அம்சவர்தன்
அம்சவர்தன் | |
---|---|
பணி | நடிகர், தொழிலதிபர் |
வாழ்க்கைத் துணை | ரேஷ்மா |
பிள்ளைகள் | 3 |
அம்சவர்தன் (Hamsavardhan) என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் குறிப்பாக தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தொழில்
அம்சவர்தன் முதலில் ஆனந்தம் ஆனந்தம் என்ற படத்தில் நடித்தார், இந்த படத்தின் தயாரிப்புப் பணி 1998 ஆம் ஆண்டில் தொடங்கியது, படம் தாமதமாகி பின்னர் வடுகப்பட்டி மாப்பிள்ளை (2001) என வெளியிடப்பட்டது.[1] அதே படத்தின் இயக்குனரான வி. சி. குகநாதன் இயக்கத்தில் மகாஜிதன் என்ற படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் அந்த படம் உருவாக்கப்படவில்லை. அதேபோல், பிரீத்தா விஜயகுமார் ஜோடியாக வேண்டுமடி நீ எனக்கு என்ற படமும் அறிவிப்போடு நின்றுபோனது.[2] அம்சவர்தனின் முதல் வெளியீடான மானசீக காதல் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்தார், ஆனால் இந்த படம் வணிக ரீதியாக மோசமான தோல்வியைத் தழுவியது.[3][4] அதேபோல், அம்மு என்ற பெயரிலானத படத்தில் அபிதாவுக்கு ஜோடியாக இவர் நடித்த படமானது இடையில்நிறுத்தப்பட்டது.[5]
2002 ஆம் ஆண்டில், வணிக ரீதியாக வெற்றிபெற்ற பல நாயகர்கள் நடித்த படமான புன்னகை தேசம் படத்தில் தோன்றினார். அதில் தருண், சினேகா, பிரீத்தா, குணால் ஆகியோருடன் நடித்தார். அப்படமானது நல்ல விமர்சனங்களை பெற்றறது.[6] அந்த ஆண்டு ஜூனியர் சீனியர் படத்தில் நடித்தார். அதில் மூத்த மலையாள நடிகர் மம்மூட்டியுடன் இணைந்து முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார், ஆனால் இந்த படம் வணிக ரீதியாக ஆச்சரியகரமாக தோல்வி அடைந்தது.[7]
இவர் தன் தந்தையின் இயக்கத்தில் மந்திரன் படத்தில் நடித்தார். மேலும் அந்த படத்தில் தந்தை-மகன் இணைந்து செயல்படுவது முதன்மை செய்தியாக அமைந்தது.[8] பின்னர் இவரது தந்தையின் இயக்கத்தில் காண்டீபன் என்ற பெயரிலான மற்றொரு படத்தில் நடிப்பதாகவும், நாகுவின் இடியட் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானதாகவும் அறிவிக்கப்பட்டது, ஆனால் முந்தைய படம் உருவாக்கப்படவில்லை. பிந்தைய படத்தில் இவருக்கு பதிலாக யோகி ஒப்பந்தம் செய்யப்பட்டார் .[9] இவரது அடுத்த வெளியீடான பிறகு படத்திற்காக இவர் தலையை மொட்டையடித்துக்கொண்டார். ஆனால் படம் கவனிப்பைப் பெறாமல் போனது.[10] குரு, பொம்மன் உள்ளிட்ட பிற படங்கள் 2009 இல் தொடங்கப்பட்டன, ஆனால் அவை முடிந்து வெளிவரவில்லை.[11]
2012 ஆம் ஆண்டில், பிரபலங்கள் துடுப்பட்ட கழகத்தில் சென்னை ரைனோஸ் அணிக்காக இவர் ஆடினார். 2018 ஆம் ஆண்டில், பீட்ரு என்ற படத்தின் வழியாக நடிப்புத் துறையில் மறுபிரவேசம் செய்வதாக அறிவித்தார், இது இன்னும் வெளியாகவில்லை.[12]
திரைப்படவியல்
ஆண்டு | படம் | பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
1999 | மானசீக காதல் | அம்சவீர்த்தன், மதன் |
|
2001 | வடுகப்பட்டி மாப்பிள்ளை | விஜய் | |
2002 | புன்னகை தேசம் | செல்வம் | |
ஜூனியர் சீனியர் | சக்தி | ||
நேற்று வரை நீ யாரோ | தேவா | ||
2003 | இனிது இனிது காதல் இனிது | அஜய் | |
2005 | மந்திரன் | ஹம்சா | |
2007 | பிறகு | சத்யா |
குறிப்புகள்
- ↑ https://web.archive.org/web/20050312000422/http://www.dinakaran.com/cinema/english/cinenews/15-07-98/seemaan.htm
- ↑ https://web.archive.org/web/20040624175706/http://www.dinakaran.com/cinema/english/interviews/22-07-98/preethaa.htm
- ↑ https://web.archive.org/web/20050301211557/http://www.dinakaran.com/cinema/english/cinenews/11-12-98/ravichan.htm
- ↑ "Archived copy". தி இந்து. 2005-12-22. Archived from the original on 9 November 2012. பார்க்கப்பட்ட நாள் 15 April 2012.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help)CS1 maint: archived copy as title (link) - ↑ "24th". Archived from the original on 8 November 2004.
- ↑ "Archived copy". தி இந்து. 2002-01-25. Archived from the original on 1 April 2012. பார்க்கப்பட்ட நாள் 15 April 2012.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help)CS1 maint: archived copy as title (link) - ↑ "Never say die". 31 December 2005 – via www.thehindu.com.
- ↑ "Action laced with romance". 24 June 2005 – via www.thehindu.com.
- ↑ "Archived copy". Archived from the original on 8 January 2009. பார்க்கப்பட்ட நாள் 15 April 2012.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "Archived copy". Archived from the original on 26 April 2011. பார்க்கப்பட்ட நாள் 15 April 2012.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "Archived copy". Archived from the original on 12 September 2008. பார்க்கப்பட்ட நாள் 15 April 2012.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "Hamsavardhan makes a comeback with Peetru". The New Indian Express.