வேதங்கள் (Vedas) என்பவை பொதுவாக இந்து சமயத்திலுள்ள அடிப்படையான நூல்களில் சிலவாகும். காலத்தால் முற்பட்டதும் ஆகும். வேதம் என்னும் சொல் பிற மதத்தாரும் தங்கள் சமயத்தின் முதன்மையான நூல்களுக்குப் பயன்படுத்துகின்றனர். பொ.ஊ.மு. 5000 ஆண்டுகளுக்கு முன்னரும் இந்துக்களின் வேதங்கள் இன்றிருப்பது போலவே இருந்தது என்று பண்டித பால கங்காதர திலகர் நிரூபித்துள்ளதாக சுவாமி விவேகானந்தர் குறிப்பிட்டுள்ளார்.[3]

வேதம்
Four vedas
நான்கு வேதங்கள்
தகவல்கள்
சமயம்இந்து சமயம்
மொழிவேத மொழி
காலம்அண். 1500–1200 பொது ஊழி (இருக்கு வேதம்),[1][note 1]
அண். 1200–900 பொது ஊழி
(யசுர் வேதம்,
சாம வேதம்,
அதர்வண வேதம்)[1][2]
வரிகள்20,379 மந்திரங்கள்
முழுமையான உரை
The Vedas ஆங்கில விக்கிமூலத்தில்
இந்து மதத்தின் பண்டைய சமசுகிருத வேத நூல். மேலே: அதர்வண வேதத்திலிருந்து ஒரு பகுதி.

சொற்பிறப்பியல்

இந்து மதத்தில், வேதம் என்ற சொல் வித் என்ற வடமொழிச் சொல்லை வேராகக் கொண்டது. வித் என்றால் சமசுகிருதத்தில் அறிதல் என்று பொருளாகும். வேதங்கள் என்பதற்கு ’‘உயர்வான அறிவு’’ என்றும் பொருள்படும்.

வேதங்களின் வகைகள்

இந்து சமயத்துக்கு அடிப்படையானவை நான்கு வேதங்கள் ஆகும். இருக்கு, யசுர், சாம, அதர்வண வேதம் ஆகியவை தான் அடிப்படையில் வேதங்களாகக் கருதப்பட்டன. அதர்வணத்தை தீமை என்று கருதினார்கள். பிற்காலத்தில் தான் அது நான்காவது வேதமாகச் சேர்க்கப்பட்டது. இவை தமிழில் நான்மறை என்றும் கூறப்படும். என்றாலும் தமிழில் நான்மறை என்பன வேறானவை என்போரும் உள்ளனர் (இவை அறம், பொருள், இன்பம், வீடு என்பர்). சமசுக்கிருத வேதங்கள்:[4][5]

என்பனவாகும். வேதங்கள் நான்கு என வகுத்தவர் வியாசர். வேதங்களை "சுருதி, மறை" எனவும் கூறுவர்.

வேதங்களின் நான்கு பாகங்கள்

வேதங்களுக்கு நான்கு பாகங்கள் உண்டு. அவையானவை:

  1. சம்ஹிதை - தொகுப்பு; "மந்திரங்கள்" (கடவுளால் தரப்பட்டவையாக கருதப்படும் பாடல்கள்)
  2. பிராமணம் எனப்படும் உரை அல்லது சடங்கு வழிமுறைகள்
  3. ஆரண்யகம் எனப்படும் காட்டில் வாழும் முனிவர்களின் உரைகள்
  4. உபநிடதங்கள் (வேதங்களுக்கான தத்துவ உரைகள்/ விளக்கங்கள்/ எதிர்ப்புக்கள்) ; இவை வேதத்தின் முடிவில் வருவன வேத அந்தம் (முடிவு) என்னும் பொருளில் வேதாந்தம் எனப்படும்.

வரலாறு

வேதங்களில் பல்வேறு கடவுள்களைப் புகழ்ந்து இந்த பாடல்கள் புனையப்பட்டிருக்கின்றன. சடங்குகளின் போது பின்பற்றப்படுவதற்காக பல்வேறு விவரங்கள் யஜூர் வேதத்தில் குறிப்பிடப்படுகின்றன. சடங்குகளின் போது இசைப்பதற்காகவே சாம வேதம் இயற்றப்பட்டதாகும். சாம வேதத்திலிருந்தே இந்திய இசை தோன்றியதாகவும் கூறப்படுகின்றது. அதர்வண வேதமும் சடங்குகளைப் பற்றியே குறிப்பது ஆகும்.

இவற்றுள் காலத்தால் முற்பட்டது ரிக் வேதமாகும். இது இந்தியாவில், பொ.ஊ.மு. 1500விற்கு முன் உருவாகியிருக்கக்கூடுமெனக் கருதப்படுகின்றது. வேதங்கள் இன்றளவும் வாய்வழியாகவே வழங்கிவந்துள்ளன. ஏறத்தாழ பொ.ஊ.மு. 300 ஆம் ஆண்டளவில் எழுத்துவடிவம் பெற்றிருக்கக்கூடும்[மேற்கோள் தேவை] எனக் கருதப்படுகின்றது என்றாலும் வாய்வழியாகவே தலைமுறை தலைமுறையாக நிலைபெற்று வந்துள்ளது. விசய நகரப் பேரரசை ஆண்ட முதலாம் ஹரிஹரர் காலத்தில் வாழ்ந்த சாயணாச்சாரியர் (सायण) என்னும் 14 ஆவது நூற்றாண்டு காலத்து வேத அறிஞர், வேதத்தின் பொருளை விளக்கி எழுதிய, வேதார்த்த பிரகாசா (Vedartha Prakasha) என்னும் நூலே முதன்முதலாக எழுத்து வடிவில் கிடைக்கும் வேதங்களாகும்.

இதன் சமய முக்கியத்துவம் தவிர, உலகின் மிகத் தொன்மையான நூல்களிலொன்று என்ற வகையிலும் இதற்கு முக்கியத்துவம் உண்டு. வழிபாடு, சமயக் கிரியைகள் முதலியவற்றை சில இடங்களில் உரைநடையிலும், மற்ற இடங்களில் ரிக் என்று சொல்லப்படும் வேதகால செய்யுள்நடையிலும் எடுத்துக் கூறும் வேதங்கள், அக்கால சமூக வாழ்க்கையையும் படம்பிடித்துக் காட்டுகின்றன.

தொடரின் ஒரு பகுதி
இந்து தொன்மவியல்

 
மூலங்கள்

வேதங்கள் · உபநிடதம்  · பிரம்ம சூத்திரம்  · பகவத் கீதை · புராணங்கள் · இதிகாசங்கள்

வேத தொன்மவியல்

ரிக் வேதம் · சாம வேதம் · யசூர் வேதம் · அதர்வண வேதம்

இராமாயணம் · மகாபாரதம்

திருப்பாற்கடல் · வைகுந்தம்  · கைலாயம்  · பிரம்ம லோகம்  · இரண்யகர்பன்  · சொர்க்கம் · பிருத்வி  · நரகம் · பித்துரு உலகம்

மும்மூர்த்திகள் · பிரம்மன் · திருமால் · சிவன் · சரஸ்வதி  · திருமகள்  · பார்வதி · விநாயகர் · முருகன்

புராண - இதிகாச கதைமாந்தர்கள்

சனகாதி முனிவர்கள்  · பிரஜாபதிகள்  · சப்த ரிசிகள் · பிருகு · அத்திரி  · கௌதமர் · காசிபர் · வசிட்டர் · அகத்தியர் · ஜமதக்கினி  · தட்சன் · வால்மீகி · அரிச்சந்திரன்  · ராமர் · சீதை · இலட்சுமணன் · அனுமான்  · இராவணன்  · புரூரவன்  · நகுசன்  · யயாதி  · பரதன்  · துஷ்யந்தன் · வியாசர்  · கிருஷ்ணர்  · பீஷ்மர் · பாண்டவர்கள்  · கர்ணன்  · கௌரவர்  · விதுரன்  · பாண்டு  · திருதராட்டிரன் காந்தாரி  · குந்தி ·


பொ.ஊ. 14 ஆவது நூறாண்டில் வாழ்ந்த சாயனர் (சாயனாச்சார்யர்) வேதத்திற்கு விரிவான விளக்கம் எழுதியுள்ளார். இருக்கு வேதத்தில் 1028 சுலோகங்கள் உள்ளன (10522 மந்திர வரிகள்), மற்றும் அதற்குரிய பிராமணிய சடங்குகள், காடுவாழ் முனி உரை, உபநிடத தத்துவ உரை ஆகியவை உண்டு. வெள்ளை (சுக்ல) யசுர் வேதத்திற்கு எழுதப்பட்ட சதபத பிராமணம் என்னும் உரைநூல் தான் பழமையானதும், மிக முக்கியமானதும் ஆகும். இந்த 100 வழி என்னும் பொருள் படும் சதபத பிராம்மணம் சுமார் பொ.ஊ.மு. 700-800 வாக்கில் எழுதப்படிருக்கலாம் என கருதப்படுகின்றது.

முதல் இரண்டு பாகங்களும் "கர்ம கண்டங்களாகவும்", அதாவது செயலுக்கு (ஓதுவதுக்கும், சடங்குக்கும்) அல்லது அனுபவத்துக்குரியவையாகவும், கடைசி இரண்டும் மெய்ப்பொருள் உணர்வதற்குத் துணையான வேதாந்த பாகங்களாகவும் வகைப்படுத்தப்படுவதுண்டு.வேதாந்தம் என்றால் வேதத்தின் இறுதியில் வந்த கடைசி பாகம் என பொருள்படும். இதனை ஞான காண்டம் என்பர். நான்கு பாகங்களும் ஒரு நபராலோ அல்லது ஒரே குழுவாலோ அல்லது ஒரே காலத்திலோ எழுதப்படவில்லை. குறிப்பாக உபநிடதங்கள் முதல் இரண்டு பாகங்களுக்கும் பல எதிர்ப்புக்களையும், மறுப்புக்களையும் தெரிவிக்கின்றது.

கடவுள் கோட்பாடு

வேதகால கடவுட்கோட்பாடு முற்பட்ட கால  கடவுள் கோட்பாடு, இடைபட்ட காலகடவுட்கோட்பாடு, பிற்பட்ட கால கடவுட் கோட்பாடு என மூன்று வகையாக நோக்கப்படுகின்றது. ஆரம்ப காலத்தில் வேதகால மக்கள் இயற்கை சக்திகளை வெல்லவோ, விளங்கவோ முடியாதவர்களாக காணப்பட்டனர். இடி,மின்னல்,மழை,புயல் போன்ற இயற்கையின் ஒவ்வொரு செயலையும் தமக்கு மேற்பட்ட சக்தியாகக் கருதினர். எனவே வேதகால மனிதன் பயத்தின் அடிப்படையில் இயற்கையை கடவுளாக வழிபட முனைந்ததோடு வேதகால கடவுள் கோட்பாடும் உதயமாயிற்று.

இயற்கையை வழிபட்ட மனிதன் அவ் இயற்கை சக்திகளுக்கு இறைநிலை கொடுத்து பல்வேறு பெயர்கள் சூட்டி வழிபடத் தொடங்கினான்.இவ்வாறு இருக்கு வேதகாலத்தில் 33 தெய்வங்கள் வணங்கப்பட்டதாக கூறப்படுகின்றது. இத் தெய்வங்களை மண்ணுறை தெய்வங்கள், விண்ணுறை தெய்வங்கள், இடைநிலை தெய்வங்கள் என ஆய்வாளர்கள் மூன்று வகையாக பிரித்து நோக்குகின்றனர். இவற்றுள் இந்திரன், வருணன், அக்கினி, உருத்திரன், விஷ்ணு முதலிய தெய்வங்கள் குறிப்பிடத்தக்கன.

இருக்கு வேதகாலத்திலே பல தெய்வங்கள் வழிபட்டமை மறுக்கமுடியாத உண்மை. இருப்பினும்ஒவ்வொரு தேவைக்கும் அவர்கள் ஒவ்வொரு தெய்வத்தை வழிபட்டமை காணமுடிகின்றது. அவ்வேளை அந்த ஒரு தெய்வமே எல்லாவற்றிலும் உயர்ந்த மேலான தெய்வமாகக் கருதப்படுகின்றது. இவ்வாறு இடைப்பட்ட வேதகாலத்தில் தேவைகேற்ப ஒரு தெய்வத்தை முதன்மைப் படுத்தி வழிபடுகின்ற ஒரு தெய்வ கோட்பாடு தோன்றியது.

இருக்கு வேதம் 10ம் மண்டலத்தில் சந்தேகத்திற்கிடமான ஒரு வினா காணப்படுகின்றது. நாம் யாருக்கு நமது அவி பாகத்தை செலுத்துவோம்? எல்லாவற்றிலும் உயர்ந்ததும் மேலானதுமான தெய்வம் எது?’’ என்று கேட்கபட்டன. அதற்கு “பிரஜாபதியே எல்லாவற்றிலும் உயர்ந்ததும் மேலானதுமான தெய்வம்.அவருக்கே உங்கள் அவிபாகத்தைக் கொடுங்கள்” என்று கூறப்படுகின்றது. இதுவும் இருக்கு வேதகால ஒரு தெய்வ கோட்பாட்டிற்கான ஒரு ஆதாரமாகும்.

இடைப்பட்ட வேதகால ஒரு தெய்வ கோட்பாட்டிலிருந்து மேற்பட்டதாக ஒரு பொருள் கோட்பாடு பிற்பட்ட வேதகாலத்தில் தோன்றியது. இருக்குவேதம் 10 மண்டலத்தில் ‘’ உள்பொருள் ஒன்று அதனை பலவென்று அழைப்பர்” எனப் பொருள்படும். “ஏகம் சத் விப்ரா பகுதா வதந்தி’’ என்ற கூற்று காணப்படுகின்றது.மேலும் இங்கு பலவற்றிலும் வலிமை வாய்ந்தது ஒன்று என்ற கூற்றும் காணபடுகின்றது. புருஷன் ஒருவனே எல்லாவற்றிலும் இருக்குறான். இருந்தான், இருப்பான் போன்ற மகாவாக்கியங்கள், உள்பொருள் ஒன்று என்பதை விளக்குகின்றன.

இவ்வாறு உள்ள பொருளை பிற்காலத்தில் பிரமம் என்றும் பரமாத்மா என்றும் அழைக்கப்பட்டது. வேதாந்தம் ,சித்தாந்தம், உபநிடத தத்துவங்கள் தோன்றுவதற்கும் இதுவே வழிசமைத்தது.

முந்தைய வேதம் - ரிக் வேதம்

இது முந்தைய வேதகாலம் என்றும் அழைக்கப்படுகிறது.[6] இதன் காலம் பொ.ஊ.மு. 2200 முதல் பொ.ஊ.மு. 1600 வரை ஆகும். ரிக் வேதத்தில் 10600 பாடல்கள் பாடப்பட்டுள்ளன. ரிக் வேத காலத்தில் ஆரியர்கள் சிந்து சமவெளி பகுதியில் வாழ்ந்து வந்துள்ளனர். இப்பாடல்கள் ரிக் வேத மக்களின் வாழ்க்கைமுறை, அரசியல், பழக்கங்கள் ஆகியவற்றை தெளிவாக கூறுகின்றது. மேய்ச்சலே ரிக் வேதகால மக்களின் முக்கிய தொழிலாகும். ரிக் வேத மக்கள் தச்சு வேலைகளும் செய்துள்ளனர். மண்வேலைகள் செய்வது, நூல் நூற்றல், பருத்தி கம்பளி உடைகள் தயாரிப்பது ஆகியன ரிக்வேத கால மக்களின் உப தொழிலாக இருந்துவந்துள்ளன. மேலும் வேதங்கள் மக்களின் கடவுள்களைப் பற்றியும் அதிக தகவல்கள் தருகின்றன. ரிக் வேத மக்கள் இந்திரனையும், அக்னியையும் முதற்கடவுளாக வழிபட்டுவந்துள்ளனர்.[7]

பிந்தைய வேதங்கள்

பிந்தைய வேத காலங்களில் ஆரியர்கள் கிழக்கு நோக்கி நகர்ந்துள்ளனர். இக்குறிப்புகளை பிந்தைய வேதங்கள் குறிப்பிடுகின்றன. பிந்தைய வேத காலங்களில் அவர்களின் நம்பிக்கை, பழக்கவழக்கங்களும் மாற்றம் பெற்றுள்ளன. முந்தைய வேதகாலங்களில் கடவுளான இயற்கையை விட சிவன், பிரம்மன், விஷ்ணு ஆகியோரை வழிபட்டு வந்துள்ளனர்.

யசுர் வேதம்

இது பிந்தைய வேதங்களில் ஒன்று ஆகும். இதன் காலம் பொ.ஊ.மு. 1400 முதல் பொ.ஊ.மு. 1000 வரை ஆகும்.

சாம வேதம்

இதுவும் பிந்தைய வேதங்களில் ஒன்று ஆகும்.சடங்குகளின் போது இசைப்பதற்காகவே சாம வேதம் இயற்றப்பட்டதாகும். சாம வேதத்திலிருந்தே இந்திய இசை தோற்றியதாகவும் கூறப்படுகின்றது.

அதர்வண வேதம்

அதர்வண வேதம் இறுதியான வேதமாகும். இதனை நான்காவது வேதம் என்றும் கூறுவர். அதர்வண வேதமும் சடங்குகளைப் பற்றியே குறிப்பது ஆகும்.

வேத இலக்கியங்கள்

நான்கு வேதங்களைத் தவிர பிராமணங்கள், உபநிடதங்கள், ஆரண்யங்கள் மற்றும் இதிகாசங்களான இராமாயணம், மகாபாரதம் ஆகிய அனைத்தும் வேத இலக்கியங்களில் அடங்குவனவாகும். வழிபாடுகள் மற்றும் வேள்விகள் குறித்த விளக்கங்கள் பிராமணங்களில் கூறப்பட்டுள்ளன. ஆன்மா, பிரம்மம், உலகின் தோற்றம், இயற்கை பற்றிய விளக்கங்களை உபநிடதங்கள் கூறுகின்றன.

திறனாய்வு

இந்து மதம் பற்றிய பல ஆய்வாளர்கள் இந்து மதம் அனைத்து சமகால மதங்களின் கூறுகளையும் ஏற்றுக்கொள்கிறது என்றும்,[8] இந்து மதத்தின் வேத புராணங்கள் உட்பட பல வசனங்களில் ப பத்த மதம் த்தம், சமண மதம் மற்றும் சீக்கியம் ஆகிய கூறுகள் உள்ளன என்றும், கணிசமான அளவு கிரேக்க மற்றும் ஜோராஸ்ட்ரியனிசம் போன்ற மதக் கூறுகளை ஏற்றுக்கொண்டதாகவும் கூறுகின்றனர். அவெஸ்டா. இஸ்லாமிய நபி முஹம்மதுவின் தீர்க்கதரிசனம்), இந்திரனிலிருந்து இந்திரன் வரை, கந்தரேவாவிலிருந்து காந்தர்வா வரை, வஜ்ரா, வாயு, மந்திரம், யாம், அஹூதி, ஹுமாதா முதல் சுமதி வரை.[9][10]

இவற்றையும் பார்க்கவும்

குறிப்புகள்

  1. ரிக் வேதத்தின் பாசுரங்கள் காலத்திற்குப் பிந்தையவை. (தொல்-இந்தோ-ஈரானியன் என்பது உறுதி) கிமு 2000 மற்றும் கிமு 1400 இன் தொடர்புடைய மிட்டானி ஆவணங்களின் பிரிப்பு. கிடைக்கக்கூடிய பழமையான உரை கிமு 1200 ஆம் ஆண்டைச் சேர்ந்தது என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மொழியியல் மதிப்பீடுகள் உரையின் பெரும்பகுதியை இரண்டாம் ஆயிரமாண்டின் இரண்டாம் பாதியில் தேதியிட முனைகின்றன:

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 Witzel 2003, ப. 69.
  2. 2.0 2.1 Flood 1996, ப. 37.
  3. எனது பயணம்; ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை; பக்கம் 109
  4. The Vedas
  5. The Vedas
  6. வரலாறு பாடப்பகுதி பதினொன்றாம் வகுப்பு.பக்கம்-22
  7. Rig Veda
  8. Swamy, Subramanian (2006). Hindus Under Siege: The Way Out (in English). Har-Anand Publications. p. 45. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-241-1207-6. பார்க்கப்பட்ட நாள் 21 January 2021.
  9. Muesse, Mark W. (2011). The Hindu Traditions: A Concise Introduction (in English). Fortress Press. p. 30-38. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4514-1400-4. பார்க்கப்பட்ட நாள் 21 January 2021.
  10. Griswold, H. D.; Griswold, Hervey De Witt (1971). The Religion of the Ṛigveda. Motilal Banarsidass Publishe. p. 1-21. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-0745-7. பார்க்கப்பட்ட நாள் 21 January 2021.
  11. Müller 1892.
  12. Witzel 1995, ப. 4.
  13. Anthony 2007, ப. 454.
  • சோ.ந.கந்தசாமி. (2004). இந்திய தத்துவக் களஞ்சியம். சிதம்பரம்: மெய்பப்பன் பதிப்பகம்.

வெளி இணைப்புகள்


"https://tamilar.wiki/index.php?title=வேதம்&oldid=130512" இருந்து மீள்விக்கப்பட்டது