அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால் | |
---|---|
7ஆம் டில்லி முதல்வர் | |
பதவியில் 14 பெப்ரவரி 2015 – 17 செப்டம்பர் 2024 | |
துணை நிலை ஆளுநர் | நசீப் சங், அனில் பைஜால், வினை குமார் சக்சேனா |
முன்னவர் | குடியரசுத் தலைவர் ஆட்சி |
பின்வந்தவர் | ஆதிசீ |
பதவியில் 28 டிசம்பர் 2013 – 14 பெப்ரவரி 2014 | |
துணை நிலை ஆளுநர் | நசீப் சங் |
முன்னவர் | சீலா தீக்சித் |
பின்வந்தவர் | குடியரசுத் தலைவர் ஆட்சி |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 16 ஆகத்து 1968 சிவானி, அரியானா |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | ஆம் ஆத்மி கட்சி |
வாழ்க்கை துணைவர்(கள்) | சுனிதா கெஜ்ரிவால் |
பிள்ளைகள் | 2 |
இருப்பிடம் | காசியாபாத் மாவட்டம், இந்தியா |
படித்த கல்வி நிறுவனங்கள் | இந்திய தொழில்நுட்பக் கழகம் கரக்பூர் |
தொழில் | சமூக ஆர்வலர், அரசியல்வாதி |
விருதுகள் | ரமோன் மக்சேசே விருது |
அரவிந்த் கெஜ்ரிவால் (Arvind Kejriwal, இந்தி:अरविंद केजरीवाल) (பிறப்பு:16 ஆகஸ்ட் 1968) 7ஆம் தில்லி முதல்வர் ஆவார். இவர் அரசுத்துறையில் ஒளிவின்மை இருக்க வேண்டும் என்று போராடி வரும் ஓர் இந்திய தன்னார்வலச் சமூக சேவகரும் ஆவார். தகவல் பெறும் உரிமை சட்டமாக்கலுக்கான இயக்கத்தை அடித்தட்டு மக்களிடம் கொண்டு சேர்த்ததற்காகவும் வறியவர்களும் அரசின் ஊழலுக்கு எதிராகப் போராடும் வகையில் அரசைப் பொறுப்பேற்க வைத்ததற்காகவும் மலரும் தலைமைப்பண்புக்காக 2006ஆம் ஆண்டுக்கான ரமன் மகசேசே பரிசு இவருக்கு அளிக்கப்பட்டது.[1].ஆனால் தற்போது ரூ 1000 கோடி மதுபான ஊழல் வழக்கு குற்றசாட்டில் சிக்கி சிறையில் உள்ளார்.மேலும் காலிஸ்தான் தீவிரவாத இயக்கத்திடமிருந்து பணம் பெற்றதாகவும் குற்றசாட்டு உள்ளது
வாழ்க்கை வரலாறு
அரவிந்த் கெஜ்ரிவால் அரியானாவிலுள்ள இசாரில் 1968 ஆம் ஆண்டு ஆகஸ்டு 16 ஆம் நாள் பிறந்தவர்[2],[3]. கேஜ்ரிவாலின் தந்தை கோவிந்த ராம் கேஜ்ரிவால், தாய் கீதா தேவி. ஐஐடி கரக்பூரில் 1989 ஆம் ஆண்டு இயந்திரவியல் பொறியியல் பட்டம் பெற்றவர். 1992ஆம் ஆண்டு இந்தியக் குடியுரிமைப் பணிகளில் ஒன்றான இந்திய வருவாய்த்துறைப் பணியில் (IRS) சேர்ந்து தில்லியில் வருமானவரி ஆணையர் அலுவலகத்தில் பணி புரிந்தார். அங்கு பணி புரியும்போது அரசுத்துறையில் தகவல்கள் வெளிப்படையாக இல்லாமையே ஊழலுக்கு வழிவகுப்பதை உய்த்தறிந்தார். தான் பணியில் இருக்கும்போதே ஊழலுக்குத் துணைபுரியும் செயலாக்கங்களை மாற்றவும் எதிர்க்கவும் போராடி வந்தார்.[4] வருமானத்துறை அலுவலகத்தில் ஒளிவின்மையைக் கொண்டுவரப் பல மாற்றங்களைத் துவக்கி வைத்தார்.
சனவரி 2000 ஆம் ஆண்டில் தற்காலிக பணிஓய்வு பெற்றுக்கொண்டு பரிவர்த்தன் என்ற தில்லியை மையமாகக் கொண்ட குடிமக்கள் இயக்கமொன்றைத் துவக்கினார். இது நியாயமான, ஒளிவுமறைவற்ற, பொறுப்புள்ள அரசாண்மைக்காகப் பாடுபடுகிறது. பெப்ரவரி,2006ஆம் ஆண்டில் முழுவதுமாக பணிஓய்வு பெற்றுக் கொண்டு பரிவர்த்தன் பணிகளில் இறங்கினார்[5].
அருணா ராய் போன்றவர்களுடன் இணைந்து தகவல் பெறும் உரிமைக்காக அமைதியான சமூக இயக்கத்தை நடத்தினார். 2001ஆம் ஆண்டில் தில்லியில் தகவல்பெறும் உரிமைச்சட்டம் நிறைவேறியது[3]. நாட்டளவில் 2005ஆம் ஆண்டு நிறைவேறியது. அதன்பிறகும் சட்டத்தை ஏட்டளவில் நிற்கவிடாது மக்களறியும் வண்ணம் இந்தியா முழுவதும் பயணித்துப் பரப்புரை யாற்றினார்[6],[7]. மேலும், தனது அமைப்பின் மூலம் இச்சட்டத்தின் மூலம் சிறப்பான தகவல்களைப் பெற்று அரசாண்மையில் மாற்றங்களைக் கொண்டு வருபவர்களுக்கு விருதுகள் வழங்கத் தொடங்கினார்[8]. இவ்வகையில் அரசின் செயல்களை மக்களும் கண்காணித்துப் பங்கேற்கத் தூண்டுகிறார்.
பெப்ரவரி6, 2007இல் சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சி 2006ஆம் ஆண்டுக்கான "ஆண்டின் சிறந்த இந்தியர்" பட்டத்தைப் பொதுமக்கள் சேவைக்காக அரவிந்துக்கு வழங்கியது.
அரசியல்
அண்ணா அசாரே தலைமையில் ஊழல் எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்டார். 26 நவம்பர் 2012ல் ஆம் ஆத்மி கட்சியைத் துவக்கி, 2013 இல் தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் அரசியல் பின்னணி இல்லாதவர்களை வேட்பாளர்களாகப் போட்டியிடச் செய்து மக்களின் ஆதரவைப் பெற்றார்[9]. 15 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் தில்லி முதல்வராகப் பதவியில் இருந்த சீலா தீக்சித்தை புது தில்லி சட்டமன்ற தொகுதியில் 25,864 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்தார்[10],[11]. திசம்பர் 28ஆம் தேதி டெல்லி முதல்வராகப் பதவியேற்றார் அரவிந்த் கெஜ்ரிவால்[12]. சன லோக்பால் என்ற சட்டத்தை நிறைவேற்றச் சட்டமன்றத்தில் போதிய ஆதரவு இல்லாததால் அறிவித்த படி அவர் பதவி விலகினார்[13][14].
ஆதரவில் பிரச்சினைகள்
டெல்லியில் 38 ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் ஆட்சி அமைத்த இவருக்கு ஆம் ஆத்மி கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ., வினோத் குமார் பின்னியின் ஆதரவு திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டதையடுத்தும், 10. பெப்ரவரி 2014 முதல் முண்டுகா தொகுதியின் சுயேச்சை எம்.எல்.ஏ., ரம்பீர் சோகீன் தனது ஆதரவை விலக்கிக்கொண்டதாலும் நெருக்கடி உண்டாகியது[15].
பதவி முடிவு
புது டெல்லி முதல்வரான அரவிந்த் கேஜ்ரிவால் 13. பெப்ரவரி 2014 அன்று அவையில் ஜன்லோக்பால் மசோதாவை தாக்கல் செய்தார். இதில் ஆதரவு 27ம், எதிராக 42 பேரும் ஓட்டு அளித்தனர். ஆகையால் இது தாக்கல் ஆகவில்லை. அதனால் 14. பெப்ரவரி 2014 வெள்ளிக்கிழமை அன்று இவர் பதவி விலகினார்.[16]
2014ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் பங்கேற்பு
தம் முதல்வர் பதவியை விட்டு விலகுமுன் 2014 சனவரியில் கேஜ்ரிவால் தாம் இந்தியப் பொதுத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று கூறியிருந்தார்.[17] ஆனால் அம்மாத இறுதியில் ஆம் ஆத்மி கட்சியினரின் வற்புறுத்தலால் கேஜ்ரிவால் தம் எண்ணத்தை மாற்றிக்கொண்டார்.[18] மார்ச்சு 25ஆம் நாள் கேஜ்ரிவால் பா.ஜ.கட்சியால் பிரதமர் பதவிக்கென்று நிறுத்தப்பட்ட நரேந்திர மோடியை எதிர்த்து தாம் வாரணாசித் தொகுதியிலிருந்து நாடாளுமன்ற இடத்திற்குப் போட்டியிடப்போவதாக அறிவித்தார்.[19][20]
தில்லி சட்டமன்றம் (2015)
தில்லி சட்டமன்றத்துக்கு நடந்த தேர்தலில் புது தில்லி தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு பாசகவின் நிபுர் சர்மாவை 31,583 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்தார். 2015 பிப்பரவரி 13ஆம் தேதி தில்லியின் எட்டாவது முதல்வராக பதவியேற்றார்.[21] இவர் எந்தத் துறையையும் தனக்கு எடுத்துக்கொள்ளவில்லை.[22][23] 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இவர் வெளியிட்ட அறிக்கையில் தலைமைச்செயலகத்தில் பணிபுரிபவர்கள் சனிக்கிழமையும் பணிக்கு வரவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதால் அலுவலர்கள் மத்தியில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது .[24]
மதுபானக் கொள்கை முறைகேடு
2022-இல் இவரது அரசு கொண்டு வந்த புதிய மதுபானக் கொள்கையால்[25][26][27] அரசுக்கு ஏற்பட்ட கோடிக் கணக்கான நிதி இழப்பால் சி பி ஐ., தில்லி துணை முதல்வரும், கல்வி மற்றும் கலால் துறை அமைச்சரான மணீஷ் சிசோடியாவின் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் வங்கிப் பெட்டகங்களில் சோதனை நடத்தினர். அரவிந்த் கெஜ்ரிவாலின் புதிய மதுபானக் கொள்கையை விமர்சித்து அண்ணா அசாரே கடிதம் எழுதியுள்ளார்.[28]
அழைப்பாணை
தில்லி அரசின் மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை விசாரிக்க அமலாக்க இயக்குனரகம் 3 சனவரி 2024 அன்று நேரில் ஆஜராக மூன்றாவது முறையாக அழைப்பானை விடுத்துள்ளது.[29]
தனி வாழ்க்கை
கேஜ்ரிவாலின் மனைவி பெயர் சுனிதா. அவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். கேஜ்ரிவால் சைவ உணவு அருந்துபவர். பல ஆண்டுகளாக விபாசனா செய்துவருகிறார்.[30] சடங்கு சம்பிரதாயங்களை விரும்பாத அவர் தமது பிறந்த நாளைக் கொண்டாடுவதில்லை[31].
மேற்கோள்கள்
- ↑ Citation பரணிடப்பட்டது 2011-03-12 at the வந்தவழி இயந்திரம் The 2006 ரமோன் மக்சேசே விருது for Emergent Leadership-CITATION.
- ↑ In electing Kejriwal, 38,... டைம்ஸ் ஆப் இந்தியா, 31 Jul 2006.
- ↑ 3.0 3.1 Profile பரணிடப்பட்டது 2014-03-26 at the வந்தவழி இயந்திரம் IIT Kanpur Alumni Association. Satyendra K. Dubey Memorial Award citation.
- ↑ Profile at Ashoka Fellow website பரணிடப்பட்டது 2010-12-25 at the வந்தவழி இயந்திரம் Citation.
- ↑ About us Parivartan Official website.
- ↑ Don’t throttle RTI Arvind Kejriwal, livemint, Jul 6 2007.
- ↑ [1] Google explaining Right to Information Act
- ↑ [2] பரணிடப்பட்டது 2011-07-14 at the வந்தவழி இயந்திரம் RTI Award Website.
- ↑ "அரசியல் பின்னணி இல்லாதவர்க்குத் தேர்தலில் போட்டியிட முன்னுரிமை". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 8 திசம்பர் 2013.
- ↑ "டெல்லியில் காங்கிரசுக்கு வரலாறு காணாத தோல்வி: ஆம் ஆத்மி யால் கடும் இழப்பு". மாலைமலர். Archived from the original on 2013-12-10. பார்க்கப்பட்ட நாள் 8 திசம்பர் 2013.
- ↑ "Arvind Kejriwal, the giant killer who swept Sheila Dikshit out of power". THE TIMES OF INDIA. பார்க்கப்பட்ட நாள் 8 திசம்பர் 2013.
- ↑ "டெல்லி முதல்வராகப் பதவியேற்றார் அரவிந்த் கெஜ்ரிவால்!". விகடன். Archived from the original on 2013-12-31. பார்க்கப்பட்ட நாள் 28 திசம்பர் 2013.
- ↑ "Back to Aam Aadmi. Arvind Kejriwal quits as Delhi Chief Minister". Ndtv. பார்க்கப்பட்ட நாள் 14 பெப்ரவரி 2014.
- ↑ "Arvind Kejriwal's resignation letter: full text". Ndtv. பார்க்கப்பட்ட நாள் 14 பெப்ரவரி 2014.
- ↑ http://www.dinamalar.com/news_detail.asp?id=913620 தினமலர் பார்த்த நாள் 10. பெப்ரவரி 2014
- ↑ பதவியை ராஜினாமா செய்தார் அரவிந்த் கேஜ்ரிவால்
- ↑ "Will not contest 2014 Lok Sabha elections: Arvind Kejriwal". 4 January 2014. http://www.firstpost.com/politics/will-not-contest-2014-lok-sabha-elections-arvind-kejriwal-1322811.html. பார்த்த நாள்: 5 March 2014.
- ↑ Parsai, Gargi (19 January 2014). "I will contest Lok Sabha polls: Kejriwal". The Hindu. http://www.thehindu.com/news/national/i-will-contest-lok-sabha-polls-kejriwal/article5590660.ece. பார்த்த நாள்: 5 March 2014.
- ↑ "Kejriwal accepts Varanasi challenge, says he will contest election against Modi". PTI. The Times of India. 25 March 2014. http://timesofindia.indiatimes.com/home/specials/lok-sabha-elections-2014/news/Kejriwal-accepts-Varanasi-challenge-says-he-will-contest-election-against-Modi/articleshow/32673775.cms. பார்த்த நாள்: 26 March 2014.
- ↑ Rai, Man Mohan (7 March 2014). "Varanasi turns into battlefield; Narendra Modi, Arvind Kejriwal, Mukthar Ansari to contest elections". Economic Times. http://articles.economictimes.indiatimes.com/2014-03-17/news/48297641_1_har-har-modi-narendra-modi-varanasi-rally. பார்த்த நாள்: 10 April 2014.
- ↑ "Arvind Kejriwal becomes 8th Delhi CM, says must act strongly against any act of religious hate". indianexpress. பார்க்கப்பட்ட நாள் 14 பெப்ரவரி 2015.
- ↑ "Arvind Kejriwal takes oath, promises to act against graft". indianexpress. பார்க்கப்பட்ட நாள் 14 பெப்ரவரி 2015.
- ↑ "Arvind Kejriwal not to keep any portfolio". indianexpress. பார்க்கப்பட்ட நாள் 14 பெப்ரவரி 2015.
- ↑ சனிக்கிழமை பணிக்கு வரவேண்டும்: கேஜ்ரிவால் உத்தரவால் அதிகாரிகள் அதிருப்தி
- ↑ What is the Delhi liquor policy case and why is Deputy CM Manish Sisodia under CBI scanner?
- ↑ What is the controversy surrounding Delhi
- ↑ What went wrong with Delhi's new excise policy?
- ↑ அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு அன்னா ஹசாரே கடிதம்: “பேரியக்கத்தில் விளைந்த கட்சிக்கு இது அழகா?”
- ↑ மீண்டும் ஆஜராகும்படி கெஜ்ரிவாலுக்கு 3வது முறையாக சம்மன் அனுப்பியது அமலாக்கத்துறை
- ↑ "Ramon Magsaysay Award to Activist Arvind Kejriwal". Ramon Magsaysay Foundation. Archived from the original on 2017-04-17. பார்க்கப்பட்ட நாள் 2014-04-24.
- ↑ "All you want to know about Arvind Kejriwal". 24 December 2013. http://timesofindia.indiatimes.com/city/delhi/All-you-want-to-know-about-Arvind-Kejriwal/articleshow/27835465.cms. பார்த்த நாள்: 13 March 2014.
வெளி இணைப்புகள்
- 'Parivartan' Official website
- 'Public Cause Research Foundation' Official website
- Arvind Kejriwal Interview BBC Hindi
- Arvind Kejriwal Interview BBC Hindi – Audio பரணிடப்பட்டது 2012-04-26 at the வந்தவழி இயந்திரம்
- Jaago Re! பரணிடப்பட்டது 2012-08-27 at the வந்தவழி இயந்திரம் "Usse kuchh farak padega kya?": Arvind Kejriwal on fighting corruption in India
- An Interview with Arvind Kejriwal
- 'Lokraj Andolan' பரணிடப்பட்டது 2018-10-02 at the வந்தவழி இயந்திரம்
- 'India Against Corruption'