அதீன் பந்த்யோபாத்யாய
அதீன் பந்த்யோபாத்யாய | |
---|---|
அதீன் பந்தியோபாத்தியாய் | |
பிறப்பு | 1934 டாக்கா, பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 19.01.2019 கொல்கத்தா |
தேசியம் | இந்தியர் |
பணி | எழுத்தாளர் |
விருதுகள் | சாகித்திய அகாதமி விருது |
அதீன் பந்தியோபாத்தியாய் (Atin Bandyopadhyay, 1934 - சனவரி 19, 2019) வங்க எழுத்தாளர். 1934ல் கிழக்கு வங்கத்தில் டாக்கா அருகே உள்ள ரைனாடி கிராமத்தில் பிறந்தார்.[1] தந்தை அபிமன்யு பந்த்யோபாத்யாய. தாய் லாவண்யா பிரபா தேபி.
வாழ்க்கைக் குறிப்பு
கூட்டுக்குடும்பத்தில் பிறந்து வளர்ந்த அதீன் சோனார் கோவன் பானாம் பள்ளியில் கல்விகற்றார். பள்ளிநாட்களுக்கு பின் இந்தியாவுக்கு குடிபெயர்ந்தார். 1956ல் கல்கத்தா பல்கலையில் பட்டப்படிப்பை முடித்து ஆசிரிட்யப்பயிற்சி பெற்றார். வாகன ஓட்டுநராகவும் ஆசிரியராகவும் பணியாற்றினார். 1962 முதல் கல்கத்தாவில் வசிக்க ஆரம்பித்தார்
பெகாம்பூரில் இருந்து வெளிவந்த அபஸார் என்ற இதழில் 1952ல் முதல் கதை வெளியாகியது. மூன்று பாகங்களாக அவர் எழுதிய பிரிவினையின் கதையான இந்நாவல்தான் அவரது மிகச்சிறந்த படைப்பு. நீல்கண்ட் பக்கிர் கோன்சே (நீலகண்ட பறவையைத் தேடி) அதன் முதல் பகுதி. அலௌகிக் ஜலாஜன், இஸ்வரேர் பகன் ஆகியவை பிற பகுதிகள். நீலகண்ட பறவையைத் தேடி மட்டும் தமிழில் வெளிவந்துள்ளது
விருதுகள்
- பங்கிம் புரஸ்கார் 1998 .
- புலால்கா விருது 1993
- பிபூதிபூஷன் விருது 1991.
- மோடிலால் புரஸ்கார்
- தாராசங்கர் புரஸ்கார்
- நாராயண் கங்கோபாத்யாய சுதா புரஸ்கார்
- கேந்திர சாகித்ய அக்காதமி 2001
படைப்புகள்
- நீல்கண்ட்பக்கிர் கோஞ்சே
- அலௌகிக் ஜலஜன்
- இஸ்வரீர் பகன்
- அபாட்
- தேவி மகிமா
- சமுத்ர மனுஷ்
- நக்ன இஸ்வர்
- சேஷ் ட்ரிஷ்ய
- மனுஷெர் கர்பாரி
- மனுஷெர் ஹஹஹர்
- துஹ்ஸ்வப்ன
- எக்டி ஜலேர் ரேகா
- பஞ்சாக்னி
- உபேக்ஷா
- த்விதிய புருஷ்
- ருப்கதர் அங்டி
- உத்தப்
மேற்கோள்கள்
- ↑ "Atin Bandyopadhyay, 1934". LOC. பார்க்கப்பட்ட நாள் 15 July 2012.