ஜீவசமாதி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

ஜீவசமாதி என்பது சித்தர்கள் தங்களுடைய இறப்பிற்கான காலத்தினை முன்பே அறிந்துகொண்டு அக்காலத்தில் மண்ணில் சமாதியை அமைத்து அதில் இருந்துகொள்கின்றனர்.[1] உயிருடன் சமாதிக்குள் புகுவதால் ஜீவசமாதி என்கின்றனர். இவ்வாறு ஜீவசமாதியடைந்த சித்தர்களுக்கு அவ்விடங்களில் ஆலயங்கள் அமைக்கப்பட்டு வழிபடப்படுகின்றன.

சொல்விளக்கம்

ஜீவனுள்ள சமாதி என்று பொருள்படும்படி ஜீவசமாதி என அழைக்கின்றனர்.

கோராக்கர் சித்தர் எட்டு இடங்களில் ஜீவசமாதி அடைந்துள்ளார்.[2]

பெரும்பாலான சித்தர்களின் ஜீவசமாதிகளில் சிவலிங்கம் பிரதிஸ்டை செய்யப்படுகிறது. அச்சிவலிங்கத்திற்கு முன்பு நந்தியும் வைக்கப்படுகிறது. பின்நாட்களில் சித்தர்களின் சியர்கள் விரும்பி அந்த நந்தியின் கீழ் சமாதியாகின்றனர்.

காட்டுப்புத்தூர் நாராயண பிரம்மேந்திரர் ஜீவசமாதி அடைந்த மடத்தில், அவருக்கு நேராக உள்ள நந்தியின் கீழ் நாராயண பிரம்மேந்திரரின் சிஸ்யை சமாதி அமைந்துள்ளது.

பதினெட்டு சித்தர்களின் ஜீவசமாதிகள்

  • அகஸ்தியர் - திருவனந்தபுரம்
  • கொங்கணர் - திருப்பதி
  • சுந்தரனார் - மதுரை
  • கரூவூரார் - கரூர்
  • திருமூலர் - சிதம்பரம்
  • தன்வந்திரி - வைதீஸ்வரன்கோவில்
  • கோரக்கர் - பொய்யூர்
  • குதம்பை சித்தர் - மாயவரம்
  • இடைக்காடர் - திருவண்ணாமலை
  • இராமதேவர் - அழகர்மலை
  • கமலமுனி - திருவாரூர்
  • சட்டமுனி - திருவரங்கம்
  • வான்மீகர் - எட்டிக்குடி
  • நந்திதேவர் - காசி
  • பாம்பாட்டி சித்தர் - சங்கரன்கோவில்
  • போகர் - பழனி
  • மச்சமுனி - திருப்பரங்குன்றம்
  • பதஞ்சலி - திருப்பட்டூர்

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ஜீவசமாதி&oldid=27996" இருந்து மீள்விக்கப்பட்டது