அடவி (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அடவி
இயக்கம்ஜி. ரமேஷ்
தயாரிப்புகே. சாம்பசிவம்
திரைக்கதைதேன்மொழி
இசைசரத் ஜடா
நடிப்புவினோத் கிஷன்
அம்மு அபிராமி
ஒளிப்பதிவுஜி. ரமேஷ்
படத்தொகுப்புசதீஷ் குரோசுவா
கலையகம்சிறீ கிருஷ் பிலிம்ஸ்
வெளியீடுபெப்ரவரி 7, 2020 (2020-02-07)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அடவி ( Adavi ) என்பது 2020 ஆம் ஆண்டு வெளியான தமிழ் மொழி காதல் அதிரடித் திரைப்படமாகும். ஜி. ரமேஷ் இயக்கிய இப்படத்தில் வினோத் கிஷன், அம்மு அபிராமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்தின் தயாரிப்பாளர் சாம்பசிவம் எதிர்மறையான பாத்திரத்தில் அறிமுகமானார்.[1]

கதை

ஒரு மலையிலுள்ள பழங்குடியினர் பேராசை பிடித்த தோட்ட உரிமையாளரிடமிருந்து எவ்வாறு தங்கள் நிலத்தைக் காப்பாற்ற முயற்சிக்கின்றனர் என்பதே கதையாகும்.

நடிகர்கள்

தயாரிப்பு

முன்னதாக கல்லாட்டம் (2016) படத்தை இயக்கிய ஜி. ரமேஷ், முக்கிய நடிகர்கள் தவிர பல புதிய முகங்களைக் கொண்ட ஒரு படத்தில் ஒப்பந்தம் செய்தார். பணக்காரர்களுக்கும் பூர்வீக குடிமக்களுக்கும் இடையிலான நிலப் பிரச்சனையை மையமாக வைத்து இந்தப் படம் உருவானது. இப்படத்தின் படப்பிடிப்பு கோத்தகிரி அருகே உள்ள மேட்டுக்கல்லில் 20 நாட்களில் இரண்டு கட்டமாக படமாக்கப்பட்டது.[2]

ஒலிப்பதிவு

படத்துக்கு சரத் ஜடா இசையமைத்துள்ளார்.[3]

வெளியீடு

தி டைம்ஸ் ஆஃப் இந்தியா படத்திற்கு ஐந்தில் இரண்டு நட்சத்திரங்களைக் கொடுத்தது.[4] தி டெக்கன் குரோனிக்கள்படத்திற்கு அதே மதிப்பீட்டைக் கொடுத்து, ஒளிப்பதிவைப் பாராட்டி படத்தின் திரைக்கதையை விமர்சித்தது.[5]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=அடவி_(திரைப்படம்)&oldid=29930" இருந்து மீள்விக்கப்பட்டது