அருண் சர்மா
அருண் சர்மா (ஆங்கிலம்: Arun Sarma) (பிறப்பு: 1931 நவம்பர் 3 - இறப்பு: 2017 மார்ச் 27) என்பவர் ஒரு அசாமின் எழுத்தாளர் ஆவார். அருண் சர்மா அசாமின் சமகால நாடக எழுத்தாளர்களில் ஒருவராக இருந்தார். குறிப்பாக நாடகத்தின் சில கூறுகளைக் கொண்ட வழக்கத்திற்கு மாறான நாடகங்களுக்காக அறியப்பட்டவர். நாடகத்தைத் தவிர, அசாமியின் வாழ்க்கை முறையை விவரிக்கும் ஆறு புதினங்களுக்கும் மேலாக அவர் எழுதியுள்ளார். [1] அசாமிய இலக்கியத்திற்கு அவர் செய்த பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக 2010 இல் அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. [2] ஆஷிர்பதர் ரோங் (ஆசீர்வாதத்தின் சாயல்கள் ) நாவலுக்காக 1998 ஆம் ஆண்டில் அவருக்கு சாகித்ய அகாதமி விருதும் வழங்கப்பட்டுள்ளது. [3] [4]
அவர் தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளாக அசாம் இலக்கிய மன்றத்தின் சிறந்த நாடக ஆசிரியர் விருதை வென்றுள்ளார். மேலும் நாடகத்திற்கான பங்களிப்புகளுக்காகவும், 1998 ஆம் ஆண்டில் சங்கீத நாடக அகாடமி விருதை வென்ற அரிய பெருமையையும் பெற்றுள்ளார். 2005 இல் அசாம் பள்ளத்தாக்கு இலக்கிய விருதையும் பெற்றவர் ஆவார்.
ஆரம்பகால வாழ்க்கை
அருண் சர்மா திப்ருகரில் பிறந்தார், அங்கு அவரது தந்தை திலக் சந்திர சர்மா டைம்ஸ் ஆஃப் அசாமின் ஆசிரியராக இருந்தார். 1935 ஆம் ஆண்டில், குடும்பம் ஹலேமின் தேயிலை குக்கிராமத்திற்கு அருகிலுள்ள ஹலேம்குரி கிராமத்திற்கு குடிபெயர்ந்தது. அங்கு காந்திய கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட இவரது தந்தை சர்மா, விவசாயத்தை மேற்கொண்டு சமூகப் பணிகளிலிலும் ஈடுபட முடிவு செய்தார். அருண் சர்மா தேஸ்பூர் உயர்நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்து 1948 இல் மெட்ரிகுலேஷன் முடித்தார். சர்மா 1954 இல் குவகாத்தியின் காட்டன் கல்லூரியில் பி.ஏ (கல்வியில் பட்டம்) முடித்தார். இந்த காலகட்டத்தில் நாடகமும் கவிதையும் எழுதத் தொடங்கினார். [5]
தொழில்
சர்மா 1954 இல் தி அஸ்ஸாம் ட்ரிப்யூனின் தலையங்க ஊழியராக குவாகாத்தியில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 1955 ஆம் ஆண்டில், அவர் ஹலேமில் உள்ள தனது சொந்த கிராமத்திற்கு குடிபெயர்ந்தார். 1948 ஆம் ஆண்டில் (இப்போது எம்சிடி மேல்நிலைப்பள்ளி) பரங்காபரியில் நிறுவப்பட்ட எம்சிடி உயர்நிலைப்பள்ளி என்று பிரபலமாக அறியப்படும் மத்திய சாய்துவார் உயர்நிலைப்பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக சேர்ந்தார். 1960 இல், அகில இந்திய வானொலியில் சேர மீண்டும் குவாகாத்திக்கு வந்தார். அப்போதிருந்து 1986 வரை, சர்மா அகில இந்திய வானொலியின் குவகாத்தி நிலையத்துடன் தொடர்பிலிருந்தார். முதலில் ஒரு தயாரிப்பாளராகவும் பின்னர் மூத்த தயாரிப்பாளராகவும் பணியாற்றினார். அவர் கல்வி ஒளிபரப்பு பிரிவின் தலைவராகவும் இருந்தார். மேலும் வகுப்பறைக் கல்விக்கு துணைபுரியும் ஒரு சிறந்த ஊடகமாக வானொலியைப் பயன்படுத்துவதில் முன்னோடிப் பணிகளைச் செய்தார். 1969 ஆம் ஆண்டில் லண்டனின் பிபிசியில் வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பில் ஆறு மாத பயிற்சி பெற்றார். [6]
1970 கள் மற்றும் 1980 களில், குவாகாத்தி நிலையத்தின் நாடகப் பகுதியை வடிவமைப்பதில் சர்மா முக்கிய பங்கு வகித்தார். இந்த காலகட்டத்தில் இந்த காலகட்டத்தில் அவர் 47 நாடகங்களையும், அதிக எண்ணிக்கையிலான வானொலி ஆவணப்படங்களை நிலையத்திற்க்காவும், அகில இந்திய வானொலியின் தேசிய நிகழ்ச்சிக்காகவும் எழுதி இயக்கியுள்ளார். அவரது ஆவணப்படங்களுக்காக மூன்று சர்வதேச சிறந்த விருதுகளையும் பெற்றார். அகில இந்திய வானொலியின் (1986-89) திப்ருகார் நிலையத்தின் நிலைய இயக்குநராக பணியாற்றிய அவர், 1990 ல் ஷில்லாங்கிலிருந்து அகில இந்திய வானொலியின் வடகிழக்கு சேவையின் இயக்குநராக பணியில் இருந்து ஓய்வு பெற்றார். [7]
ஓய்வுக்குப் பிறகு, அவர் வாராந்திர அசாமி செய்தித்தாள் புர்பச்சலின் நிறுவனர் ஆசிரியராக (1990-92) பண்யேற்றார். மேலும் 1992 முதல் 1997 வரை இந்திய தேயிலை சங்கத்தின் தேயிலை மையத்தின் இயக்குநராக பணியாற்றினார். இது அசாமில் மோதல்களின் ஒரு காலகட்டம் மற்றும் உள்ளூர் தேயிலைத் தொழிலுக்கும் அசாமிய மக்களுக்கும் பாலம் அமைக்கும் திட்டங்களை வடிவமைத்து செயல்படுத்த சர்மா அழைக்கப்பட்டார். 2005 ஆம் ஆண்டில், அசாமின் வரலாற்றை விவரிக்கும் ஒரு சன்-எட்-லூமியர் (ஒலி மற்றும் ஒளி நிகழ்ச்சி) என்ற நிகழ்ச்சியை சர்மா வடிவமைத்து, எழுதி செயல்படுத்தினார். [5]
தனிப்பட்ட வாழ்க்கை
1959 ஆம் ஆண்டில், சர்மா அசாமி சுதந்திரப் போராளியின் கர்மவீர் சந்திரநாத் சர்மாவின் பேத்தி ஆரதியை மணந்தார். இவர்களுக்கு நந்தினி மற்றும் ஓச்சிந்தியா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். [8] அவர் 27 மார்ச் 2017 அன்று மேடந்தா மருத்துவ நிறுவனத்தில் காலமானார். [9]
விருதுகள்
இலக்கியத்திற்காக
- அசாம் சாகித்ய சபா (நாடகம்) விருது - 1967
- அசோம் நாத்யா சன்மிலன் விருது - 2001
- 'ஆஷிர்படோர் ரோங்' நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது - 1998 ('ஆன் எ விங் அண்ட் எ பிரேயர்' என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது)
- இசை நாடக் அகாடமி விருது - 2004
- அசாம் பள்ளத்தாக்கு இலக்கிய விருது - 2005
- பத்மஸ்ரீ - 2010
- சங்கராச்சாரியார் அவதார் விருது இலக்கியம் - 2010
வானொலி ஒலிபரப்புக்கு
- ஜப்பான் பரிசு (1980) "ஆல் பட்ஸ் டு ப்ளூம்" என்ற வானொலி ஆவணப்படத்திற்கான சர்வதேச விருது.
- "காசன்: டேஞ்சர் அஹெட்" என்ற வானொலி ஆவணப்படத்திற்காக ஆசிய-பசிபிக் ஒலிபரப்பு ஒன்றிய விருது (1982) .
- "ஆல் லிப்ஸ் டு ஸ்மைல்" என்ற வானொலி ஆவணப்படத்திற்கான பிரிக்ஸ் ஃபியூச்சுரா பெர்லின் பாராட்டு சான்றிதழ் (1983).
- "குகுர்னேச்சியா மனு" என்ற நாடகத்திற்கு ஆகாஷ்வானி விருது (இந்தியாவின் இரண்டாவது சிறந்த வானொலி நாடகம்).
குறிப்புகள்
- ↑ The Assam Tribune, 26 January 2010
- ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help); Unknown parameter|https://www.webcitation.org/6U68ulwpb?url=
ignored (help) - ↑ [1] The Telegraph-Guwahati Diary, 22 March 2006
- ↑ "Archived copy". Archived from the original on 28 September 2011. பார்க்கப்பட்ட நாள் 2009-06-27.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) India Press Information - ↑ 5.0 5.1 Sharma, Arun : (2006) Collected Plays of Arun Sarma, Banalata, Dibrugarh.
- ↑ Personal Interview, Katha Guawahati
- ↑ Katha Guwahati (Drama Issue)
- ↑ Amar Saisab, by Arun Sharma
- ↑ http://www.business-standard.com/article/pti-stories/renowned-playwright-arun-sarma-dies-117032701023_1.html
வெளி இணைப்புகள்
- Arun Sarma, The Pride of Assam பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்
- Padma Awards 2010 Press Information Bureau
- Centre for Development and Peace Studies பரணிடப்பட்டது 2012-07-20 at the வந்தவழி இயந்திரம்
- Assam Tribune profile, May 2009
- The Telegraph profile, 5 January 2004
- The Assam Tribune, 26 January 2010