விஜய் வசந்த்

விஜய் வசந்த் (Vijay Vasanth) (பிறப்பு: மே 20, 1983) ஓர் இந்திய திரைப்பட நடிகர் மற்றும் மாதிரிஅழகர் (model). இவர் புகழ்பெற்ற வணிக நிறுவனமான வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன் ஆவார்.[1]. இவர் தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் வசந்த் & கோவின் நிர்வாக இயக்குநராக உள்ளார்.[2] இவர் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் ஆவார்.[3]

விஜய் வசந்த்
Vijay Vasanth at the Velaikkaran Audio Launch.jpg
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2 மே 2021
முன்னவர் எச். வசந்தகுமார்
தொகுதி கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி
தனிநபர் தகவல்
பிறப்பு விஜயகுமார் வசந்தகுமார்
(1983-05-20)20 மே 1983
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
வாழ்க்கை துணைவர்(கள்) நித்யா
பிள்ளைகள் 2
பெற்றோர் எச். வசந்தகுமார்
ஜெப்ரீன் ஜெ
இருப்பிடம் நடேசன் தெரு, தி.நகர், தமிழ்நாடு - 600017
பணி அரசியல்வாதி, வணிகம், நடிகர்

தனிப்பட்ட வாழ்க்கை

விஜய் வசந்த் மே 20, 1983 சென்னையில் பிறந்தார். இவரின் தந்தை எச். வசந்தகுமார் .இவர் வசந்த்& கோவின் நிறுவனத் தலைவர் ஆவார். மேலும் இவர் இந்திய தேசிய காங்கிரசு சார்பாகத் தேர்தலில் போட்டியிட்டு கன்னியாகுமரி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.[4][5]

தொழில் வாழ்க்கை

இவரின் தந்தை எச். வசந்தகுமார், வசந்த்& கோ எனும் நிறுவனத்தை 1978 ஆம் ஆண்டில் துவங்கினார். தற்போது இந்த நிறுவனம் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் கேரளம் ஆகிய மாநிலங்களில் மொத்தம் 71 கிளைகள் கொண்டுள்ளன. இந்த நிறுவனம் 2016 ஆம் ஆண்டில் சுமார் 1000 கோடி ரூபாய் அளவிற்கு விற்பனை செய்துள்ளது. விஜய் வசந்த் தற்போது வசந்த் & கோவின் நிர்வாக இயக்குநராக உள்ளார்.[2] இவரின் தந்தை வசந்த் தொலைக்காட்சியை 2008 ஆம் ஆண்டில் தொடங்கி நடத்தி வருகிறார்.[6]

திரை வாழ்க்கை

2007

2007 ஆம் ஆண்டில் சென்னை 600028 எனும் திரைப்படத்தில் இவர் அறிமுகமனார். இந்தத் திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கினார். இந்தத் திரைப்படத்தில் ஜெய், சிவா, பிரேம்ஜி அமரன்,இளவரசு, விஜயலட்சுமி (நடிகை) ஆகியோர் முக்கியக் கதாப்பத்திரத்தில் நடித்தனர். இந்தத் திரைப்படத்தை எஸ். பி. பி. சரண் மற்றும் சிங்கப்பூரில் சிறந்த தயாரிப்பாளருக்கான விருது பெற்ற ஜே கே சரவணா ஆகியோர் இணைந்து தயாரித்தனர்.[7] இதற்கு யுவன் சங்கர் ராஜா மற்றும் பிரேம்ஜி அமரன் ஆகியோர் இசையமைத்த இந்தத் திரைப்படம் ஏப்ரல் 27, 2007 இல் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. மேலும் விஜய் வசந்த், கோபி எனும் கதாப்பத்திரத்தில் நடித்திருந்தார்.

இதே ஆண்டில் தோழா எனும் திரைப்படத்தில் நடித்தார். இந்தத் திரைப்படத்தை இந்தத் திரைப்படத்தை சுந்தரேஷ்வரன் என்பவர் இயக்கினார். இந்தத் திரைப்படத்தில் நிதின் சத்யா, பிரேம்ஜி அமரன், அஜய் ராஜ் ஆகியோருடன் இவரும் இணைந்து முக்கியக் கதாப்பத்திரத்தில் நடித்தனர். இந்தத் திரைப்படத்தை எம்.பழனி, எஉரேஷ்குமார், பாஸ்கரன் மற்றும் பரமசிவன் ஆகியோர் இணைந்து தயாரித்தனர். பிரேம்ஜி அமரன் இசையமைத்த இந்தத் திரைப்படம் ஏபரல் 11, 2008 இல் வெளியானது.

2008

2008 ஆம் ஆண்டில்மீண்டும் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் சரோஜா திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். இந்தத் திரைப்படத்திற்கும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்தார்.

2017

2017 ஆம் ஆண்டில் இவர் ஏற்கனவே உரிமை பெற்று வைத்திருந்த வேலைக்காரன் எனும் தலைப்பினை தாங்கள் இயக்கும் படத்திற்குத் தருமாறு இயக்குநர் மோகன் ராஜா கேட்டுள்ளார். இதற்கு விஜய் வசந்த் சம்மதம் தெரிவித்தார். பின் இந்தத் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனின் நண்பனாக பாக்யா எனும் கதாப்பத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். இந்தத் திரைப்படத்தில் சிவ கார்த்திகேயன், பகத் பாசில் மற்றும் நயன்தாரா ஆகியோர் முக்கியக் கதாப்பத்திரத்தில் நடித்தனர்.அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்த இது விமர்சன ரீதியிலாகவும் வியாபார ரீதியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

ஆண்டு திரைப்படம் வேடம் மொழி குறிப்புகள்
2007 சென்னை 600028 கோபி தமிழ்
2008 தோழா அழகு தமிழ்
சரோஜா தமிழ்
தெலுங்கு
கௌரவ வேடம்
2009 நாடோடிகள் சந்திரன் தமிழ்
2010
தமிழ் படப்பிடிப்பில்
2011 மங்காத்தா (திரைப்படம்) கௌரவ வேடம்
2012நண்பன் (2012 திரைப்படம்)
2013 மதிமேல் பூனை கார்த்திக்
பிரியாணி (திரைப்படம்) வசந்த் கௌரவ வேடம்
2014 என்னமோ நடக்குது விஜய்
தெரியாம உன்னக் காதலிச்சுட்டேன் கார்த்திக்
மாஸ்
பாவாடை
2016 வெற்றிவேல் சந்திரன் கௌரவ வேடம்
சென்னை 600028 இரண்டு கோபி
அச்சமின்றி சக்தி
2017 வேலைக்காரன் (2017 திரைப்படம்) பாக்யா
2018 மை டியர் லிசா படப்பிடிப்பில்

மேற்கோள்கள்

  1. http://www.jointscene.com/artists/Kollywood/Vijay_Vasanth/2626
  2. 2.0 2.1 "Archived copy" இம் மூலத்தில் இருந்து 7 January 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100107005053/http://www.jointscene.com/artists/Kollywood/Vijay_Vasanth/2626. பார்த்த நாள்: 9 August 2009. 
  3. "கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் வெற்றி" இம் மூலத்தில் இருந்து 2021-10-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211017012702/https://www.maalaimalar.com/news/topnews/2021/05/03004231/2600313/tamil-news-Vijay-Vasanth-wins-in-Kanyakumari-constituency.vpf. 
  4. "Tamil Cinema News | Tamil Movie Reviews | Tamil Movie Trailers - IndiaGlitz Tamil". IndiaGlitz.com இம் மூலத்தில் இருந்து 2010-05-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100522100653/http://www.indiaglitz.com/channels/tamil/article/57081.html. 
  5. https://nocorruption.in/politician/vasanthakumar-h/
  6. http://www.newindianexpress.com/entertainment/tamil/2017/sep/07/vijay-vasanth-hit-by-cricket-cinema-and-gizmo-fever-1653365--1.html
  7. "A creative force from Singapore". indiaglitz.com இம் மூலத்தில் இருந்து 2008-01-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080104235323/http://www.indiaglitz.com/channels/tamil/article/35687.html. பார்த்த நாள்: 2009-07-28. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=விஜய்_வசந்த்&oldid=22173" இருந்து மீள்விக்கப்பட்டது