அருணி ராஜபக்ச

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அருணி ராஜபக்ச
அருணி ராஜபக்ச
இயற்பெயர்/
அறியும் பெயர்
அருணி ராஜபக்ச
பிறந்ததிகதி 5 சனவரி 1984 (1984-01-05) (அகவை 41)
பிறந்தஇடம் கண்டி, இலங்கை
பணி நடிகை, மாடல் அழகி
குறிப்பிடத்தக்க விருதுகள் இலங்கை அழகி (2007)

அருணி மதூசா ராஜபக்ச (சிங்களம்: අරුණි රාජපක්ෂ; ஆங்கிலம்: Aruni Madusha Rajapaksha, பிறப்பு 5 சனவரி 1984) இலங்கை திரைப்பட நடிகையும், மாடல் அழகியும், தொலைகாட்சித் தொகுப்பாளரும் ஆவார். 2007 ஆம் ஆண்டு இலங்கை அழகி பட்டத்தை வென்று 2008 ஆம் ஆண்டு பிரபஞ்ச அழகி அணிவகுப்பில் இலங்கையை பிரதிநிதித்துவ படுத்தி கலந்து கொண்டார். இவர் 2007ஆம் ஆண்டு சர்வதேச அழகி போட்டியிலும் பங்குபற்றி தரப்படுத்தலில் முதல் 15 இற்குள் இடம் பிடித்தார்.

ஆரம்பகால வாழ்கை

அருணி ராஜபக்ச இலங்கையில் கண்டியில் பிறந்தார். இவரின் தந்தை ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஆவார்.[சான்று தேவை] அருணி கண்டியில் அமைந்துள்ள சுவர்ணமாலி மகளிர் வித்தியாலயத்தில் கல்வி கற்றார். இவர் பாடசாலை நாட்களில் போதை ஒழிப்பு செயற்றிட்டங்களில் பங்கு பற்றியுள்ளார். கலைப்பிரிவில் கல்விகான பொது சான்றிதழ் மேலிநிலைத் தேர்விற்குப் பின் தொழில் நுட்ப கல்லூரியில் சேர்ந்தார். இவர் ஆடை அலங்கார அணி வகுப்புகளில் கலந்து கொண்டமை வடிவழகு துறையில் நுழைய வழி வகுத்தது.

அழகுராணியாக

2004 ஆம் ஆண்டு உடரட்ட மனிக்கே பட்டத்தை வென்றார். 2005 ஆம் ஆண்டு கேப்ரி அழகுராணியாக கீரிடம் சூடினார். இதுவே அவரது வடிவழகு துறையில் கிடைத்த முதல் வெற்றியாகும்.[1]

2008 ஆம் ஆண்டில் பிரபஞ்ச அழகி போட்டியில் பங்குபற்றினார்.

2007 ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற சுற்றுலா ராணி ( Tourism Queen ) போட்டியிலும் ஜப்பானில் நடைபெற்ற சர்வதேச ராணி போட்டியிலும் பங்குபற்றினார்.[2]

2012 ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற உலகின் மணப்பெண் போட்டியில் மூன்றாவது இடத்தை பிடித்தார்.[3][4]

திரைப்பட விவரங்கள்

ஆண்டு படம் பங்கு மற்ற குறிப்புகள்
2012 சூப்பர் சிக்ஸ் செரின் முக்கிய நடிகை
2015 மகாராஜா ஜெமுனு காலு மேனிக நடிகை
2015 அட்ட்ரெஸ் நா (குவரி இல்லாதவர்கள்)[5] நதாலியா துணை நடிகை
2016 பத்தினி மாதவி துணை நடிகை
2016 (ஒரு காதல் மெல்லிசை)[6] அதாரனீய கதாவக் தெவ்லி இசை திரைப்படம்

தொகுப்பாளராக

ஹிரு தொலைகாட்சியில் ‘நிவாடுவட டிரவல் எகக்’ எனும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

குறிப்புகள்

  1. Lakna Paranamanna (2008-12-14). "Udarata Menike on the ramp". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2019-01-24.
  2. Dhananjani Silva (2008-08-17). "'A peek into 80 different countries'".
  3. "Sri Lanka's Aruni Rajapaksha 3rd place at Bride of the World 2012". elankanews.com. 2012-11-01. பார்க்கப்பட்ட நாள் 2015-01-06.
  4. "Woman of value!". dailynews.lk. 2012-12-07. பார்க்கப்பட்ட நாள் 2015-01-06.
  5. "'Address Nehe' A plot about people without address". sundaytimes.lk. 2014-01-19. பார்க்கப்பட்ட நாள் 2015-01-06.
  6. "'Adaraneeya Kathawak' completes shooting". sundaytimes.lk. 2014-08-24. பார்க்கப்பட்ட நாள் 2015-01-06.

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=அருணி_ராஜபக்ச&oldid=28490" இருந்து மீள்விக்கப்பட்டது