வேற்றுமையுருபு
வேற்றுமையுருபு - தமிழில் எட்டு வகையான வேற்றுமைகள் உள்ளன. அவை,
- முதலாம் வேற்றுமை அல்லது எழுவாய் வேற்றுமை
- இரண்டாம் வேற்றுமை
- மூன்றாம் வேற்றுமை
- நான்காம் வேற்றுமை
- ஐந்தாம் வேற்றுமை
- ஆறாம் வேற்றுமை
- ஏழாம் வேற்றுமை
- எட்டாம் வேற்றுமை அல்லது விளி வேற்றுமை
முதலாம் வேற்றுமை
முதலாம் வேற்றுமைக்கு உருபு கிடையாது.
- (எ-டு) மரம், மனிதன், பறவை.
இரண்டாம் வேற்றுமை
இரண்டாம் வேற்றுமையின் உருபு 'ஐ' ஆகும்.
- (எ-டு) மரத்தை, மனிதனை, பறவையை.
மூன்றாம் வேற்றுமை
மூன்றாம் வேற்றுமையின் உருபு 'ஆல்' ஆகும்.
- (எ-டு) மரத்தால், மனிதனால், பறவையால்.
நான்காம் வேற்றுமை
நான்காம் வேற்றுமையின் உருபு 'கு' ஆகும்.
- (எ-டு) மரத்திற்கு, மனிதனுக்கு, பறவைக்கு.
ஐந்தாம் வேற்றுமை
ஐந்தாம் வேற்றுமையின் உருபு 'இன்' ஆகும்.
- (எ-டு) மரத்தின், மனிதனின், பறவையின்.
ஆறாம் வேற்றுமை
ஆறாம் வேற்றுமையின் உருபு 'அது' ஆகும்.
- (எ-டு) மரத்தினுடையது, மனிதனது, பறவையினுடையது.
ஏழாம் வேற்றுமை
ஏழாம் வேற்றுமையின் உருபு 'கண்' ஆகும்.
- (எ-டு) மரத்தின்கண், மனிதன்கண், பறவையின்கண்.
எட்டாம் வேற்றுமை
எட்டாம் வேற்றுமைக்கும் உருபு கிடையாது. இது, 'ஐயோ', 'ஆகா' போன்ற விளிச் சொற்களையே கொண்டு வரும்.
- (எ-டு) ஓ மரமே, ஓ மனிதனே, ஓ பறவையே.