அகத்தியர் ஞானம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

அகத்தியர் ஞானம் 16ஆம் நூற்றாண்டு நூல். இதன் நூலாசிரியர் அகத்தியர் 18 சித்தர்களில் ஒருவர். [1] [2] ஐந்து வகையான ஞானம் இதில் கூறப்பட்டுள்ளது. அவற்றுள் சில.

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா
மனமது செம்மையானால் மந்திரம் செம்மை யாமே

  • தான் என்ற தானே தான் ஒன்றே தெய்வம்
  • பண்ணான உன்னுயிர்தான் சிவமது ஆச்சு
  • பாரப்பா சிவன் வீடு போகும்போது பாழத்த பிணம் கிடக்குது என்பார், உயிர் போச்சு என்பார், ஆரப்பா அறிந்தவர்கள் ஆரும் இல்லை
  • மூச்சப்பா தெய்வம் என்றே அறியச் சொன்னார்
  • நான் என்றும் நீ என்றும் சாதி என்றும், நாட்டினார் உலகத்தோர் பிழைக்கத் தானே
  • உடலுயிரும் பூரணமும் ஆன்மா ஈசன்
  • கூடப்பா துரியம் எனும் வாலை வீடு, கூறரிய நாதர் மகேசுவரியே என்பார், நாடப்பா அவள்தனையே பூசை பண்ணு நந்தி சொலும் சிங்காரம் தோன்றும் தோன்றும்.

மேற்கோள்

  1. சித்தர் பாடல்கள், பிரேமா பிரசுரம், 1959, ஆறாம் பதிப்பு 1987
  2. மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 3, 2005
"https://tamilar.wiki/index.php?title=அகத்தியர்_ஞானம்&oldid=17041" இருந்து மீள்விக்கப்பட்டது