அமீன் கமில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அமீன் கமில்
அமீன் கமில்
இயற்பெயர்/
அறியும் பெயர்
அமீன் கமில்
பிறந்ததிகதி 3 ஆகத்து 1924
(அகவை 99) Kaprin
கல்வி Faculty of Law,
Aligarh Muslim University
குறிப்பிடத்தக்க விருதுகள் சாகித்திய அகாதமி விருது

அமீன் கமில் (ஆங்கிலம்: Amin Kamil) (பிறப்பு: 1924 – இறப்பு: 2014) என்ற இவர் காசுமீர் கவிதைகளில் ஒரு முக்கிய குரலாகவும், காசுமீர் மொழியில் நவீன கசலின் முக்கிய ஆதரவாளர்களில் ஒருவராகவும் இருந்துள்ளார். [1] இவரது செல்வாக்கு அவரது சமகாலத்தவர்கள் மற்றும் பிற்கால தலைமுறையினரால் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. [2] கமில், ஒரு கவிஞர் என்பதைத் தவிர, சிறுகதைகள், புதினங்கள் மற்றும் இலக்கிய விமர்சனத்தின் படைப்புகளையும் எழுதியுள்ளார். [3] வானொலிக்காக ஏராளமான நாடகங்களை எழுதியும், இசைநிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். அவரது விமர்சன ரீதியாக திருத்தப்பட்ட சூபி கவிதைத் தொகுப்பு (சூபி சேர், 3 தொகுதிகள், 1964-65) ஒரு உறுதியான உரையாக உள்ளது. இது பரவலாக பாராட்டப்பட்டது. அவர் நூண்ட் ரேசி, [4] மற்றும் கப்பா கதுன் ஆகியோரின் சேகரிக்கப்பட்ட வசனத்தையும் திருத்தியுள்ளார். கமில் உயர் திறமை வாய்ந்த அறிஞர் என்றும் அழைக்கப்படுகிறார்.

கமில் நாசிம் வடிவத்தில் சில மறக்கமுடியாத கவிதைகளையும் நமக்கு வழங்கியுள்ளார். அவர் சுயாதீன பத்திரிகையான நீப் என்ற இதழில் சில காலம் பணி புரிந்தார். ஒரு விமர்சகராக அவர் பரந்த அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார். தற்போது காசுமீர் மொழிக்கு பயன்படுத்தப்படும் மாற்றியமைக்கப்பட்ட எழுத்துக்களை உருவாக்க அவர் உதவினார். மொழிபெயர்ப்புத் துறையிலும் கமில் பங்களிப்பு செய்துள்ளார். தாகூரின் தக் கர் கவிதைகளை மொழி பெயர்த்துள்ளார். உருது கவிஞர் இக்பாலின் கவிதைகளும் காசுமீரியில் கிடைக்கக்கூடிய மொழிபெயர்க்கப்பட்ட இலக்கியங்களின் கார்பஸில் குறிப்பிடத்தக்க சேர்த்தல்களாக இருந்தன.

கமில் தெற்கு காசுமீரில் உள்ள கப்ரின் என்ற கிராமத்தில் பிறந்தார். பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்ற இவர், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் பட்டம் பெற்றார். 1947 ஆம் ஆண்டில் அவர் வழக்கறிஞர் சங்கத்தில் பட்டியில் சேர்ந்து 1949 ஆம் ஆண்டு வரை சட்டப் பயிற்சியைத் தொடர்ந்தார். பின்னர், சிறீநகர் சிறீ பிரதாப் கல்லூரியில் விரிவுரையாளராக நியமிக்கப்பட்டஅவர் அந்தக் கால முற்போக்கு எழுத்தாளர்களின் இயக்கத்துடன் நெருக்கமாக தொடர்பு கொண்டிருந்தார். அதன் செல்வாக்கின் கீழ் உருது மொழியிலிருந்து காஷ்மீரிக்கு அவரது வெளிப்பாட்டு ஊடகமாக மாறினார். 1958 ஆம் ஆண்டில் மாநில கலாச்சார அகாடமி அமைக்கப்பட்டபோது அவர் அதில் சேர்ந்தார். மேலும் காஷ்மீர் மொழிக்கான ஒருங்கிணிப்பாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் அவர் காஷ்மீரி இதழின் ஆசிரியரானார். மேலும் அகாதமியின் இரண்டு பத்திரிகைகளான சீராசா மற்றும் சோன் அதாப் ஆகியவற்றில் பல ஆண்டுகளாக பணிபுரிந்துள்ளார். அவர் 1979 இல் அகாதமியின் சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.

விருதுகள் மற்றும்ம் கௌரவங்கள்

சம்மு-காசுமீர் மாநில அரசின் சம்மு-காசுமீர் கலாச்சார அகாதமி விருது, மதிப்புமிக்க அமைப்பான சாகித்ய அகாடமி விருது , (1967) சர்வதேச இர்பான் அறக்கட்டளை விருது, காசுமீர் பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் சாதனை விருது, மற்றும் 2005 ஆம் ஆண்டில் இந்திய அரசிடமிருந்து பத்மஸ்ரீ (இலக்கியம் மற்றும் கல்விக்கா) போன்ற பல கௌரவங்களை அமீன் பெற்றுள்ளார். [5] அண்மையில், அமீன் கமில் குறித்த இரண்டு நாள் தேசிய கருத்தரங்கு அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. அதில் கமில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த எழுத்தாளராக அங்கீகரிக்கப்பட்டு, காசுமீரியின் வடமொழி இலக்கியத்தின் எல்லைகளை மீறி வெளிபட்டார். [6] [7] சம்மு-காசுமீர் கலை, கலாச்சாரம் மற்றும் மொழிகள் அகாதமி அதன் இலக்கிய இதழான சீராசாவின் சிறப்பு இதழை அமீன் கமிலின் வாழ்க்கை மற்றும் படைப்புகள் குறித்து 2011 கோடையில் சிறீநகரில் வெளியிடப்பட்டது. [8]

இறப்பு

அமீன் கமில் 2014 அக்டோபர் 30 அன்று வியாழக்கிழமை காலையில் தனது 90 ஆவது வயதில் சம்முவில் காலமானார். ஆடி மார்க்கர் கம்ராசு, பாண்டிபோரா இலக்கிய மன்றம், ஆளும் கட்சி தேசிய மாநாடு, மக்கள் ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட பல்வேறு இலக்கிய மற்றும் அரசியல் அமைப்புகள் தங்கள் தனி அறிக்கைகளில் அமீன் கமிலின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளன.

மேலும் காண்க

குறிப்புகள்

  1. Modern Indian Literature, an Anthology (By K. M. George)
  2. Shafi Shauq and Naji Munawar, History of Kashmiri Literature, University of Kashmir, Srinagar.
  3. I. Vi. Rāmakriṣṇan, Indian Short Stories 1900–2000, p. 347, Sahitya Akedemi, New Delhi.
  4. Ghulam Nabi Gauhar, Encyclopedia of Indian Literature, Vol 5, p. 4082, Shitya Akademi, New Delhi.
  5. MetaNym. "Indian Poets I Bio-Notes on Kashmiri Poets I" இம் மூலத்தில் இருந்து 25 October 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/5knHLISTt?url=http://www.geocities.com/indian_poets/kashmiri.html. 
  6. http://www.kashmirobserver.net/index.php?option=com_content&view=article&id=1068:kamils-book-released-at-amu-seminar-&catid=3:regional-news&Itemid=4 பரணிடப்பட்டது 15 சூன் 2010 at the வந்தவழி இயந்திரம்
  7. "Amin Kamil – In the News". Kamil.neabinternational.org. 12 March 2009. http://kamil.neabinternational.org/inthenews.htm. 
  8. [1] பரணிடப்பட்டது 17 மார்ச் 2012 at the வந்தவழி இயந்திரம்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=அமீன்_கமில்&oldid=18713" இருந்து மீள்விக்கப்பட்டது