 – 24 சனவரி 1950
சென்னை மாகாணத்தின் தமிழக அரசுத் தலைமை வழக்குரைஞர்
பதவியில்
1929–1944
முன்னவர் தி. இரா. வெங்கடராம சாஸ்திரி
பின்வந்தவர் ப. வெ. இராஜமன்னார்
தனிநபர் தகவல்
பிறப்பு (1883-05-14)14 மே 1883
புதூர், சென்னை மாகாணம், இந்தியா
இறப்பு (1953-10-03)3 அக்டோபர் 1953
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
வாழ்க்கை துணைவர்(கள்) வெங்கலட்சுமம்மா

அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர் (Alladi Krishnaswamy Iyer; 14 மே 1883 – 3 அக்டோபர் 1953), வழக்கறிஞரும், இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்ற உறுப்பினரும் ஆவார். மேலும் 1929 முதல் 1944 முடிய சென்னை மாகாண அரசின் தலைமை வழக்கறிஞராகப் பணியாற்றியவர்.

இளமை வாழ்க்கை

சென்னை மாகாணத்தின், தற்போதைய ஆந்திர மாநிலத்தின் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள புதூர் கிராமத்தில் 1883இல் பிறந்த அல்லாடி கிருஷ்ணசாமியின் தந்தை ஏகாம்பர சாஸ்திரி ஒரு கோயில் பூசாரி ஆவார்.

1899இல் பள்ளிப் படிப்பை முடித்த கிருஷ்ணசாமி சென்னை கிறித்தவக் கல்லூரியில் வரலாறு படிப்பில் இளங்கலை பட்டம் பெற்றார். பின்னர் வழக்கறிஞர் படிப்பை, சென்னை சட்டக் கல்லூரியில் முடித்தவர்.[1] பின்னர் வெங்கலட்சுமியை மணந்தார்.

1929 முதல் 1944 முடிய சென்னை மாகாண அரசின் தலைமை அரசு வழக்கறிஞராகவும், இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார்.[2][3][4]

அல்லாடி நினைவு அறக்கட்டளை

அல்லாடி கிருஷ்ணசாமியின் மகன் அல்லாடி குப்புசாமி, தன் தந்தையின் நினைவாக, சென்னையில் 1983இல் அல்லாடி நினைவு அறக்கட்டளையை நிறுவினார்.[5]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்