வெள்ளச்சி (திரைப்படம்)

வெள்ளச்சி என்பது 2013 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ் மொழி திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தினை வேலு விஸ்வநாத் எழுதி இயக்கினார். இந்த படத்தில் பிரபல நடிகர் பாண்டுவின் மகன் பிந்து நாயகனாக அறிமுகம் ஆனார். சுசித்ரா உன்னி நாயகியாகவும், பாண்டு, கஞ்சா கருப்பு போன்றோர் துணை நடிகர்களாகவும் நடித்துள்ளனர். இது 1 மார்ச் 2013 அன்று வெளியிடப்பட்டது.

வெள்ளச்சி
இயக்கம்வேலு விஷ்வநாத்
தயாரிப்புஆம்பூர் கே. ஆனந்தன் நாயுடு
கதைவேலு விஷ்வநாத்
இசைபவதாரிணி
நடிப்பு
  • பிந்து
  • சுசித்ரா உன்னி
ஒளிப்பதிவுசாய் நடராஜ்
படத்தொகுப்புஹரி பழனிவேல்
கலையகம்கீதாலையா மூவிஸ்
வெளியீடு1 மார்ச்சு 2013 (2013-03-01)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதை

பால் மற்றும் டீ விற்கும் நபரான கணேஷ் ஒழுக்கமான இளைஞராக இருக்கிறார். காலை மாலையில் பால் வியாபாரம் செய்வதும், இடைப்பட்ட நேரத்தில் பள்ளி மற்றும் வேலையிடங்களுக்கு சைக்கிளில் சென்று டீ விற்பதுமாக இருக்கிறார். ஆனால் கணேசின் தந்தை தனது அதிகபடியான வருமானத்தை ஊர் பெண்களிடம் தந்து உல்லாசமாக இருக்கிறார். இதனை கண்டிக்கும் கணேஷை அவருக்கு பிடிப்பதில்லை.

அந்த ஊருக்கு புதியதாக குடியேரும் நாயகி வெள்ளச்சி மற்றும் அவரது தந்தை கணேஷிக்கு பழக்கமாகிறார்கள். நாயகி வெள்ளச்சியும், நாயகன் கணேசும் சாலையில் சேர்ந்து பேசுவதைப் பார்த்து அவரின் மீது பணத்திருட்டு புகார் செய்கிறார் கணேஷின் தந்தை. அதனால் கணேஷ் ஊரைவிட்டு சென்று பிழைக்கலாம் என இருக்கிறார்.

பயணம் செய்யும் பேருந்தில் கணேஷ் ரியல் எஸ்டேட் ஓனர் ஒருவரை சந்திக்கின்றார். அவரைப் போல தானும் நிலங்களை வாங்கி விற்கும் வேலை செய்யலாம் என யோசனை வந்து மீண்டும் ஊருக்கே செல்கிறார். ரியல் எஸ்டேட் தொழிலில் பெரிய பணக்காரர் ஆகிறார். தனது மாமன் கஞ்சா கருப்பையும் உடன் வைத்துக் கொள்கிறார். நாயகி வெள்ளச்சி மேல் படிப்பிற்கு உதவிகிறார். இருவருக்கும் காதல் மலர்கிறது. இறுதியாக நாயகன், நாயகி இருவரின் தந்தைகளும் காதலுக்கு எதிராக நின்று சதிதிட்டம் தீட்டுகின்றனர். அதன்படி நாயகி வெள்ளச்சியிடம் காதலுக்கு சம்மதம் தெரிவிக்கும் அவரின் தந்தை அதைக் கொண்டாட இனிப்பு வாங்கி தந்து அதில் விஷம் வைத்து விடுகிறார். நாயகன் இறந்துவிட, நாயகியை கணேஷின் பாட்டி கொல்கிறார் எனக் கதை முடிகிறது.

நடிப்பு

தயாரிப்பு

வெள்ளச்சியை எழுதி இயக்கியவர் வேலு விஸ்வநாத், மற்றும் கீதாலயா மூவிஸ் சார்பில் ஆம்பூர் கே.அனந்தன் நாயுடு தயாரித்தார். இந்த படம் நடிகர் பாண்டுவின் மகன் பிந்துவின் நடிப்பில் அறிமுகமானது. சாய் நட்ராஜ் ஒளிப்பதிவு செய்தார். முதன்மை புகைப்படம் எடுத்தல் ஜூன் 2012 இல் தொடங்கியது.[1] வேலூர், வாணியம்பாடி, பாலமதி, ஏலகிரி மற்றும் கிருஷ்ணகிரி போன்ற இடங்களில் நடைபெறுகிறது.[2] டிசம்பர் 2012 நிலவரப்படி, படம் போஸ்ட் புரொடக்‌சனில் இருந்தது.

ஒலிப்பதிவு

ஒலிப்பதிவு பவதாரிணியால் இயற்றப்பட்டது.[3] இளக்கணம் (2006) க்குப் பிறகு அவர் மீண்டும் இசையமைப்பிற்கு திரும்பினார்.

வெளியீடு மற்றும் வரவேற்பு

வெள்ளச்சி 1 மார்ச் 2013 அன்று வெளியிடப்பட்டது.[4] தொடக்கக் காட்சிகள் மெதுவாக நகர்ந்தாலும், கதையின் பிற்பகுதி காதல் மற்றும் மோதல்களுடன் வேகமாக இருந்தது என்று மாலை மலர் எழுதினார். சாய் நட்ராஜின் ஒளிப்பதிவு மற்றும் பவதாரிணி இசையமைத்த பாடல்களையும் விமர்சகர் பாராட்டினார். டைம்ஸ் ஆஃப் இந்தியாவைச் சேர்ந்த சித்தார்த் வர்மா எழுதினார், "கிராமப்புற கருப்பொருள்களைக் கொண்ட தமிழ் திரைப்படங்கள் பல அறிமுகமானவர்களுக்கு ஒரு அடையாளத்தை உருவாக்க உதவியது, ஆனால் துரதிர்ஷ்டவசமாக நகைச்சுவை நடிகர் பாண்டுவின் மகன் பிந்துவுக்கு வேள்ளச்சி வேலை செய்யவில்லை. ஸ்கிரிப்ட் மற்றும் வேகத்தில் திரைப்படம் பல முரண்பாடுகளால் பாதிக்கப்படுகிறது. "

படத்தின் தொடக்கத்தில் எய்ட்ஸ் நோய் பாதிப்பு குறித்தான பாடல் அனைவரின் கவனத்தையும் பெற்றது.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=வெள்ளச்சி_(திரைப்படம்)&oldid=37789" இருந்து மீள்விக்கப்பட்டது