அரவிந்த் குப்தா
இயற்பெயர்/ அறியும் பெயர் |
அரவிந்த் குப்தா |
---|---|
பிறந்ததிகதி | 04 டிசம்பர் 1953 |
பணி | அறிவியலாளர், குழந்தைகளின் எழுத்தாளர் அறிவியல் வாழ்க்கைப் போக்கு |
கல்வி | இந்திய தொழில்நுட்பக் கழகம் கான்பூர், St. Xavier's School, Delhi |
அரவிந்து குமார் குப்தா (பிறப்பு:04 டிசம்பர் 1953)[1] பொம்மை-உருவாக்குபவர், என்று அனைவராலும் அறியப்படும் எழுத்தாளர், பொறியாளர், அறிவியலாளர்.[2] இவர் துவக்கியுள்ள அரவிந்து குப்தா பொம்மைகள் (http://arvindguptatoys.com/) என்ற வலைத்தளம் பள்ளி அளவிலான அடிப்படை-அறிவியல் பரிசோதனைகளை எளிய, அதிக செலவில்லாத பொருள்களைக் கொண்டு செய்யும் முறைகளை செவ்வனே விளக்குகிறது. மேலும் இவர் உலகின் மிகச்சிறந்த கல்வியாளர்கள், அறிவியலாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஆகியோரின் படைப்புகளை ஆங்கிலத்திலும் இந்தியிலும் மராத்தியிலும் மொழிபெயர்த்து இலவசமாக வெளியிடுகின்றார்.[3]
படிப்பு, முன் அனுபவம்
1970-ஆம் ஆண்டு கான்பூரிலுள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் மின் பொறியியல் பிரிவில் பி.டெக். பட்டப்படிப்பில் சேர்ந்தார். அப்போது பி.டெக். படிப்பு ஐந்தாண்டு காலப் படிப்பாக இருந்தது.[4] பி.டெக். படித்துள்ள அரவிந்த், பூனாவிலுள்ள டெல்கோ நிறுவனத்தில் சில காலம் வேலை செய்தார். பின்னர் அங்கு ஒரு வருட படிப்பு-விடுப்பு எடுத்துக்கொண்டு வெளியேறிய அரவிந்த், லோரி பேக்கர், அனில் சடகோபால் ஆகியோருடன் வேலை செய்து விட்டு பின்னர் குழந்தைகளுடன் இயங்குவது, குழந்தைகளுக்கு அறிவியல் கற்பிப்பது இவற்றையே தன் முழு-நேரத் தொழிலாக ஆக்கிக் கொண்டார்.[4]
குப்பைப்பொருள்களிலிருந்து அறிவியல் மாதிரிகள்
அரவிந்து குப்தா எழுதியுள்ள நூல்கள்
ஏக்லவ்யா வெளியீடு
- 1 கேல்-கேல் மேன் (இந்தி)
- 2 லிட்டில் சயன்சு / கபத் சே ஜுகத் (ஆங்கிலம் / இந்தி)
- 3 த டாய் பேக் / கிலோனோன் கா பாஸ்தா (ஆங்கிலம் / இந்தி)
- 4 டாய் டிரஷர்சு / கிலோனோன் கா காசானா (ஆங்கிலம் / இந்தி)
- 5 ஆஹா! ஆக்டிவிடீசு (ஆங்கிலம்)
- 6 ஆப்னே ஹாத் விக்யான் (இந்தி)
- 7 குச் குச் பனானா (இந்தி)
பெற்றுள்ள விருதுகள்
- இந்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறையினால் அளிக்கப்பட்ட குழந்தைகளிடையே அறிவியலைப் பிரபலப்படுத்தியமைக்கான நாட்டு விருது: 1988-ஆம் ஆண்டு.[5]
- (இந்திய தொழில்நுட்பக்கழகத்தின் மிக உயரிய விருதான) கான்பூர் இந்திய தொழில்நுட்பக்கழகத்தின் புகழ்பெற்ற மாணவர் விருது: 2001-ஆம் ஆண்டு.[6]
குப்தாவின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள்
பீஷ்ம சாஹ்னி, பேகம் அக்தர், அனில் அகர்வால், அனில் சடகோபால், லவுரி பேக்கர், யேன் மிர்டில் ஆகியோர் தன் வாழ்வில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியதாக அரவிந்த் குப்தா கூறியுள்ளார்.[7]
தற்போதுள்ள இடம்
பூனாவிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கான வானியல், வானியற்பியல் மையத்தில் (Inter University Centre for Astronomy and Astrophysics - IUCAA) வருகை-புரியும் ஆசிரியராக, அறிவியல் பொம்மைகள் செய்யும் வேலையிலும் அறிவியல் நூல்களை எழுதுவதிலும் ஈடுபட்டுள்ளார்.[8]
மேற்கோள்கள்
- ↑ வித்யா ஆன்லைன் [தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "லேர்னிங் நெட்" இம் மூலத்தில் இருந்து 2009-01-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090113165421/http://www.learningnet-india.org/lni/data/groups/maharashtra/arvindgupta/index.php.
- ↑ "A Million Books for a Billion People"
- ↑ 4.0 4.1 "எக்சுபிரசு இந்தியா" இம் மூலத்தில் இருந்து 2010-06-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100613230159/http://www.expressindia.com/news/iit/kanpur_alumni_speak_arvind.html.
- ↑ "நாயகம்-வேர்டுபிரசு" இம் மூலத்தில் இருந்து 2010-02-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100213105021/http://nayagam.wordpress.com/2007/06/03/arvind-guptas-website/.
- ↑ கான்பூர் இந்திய தொழில்நுட்பக்கழகத்தின் பழைய மாணவர் குழு
- ↑ "எக்சுபிரசு இந்தியா" இம் மூலத்தில் இருந்து 2010-06-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100613230159/http://www.expressindia.com/news/iit/kanpur_alumni_speak_arvind.html.
- ↑ "ஐயூக்கா வலைத்தளம்" இம் மூலத்தில் இருந்து 2009-11-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091106231307/http://www.iucaa.ernet.in/~scipop/contact.html.
வெளி இணைப்புகள்
- Arvind Gupta's website for popularizing science through children's toys
- Book about Arvind Gupta by Shobha Bhagwat published by Kaja Kaja Maru Publication (a publication of Garware Balbhavan Pune)
- Citation for "Distinguished Alumnus Award" from Indian Institute of Technology Kanpur in 2001
- Make Digital magazine's பரணிடப்பட்டது 2016-08-05 at the வந்தவழி இயந்திரம் feature "Toys from Trash" on Arvind Gupta and his work
- [1] UNICEF - Simple Toys make science learning fun
- [2] Master Toymaker thrills Canberra Children
- TED Talk given by Arvind Gupta at The INK Conference
- Article in French for the online magazine Youphil பரணிடப்பட்டது 2014-02-05 at the வந்தவழி இயந்திரம்
- NDTV gadgets – Toys from Trash Teaching kids science using everyday objects
- Indian Inventor creates Children’s Toys from Trash – Ben Coxworth
- Why I write? Arvind Gupta plays with the words of science
- Toying with Science with Arvind Gupta
- Simple Toys Make Learning Science Fun
- Arvind Gupta Talks about Creative Science