அருணகிரி அந்தாதி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

அருணகிரி அந்தாதி என்னும் நூலின் ஆசிரியர் குகை நமச்சிவாயர். இதன் காலம் 16-ம் நூற்றாண்டு

திருவண்ணாமலைச் சிவனைப் போற்றும் 100 வெண்பாக்கள் அந்தாதியாக வரும் நூல் இது. இந்த நூற்றாண்டில் இந்த ஊரைப்பற்றி எழுந்த வேறு இரண்டு நூல்கள்: அருணாசல புராணம், அருணகிரிப் புராணம். இவற்றில் அருணகிரி வெண்பா அந்தாதி பாடிய குகை நமச்சிவாயர் தாம் குகையில் சிலகாலம் வாழ்ந்ததை இந்த நூலில் குறிப்பிடுகிறார்.

என்றும் அருணேசன் இருபதத்தை நம்பாதார்
குன்றில் வனத்தில் குகையதனில் – சென்று
திரிந்தேன், பலமருந்து தின்றுசில காலம்
இருந்தேன் இராமலிருந் தேன்.

இவர் தேவாரம் பாடிய மூவரை மட்டும் தம் பாடல்களில் போற்றுகிறார். திருவாசகம் பாடிய மாணிக்கவாசகரைக் குறிப்பிடவில்லை.

மனம் அடங்கச் சிவனை நினை எனக் கூறும் இவரது பாடல்

சும்மா கிடக்குமோ சோணா சலன்பாதம்
அம்மால் விரிஞன் அறிகிலார் – நம்மால்
இருந்துகதை சொன்னக்கால் என்னாகும் நெஞ்சே
பொருந்த நினையாத போது.

கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 3, 2005
"https://tamilar.wiki/index.php?title=அருணகிரி_அந்தாதி&oldid=17531" இருந்து மீள்விக்கப்பட்டது