அபிசேக் சங்கர்
அபிசேக் சங்கர் | |
---|---|
பிறப்பு | 29 செப்டம்பர் 1968 இந்திய ஒன்றியம், மும்பை, செம்பூர் |
மற்ற பெயர்கள் | அபிசேக் |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1995-தற்போது வரை |
அபிசேக் சங்கர் (Abhishek Shankar) என்பவர் ஒரு இந்திய தமிழ் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகர் ஆவார். இவர் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துவருகிறார்.[1][2]
தொழில்
அபிஷேக் ஞான ராஜசேகரனின் இயக்கி விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட நாடகத் திரைப்படமான மோகமுள் (1995), படத்தில் நடிகராக அறிமுகமானார். அப்படத்தில் அர்ச்சனா ஜோக்லேகருடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.[3] திரைப்படங்களில் உரிய வாய்ப்புகள் இல்லாமல் இருந்த இவருக்கு ஏக்தா கபூர் தனது புதிய தொடரான குடும்பம் தொடரில் ஒரு பாத்திரத்தை இவருக்கு வழங்கிய பின்னர், 1999 இல் இவர் தொலைக்காட்சிக்கு மாறினார்.[4] பின்னர் இவர் தமிழ் தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பிலும், நகைச்சுவை பாத்திரத்தை சித்தரிப்பதிலும் அவருக்கு உதவினார். இவர் கிட்டத்தட்ட நாற்பது தொடர்களில் பணிபுரிந்தார். மேலும் கோலங்கள் என்ற தொடரில் பாஸ்கரன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார்.[5] இந்த தொடரின் வெற்றியினால், 2000 களின் பிற்பகுதியில் தமிழ் தொலைக்காட்சிகளில் மலர்கள், கிரிஜா, கோலிவுட் கோர்ட் உள்ளிட்ட பிற நிகழ்ச்சிகளில் பங்கேற்க இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4][6]
2009 ஆம் ஆண்டில், ஹாலிவுட் என்ற பதாகையின் கீழ் தான் சொந்தமாக பாலிவுட் திரைப்படங்களை இயக்கி தயாரிக்க உள்ளதாக அறிவித்தார். இவர் புதுமுகங்களைக் கொண்டு கதை என்ற படத்தை இயக்குவதன் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படம் 2012 சனவரியில் வெளியானது. இந்த படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. சிஃபி.காம் இன் விமர்சகர் ஒருவர் "இதுபோன்ற ஒரு கனமான கதையை விஷயத்தைத் தொட்டதற்காக அவரது முதுகில் தட்டிக்கொடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டார்.[7] அபிஷேக் அடுத்து கையெழுத்து என்ற படத்தை இயக்குவதா அறிவித்தார். அதில் தனது முதல் படமான கதை படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த ஷான் நடிப்பதாக அறிவித்தார். ஆனால் இந்தப் படம் பாதியில் கைவிடப்பட்டது.[8] இவர் 2012 மே மாதத்தில் மற்றொரு படத்தை இயக்கத் தொடங்கினார். இது சமுத்திரக்கனி நடித்த ஒரு காவல் துறை அதிரடி சாகச படமாகும். ஆனால் படம் அடுத்த கட்டத்துக்கு நகரவில்லை.[9] க/பெ ரணசிங்கம் பட்டதில் இவரது நடிப்பு குறித்து, ஒரு விமர்சகர் கூறுகையில், "நடிகர் அபிஷேக்கிற்கு ஒரு தொப்பியின் ஒரு முனை போல, அவரது கதாபாத்திரத்திரத்தின் நோக்ககம் குறைவாக வரையறுக்கப்பட்டதாக இருந்தபோதிலும் (ஒரு அரசு அதிகாரி), இந்த படத்தில் மனதில் பதியக்கூடிய மூன்று அல்லது நான்கு நடிகர்களில் ஒருவராக நடித்துள்ளார் ".[10]
தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படவியல்
நடிகராக
- படங்கள்
ஆண்டு | படம் | பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
1995 | மோகமுள் | பாபு | |
2001 | அசோகவனம் | ||
2003 | பல்லவன் | ||
2007 | அம்முவாகிய நான் | ரகு | |
2010 | அழகான பொண்ணுதான் | ||
2011 | பதினாறு | கோபாலகிருஷ்ணன் | |
2014 | தலைவன் | ||
2014 | சம்சாரம் ஆரோக்யதினு ஹானிகாரம் | ஸ்ரீதேவியின் / வித்யாவின் கணவர் | மலையாளம் |
2014 | வாயை மூடி பேசவும் | ஸ்ரீதேவியின் / வித்யாவின் கணவர் | |
2015 | ஆம்பள | பெரியா பொண்ணுவின் கணவர் | |
2016 | பென்சில் | சுந்தராஜன் | |
2017 | துப்பறிவாளன் | மதிவண்ணன் | |
2019 | வந்தா ராஜாவாதான் வருவேன் | பிரகாஷின் சகோதரர் | |
2020 | க/பெ ரணசிங்கம் | அரசாங்க அதிகாரி | |
2021 | கபடதாரி | ரவிச்சந்திரன் | |
2021 | மிருகா | காவல் ஆணையர் |
- வலைத் தொடர்
ஆண்டு | படம் | பாத்திரம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
2021 | பேமிலி மேன் | லசித் ரூபதுங்க | இந்தி |
இயக்குநராக
ஆண்டு | படம் | குறிப்புகள் |
---|---|---|
2010 | கதை |
தொலைக்காட்சி தொடர்
- நடிகராக
ஆண்டு | தலைப்பு | பங்கு | சேனல் |
---|---|---|---|
1999-2001 | குடும்பம் | சன் தொலைக்காட்சி | |
2000 | புஷ்பாஞ்சலி | சந்திரூ | |
2000-2001 | ஆனந்த பவன் | கிஷோர் | |
2000 | மைக்ரோ தொடர்கள்-ஒத்திகை | மருதுவர் | ராஜ் தொலைக்காட்சி |
2001-2003 | அலை ஒசை | சன் தொலைக்காட்சி | |
2003 | குங்குமம் | ||
2003-2005 | ஆடுகிறான் கண்ணன் | ||
2003-2009 | கோலங்கள் | பாஸ்கர் | |
2004-2007 | கல்கி | ஜெயா தொலைக்காட்சி | |
2005-2007 | ராஜா ராஜேஸ்வரி | சன் தொலைக்காட்சி | |
2005-2006 | மனைவி | ||
தீர்க்க சுமங்கலி | |||
செல்வங்கள் | |||
2006-2008 | செல்லமடி நீ எனக்கு | ||
2008-2010 | திருப்பாவை | ||
2009–2013 | செல்லமே | அன்புகுமார் (ஏ.கே) | |
2010 | மைதிலி | கலைஞர் தொலைக்காட்சி | |
2010–2012 | அனுபல்லவி | ராஜராமன் | சன் தொலைக்காட்சி |
2012 | தங்கம் | ரத்னன் | |
2012–2013 | வெள்ளைத் தாமரை | ||
மாயா | சந்திரசேகர் | ஜெயா தொலைக்காட்சி | |
2019–2020 | சாக்லேட் | சஞ்சய் குமார் | சன் தொலைக்காட்சி |
2021 - தற்போது | புதுப்புது அர்த்தங்கள் | ஹரி கிருஷ்ணன் | ஜீ தமிழ் |
- இயக்குநராக
ஆண்டு | தலைப்பு | அலைவரிசை |
---|---|---|
2020 | கண்மணி | சன் தொலைக்காட்சி |
மேற்கோள்கள்
- ↑ sify.com
- ↑ "I wish I had done more films before stepping into television: Abhishek Shankar". https://www.newindianexpress.com/entertainment/tamil/2020/jun/11/i-wish-i-had-done-more-films-before-stepping-into-television-abhishek-shankar-2154910.html.
- ↑ http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/my-first-breakabishek/article1138446.ece
- ↑ 4.0 4.1 http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/chasing-the-tinsel-dream-cablewala/article2245896.ece
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2021-07-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210709184219/http://www.kollywoodtoday.net/news/abhishek-becomes-a-producer-now/.
- ↑ "Archived copy" இம் மூலத்தில் இருந்து 9 April 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20140409054100/http://www.goergo.in/?p=2139.
- ↑ sify.com
- ↑ http://www.behindwoods.com/tamil-movie-news-1/nov-09-01/shaan-abhishek-kadhai-03-11-09.html
- ↑ http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/cop-story/article3460604.ece
- ↑ https://www.thehindu.com/entertainment/reviews/ka-pae-ranasingam-movie-review-a-sketchy-pay-per-view-film/article32759229.ece