அக்கா பரதேசி சுவாமிகள்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

அக்கா சுவாமிகள் என்பவர் புதுச்சேரி வைத்திக்குப்பத்தில் ஜீவசமாதி அடைந்த சித்தர் ஆவார்.[1] இவரை குரு அக்கா சுவாமிகள், அக்கா பரதேசி சாமியார், அக்கா சித்தர் போன்ற பெயர்களில் அழைத்துவந்தனர்.

வரலாறு

சிறுவயதில் மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் போது, களிமண்ணால் விநாயகர் சிலை செய்து பூஜித்து மகிழ்ந்தார். அவருடைய விநாயகரை ஒரு பெண்ணும் வழிபட்டுள்ளார். தன்னுடைய பிள்ளையாரை வணங்கும் அப்பெண்ணின் செயலைக் கண்டு மகிழ்ந்து அப்பெண்ணின் கைகளில் முத்தம் தந்தார். அப்பெண்ணோ அக்கா வயதுடைய பெண்ணிற்கு முத்தம் கொடுத்தல் தகுமோ என கூறினாள். அதனை நினைத்து சிறுவனாக இருந்த அக்கா சாமியார் வருந்தினார். பின் பெண் இன்பத்திலிருந்து தன்னை விலக்கி அனைவரையும் அக்கா என அழைக்கலானார். இவர் அனைவரையும் அக்கா என அழைத்துவந்தமையால் அக்கா சுவாமிகள் என்று அழைக்கப்பட்டார்.

சமாதிக் கோயில்

இவர் 1872ம் ஆண்டு ஜீன் மாதம் ஜீவ சமாதி அடைந்தார். ஜீவ சமதாக் கோயிலில் அக்கா சுவாமிகளின் பிரதான சீடரான நாராயண சுவாமிகள் சன்னதியும் அமைந்துள்ளது. இவரது 110வது குருபூசையானது 2015ம் ஆண்டு நடந்தது. அந்நாளில் புதுச்சேரி முதல்வரான ரங்கசாமியும், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சித்துகள்

  • மீன்களை உயிர்ப்பித்தார்.
  • ஊழ்வினைத் தீர சுவாமிகளை சாப்பிட அழைக்கும் அன்பர்களிடமிருந்து ஒரு ரூபாயைப் பெற்று புதுவை சோலைத்தாண்டவ குப்பதில் இருந்த அச்சுக்கூடத்தார் வீட்டில் கொடுத்தார்.
  • யாழ்ப்பாணத்தில் செல்வந்தர் கேலிக்காக சுடச் சுட அன்னாபிசேகம் செய்தார். இருப்பினும் அதை பொருட்செய்யாமல் யோகத்தில் இருந்தார்.
  • கண்பார்வையை குருடருக்குத் தந்தார்.
  • தாசிகள் இருவர் சுவாமிகள் இல்லத்திற்கு அழைத்து சென்று உறவு கொள்ள முயன்றனர். அந்த வீடு இடிந்து நாசமாகியது.

ஆதாரங்கள்

"https://tamilar.wiki/index.php?title=அக்கா_பரதேசி_சுவாமிகள்&oldid=27948" இருந்து மீள்விக்கப்பட்டது