அத்தியூர்க் கோவை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

அத்தியூர்க் கோவை என்பது பெருமாள்மீது பாடப்பட்ட [[கோவை (இலக்கியம்) |கோவை]] நூல்.

இந்த நூலின் பாடல் ஒன்று இலக்கண விளக்கம் [1] என்னும் நூலுக்கு எழுதிய உரையில் [2] மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளது.

அடங்கா அசுரர் குலமறுத் தோர்அந்தி யூர்வென்றி
மடங்காத நேமி வரதர்தன் நாட்டில்தன் மைந்தனுடன்
முடங்காமல் அந்த மனைவியும் போய்முயன்(று) ஊரனுடன்
தடங்காவும் யாறும் குளனும்சென் றாள்தட வும்தக்கதுவே.
பாடல் சொல்லும் பொருள்
காஞ்சிபுரத்து அத்தியூர் வரதன் [3] நாட்டில் மனைவி ஊரனுடன் தடவு, யாறு, குளன் முதலானவற்றைக் கடந்துசென்றாள். இதுதான் அவளுக்குத் தக்க செயல்.
காலம்
இந்த நூலின் பா நடையையும், பாடற்பொருளையும் கருத்தில் கொண்டு எண்ணும்போது இது 15ஆம் நூற்றாண்டு தூல் எனலாம்.

கருவிநூல்

அடிக்குறிப்பு

  1. 17ஆம் நூற்றாண்டு
  2. பொருளதிகாரம் நூற்பா 90 உரை
  3. இக்காலத்துச் சின்னகாஞ்சி வரதராசப் பெருமாள்
"https://tamilar.wiki/index.php?title=அத்தியூர்க்_கோவை&oldid=16736" இருந்து மீள்விக்கப்பட்டது