அதே நேரம் அதே இடம்
அதே நேரம் அதே இடம் | |
---|---|
இயக்கம் | எம்.பிரபு |
தயாரிப்பு | ராம கிருஷ்ணன் |
கதை | எம்.பிரபு லலிதானந்த் (வசனம்) |
இசை | பிரேம்ஜி அமரன் |
நடிப்பு | ஜெய் விஜயலட்சுமி ராகுல் மாதவ் |
ஒளிப்பதிவு | ஸ்ரீ பவன் சேகர் |
படத்தொகுப்பு | ஜி.பி.வெங்கடேஷ் |
கலையகம் | லட்சுமி பிக்சர்ஸ் |
விநியோகம் | ஜமால் சினி கிரியேஷன்ஸ் |
வெளியீடு | நவம்பர் 6, 2009 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அதே நேரம் அதே இடம் (Adhe Neram Adhe Idam) என்பது 2009 ஆம் ஆண்டில் எம். பிரபு இயக்கத்தில் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஜெய் மற்றும் விஜயலட்சுமி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் 6 நவம்பர் 2009 அன்று வெளியானது.[1]
கதைச்சுருக்கம்
கார்த்திக்கும் (ஜெய்) ஜனனியும் (விஜயலக்ஷ்மி) காதல் செய்கிறார்கள். துவக்கத்தில் காதலிக்க தயங்கினாலும், கார்த்திக்கின் காதலை ஏற்கிறாள் ஜனனி. தனது படிப்பை முடிக்க, ஜனனியின் ஒப்புதலுடன் ஆஸ்திரேலியா செல்கிறான் கார்த்திக். கார்த்திக் ஊரில் இல்லா சமயத்தில், ஜனனிக்கு சிவா எனும் புது வரன் பார்க்கின்றனர் அவளது பெற்றோர். சிவா கார்த்திக்கை விட அழகிலும் பணத்திலும் உயர்ந்திருந்ததால், சிவாவை திருமணம் செய்ய ஒப்புக்கொள்கிறாள் ஜனனி.
படிப்பு முடிந்த பிறகு ஆஸ்திரேலியாவில் இருந்து ஊர் திரும்புகிறான் கார்த்திக். அவனுக்கு ஒரு புது மனிதரின் அறிமுகம் கிடைக்கிறது. அவர் தன் காதல் தோல்வி கதையை கார்த்திக்கிடம் சொல்கிறார். காதலில் ஏமாற்றும் பெண்களுக்கு, அவர்களது வாழ்க்கையை சீரழிப்பது தான் சரி என்ற அந்த புதிய மனிதரின் பேச்சைக் கேட்டு, ஜனனியை பல வழிகளில் துன்புறுத்துகிறான் கார்த்திக்.
அந்த புதிய மனிதர் தான் சிவா என்று தெரிய வந்து மனமுடைந்து போகிறான் கார்த்திக். சிவாவை பிடிக்காத ஜனனி கார்த்திக்கை நாடி வருகிறாள். ஜனனியின் காதலை கார்த்திக் எண்டுகொண்டானா? இறுதியில் சிவாவிற்கு என்னவானது? போன்ற கேள்விகளுக்கு விடை காணுதலே மீதிக் கதையாகும்.
நடிகர்கள்
- ஜெய் - கார்த்திக்
- விஜயலட்சுமி - ஜனனி
- ராகுல் மாதவ் - சிவா
- நிழல்கள் ரவி - கார்த்திக்கின் அப்பா
- லொள்ளு சபா ஜீவா - ஜீவா
- ரவி பிரகாஷ்
ஒலிப்பதிவு
லலிதா ஆனந்த் எழுதிய பாடல் வரிகளுக்கு, பிரேம்ஜி அமரன் இசை அமைத்தார்.[2]
பாடல்களின் பட்டியல்
- டோஷிபா
- முதல் முறை
- வெண்ணிலவு
- அது ஒரு காலம்
- நம்மூரு சென்னையில
மேற்கோள்கள்
- ↑ "Adhey Neram Adhey Idam Movie Review {2/5}: Critic Review of Adhey Neram Adhey Idam by Times of India". http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movie-reviews/Adhey-Neram-Adhey-Idam/movie-review/5218920.cms.
- ↑ "Adhe Neram Adhe Idam – All Songs – Download or Listen Free – Saavn". 13 March 2012. பார்க்கப்பட்ட நாள் 17 November 2018.