அரிச்சந்திர வெண்பா
அரிச்சந்திர வெண்பா என்னும் தமிழ்நூல் அரிச்சந்திரன் கதையைச் சொல்வது. இந்தக் கதை வடமொழிக் கதை.
அரிச்சந்திர வெண்பா என்னும் இந்த நூல், பாண்டிய நாட்டைச் சேர்ந்த வீரகவிராயரால் இயற்றப்பட்ட அரிச்சந்திர புராணம் என்னும் தமிழ்க்காப்பியத்துக்கு முதல்நூல். அரிச்சந்திர வெண்பாவில் இல்லாத காண்ட அமைப்பினை அரிச்சந்திர புராணம் கையாளுகிறது. பாரத வெண்பா என்னும் நூல் 'வில்லி பாரதம்' என்னும் நூலுக்கு முதல்நூல் என்பது போற்ற வழக்கு இது.
சொன்ன சொல் தவறாத வாய்மை என்னும் நீதியை மையமாகக் கொண்டு இந்தக் கதை உருவாக்கப்பட்டுள்ளது.
- ஒரு வெண்பா
- ஆதரிக்கும் திண்டோள் அரிச்சந் திரன்கதையைக்
- காதலித்துக் கொண்டோரும் கற்றோரும் - போதப்
- பெரும்பாவம் தீர்க்கும் பெருநெறிக்கே சேர்க்கும்
- தரும்பாவம் தீர்க்கும் சிவம்.[1]
அடிக்குறிப்பு
- ↑ அரிச்சந்திர புராணத்தின் சில ஏட்டுப் பிரதிகளில் காணப்படும் இந்தப் பாடல் முந்துநூல் அரிச்சந்திர வெண்பாப் பாடலாக இருக்கலாம்.
மேற்கோள் நூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு – பதினாறாம் நூற்றாண்டு, 2005