அக்கரை சுப்புலட்சுமி
அக்கரை சுப்புலட்சுமி (ஆங்கிலம்: Akkarai S. Subhalakshmi) இந்தியாவின் தமிழ்நாட்டின் நாகர்கோவில் அருகேயுள்ள சுசிந்திரம் ஊரின் அக்கரையைச் சார்ந்த பாரம்பரிய கருநாடக வயலின் இசைக் கலைஞர் ஆவார். இவரது சகோதரி சுவர்ணலதாவும் வயலின் இசைக்கலைஞர் ஆவார். இவரின் தந்தை அக்கரை சுவாமிநாதன் எனும் வயலின் இசைக்கலைஞர். சுப்புலட்சுமியின் தாத்தா சிவசுப்ரமணியன் வாய்ப்பாட்டு மற்றும் வயலின் இசைக் கலைஞர் ஆவார். இவர் கருநாடக சங்கீதப் பாடல்களும் இயற்றியுள்ளார்.[1]
இசைப் பணி
இவர் இந்தியா மட்டுமல்லாது உலகின் பல நாடுகளில் வயலின் இசைக் கச்சேரி செய்து வருகிறார். சிங்கப்பூர், ஐக்கிய அமெரிக்கா, கனடா. ஜெர்மனி, இத்தாலி, தென் கொரியா, இலங்கை, ஆஸ்திரேலியா உட்பட இன்னும் பல நாடுகளில் கச்சேரிகள் செய்து வருகிறார்.[2]
இவர் தனியாகவும் குழுவினரோடும் இசைக் கச்சேரிகள் செய்து வருகிறார். குழுக் கச்சேரிகளில் கருநாடக இசைப் பாடகர் பாலமுரளிகிருஷ்ணா, ஆர். கே. ஸ்ரீகண்டன், சித்ரவீணை ரவிகிரண், டி. வி. கோபாலகிருஷ்ணன், என். ரமணி ஆகியோருடைய நிகழ்ச்சிகளில் வயலின் வாசித்துள்ளார். இவர் கீரவாணி எனும் பெயரில் இசைத்தொகுப்பும் வெளியிட்டுள்ளார்.[2]
விருதுகள்
- கலா பூஷன் (Kala Bhushan)
- கலா ஶ்ரீ (Kala Shree)
- சங்கீத விஷாரதா (Sangeethavisharada)
- ராஜீவ் காந்தி புரஸ்கார் (Rajiv-Gandhi Puraskar)
- ராஜீவ் காந்தி இளையோர் விருது (Rajiv Gandhi Youth Award)
- இசைக்குயில் (Isai-Kuil)
- தில்லி மாநில விருது (Delhi State First Award)
- மியூஸிக் அகெடமி விருது (Outstanding young violinist award from The Music Academy (1999 and 2001))
- கவநத்தையீர்த்த குழந்தைக் கலைஞர் விருது (Inspiring Child Artist Award from Valayapatti Nadaayala (1999))
- விமரிசகர் கே.எஸ். மகாதேவன் விருது (Critic K.S. Mahadevan Award from Narada Gana Sabha (2000))
- சிறந்த கலைஞர் விருது (The Best Performance Award from The Music Academy (2000))
- சிறந்த வயனில் இசைக் கலைஞர் விருது (The Best Violinist Award from The Indian Fine Arts Society (2001))
- சிறந்த வயனில் இசைக் கலைஞர் விருது-சுஜாதா விகடனில் (The Best Violinist of the year 2001 has been awarded by the writer Sujatha in Anandha Vikatan)
- இளையோர் தகுதியாளர் விருது (The Youth Merit Award 2002 has been awarded by The Rotary Club of Madras Industrial City)
- இளையோருக்காக கலா பாரதி விருது (The Yuva Kala Bharathi Award has been awarded by Bharat Kalachar (2002).)
- உஸ்தாத் பிஸ்மில்லா கான் யுவ புரஸ்கார் விருது (The Ustad Bismillah Khan Yuva Puraskar award from the Sangeet Natak Akademy (2007))
- வாணி கலா நிபுணா (Vani Kala Nipuna (2012))
- கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு விருது (The Kalki Krishnamurthy Memorial Award (2007))
- சண்முக சிரோன்மணி விருது (The Shanmukha Shiromani Award)
- கலா ரத்னா விருது (Kala Rathna from The Cleveland Aradhana Committee, 2013)
இணையதளம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
- Of heritage, dreams and fulfilment, தி இந்து, செப்டம்பர் 7, 2007