அத்துவித சாரம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

அத்துவித சாரம் என்பது சாத்திரம் கூறும் ஒரு சிறுநூல்.

கமலை ஞானப்பிரகாசர் என்பவரால் பாடப்பட்டது.

இதில் காப்புச் செய்யுள் ஒன்றும் 60 விருத்தப் பாடல்களும் உள்ளன.

அத்துவிதமாய் தனக்குள் விளங்கும் மோனகுருவைத் தனக்கு ஞானம் நல்கும்படி இதன் காப்புச் செய்யுள் வேண்டுவது புதுமையாக உள்ளது.[1]

மாணவன் வினாவுக்குக் குரு விடை சொல்வது போலப் பாடல்கள் அமைந்துள்ளன.

உருவாகி அருவாகி ஒளியு மாகி
உள்ளாகி வெளியாகிப் புறம்பு மாகிக்
கருவாகிச் சராசரம்ஐம் பூதமாகி
காந்த தத் துவமாகிக் கண்டோர்க்(கு) அன்று
குருவாகி ஞானமுமாய்க் குணமுமாகிக்
கொண்டதோர் அத்துவித துவைத மாகி
அருளாகிச் சச்சிதா னந்தம் ஆகி
அன்பர்களின் மனமாகி ஆனவாறே.

இந்தப் பாடலில் இவரது ‘மெய்யுணர்வு’ புலனாகிறது.

  • நூலின் காலம் 16ஆம் நூற்றாண்டு.

கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 2, 2005

அடிக்குறிப்பு

  1. - முத்தர்மகிழ்
    மோனகுரு வாகிவரு முப்பொருளே இப்பொழுது
    ஞானமதை நன்குறவே நல்கு.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=அத்துவித_சாரம்&oldid=17092" இருந்து மீள்விக்கப்பட்டது