வாழ்க்கை ஒப்பந்தம் (திரைப்படம்)
வாழ்க்கை ஒப்பந்தம் (Vaazhkai Oppandham) என்பது 1959 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ் நகைச்சுவைத் திரைப்படமாகும். இப்படத்தை கே. வி. ரெட்டி இயக்கி, தயாரித்தார். இத்திரைப்படத்தில் ஏ. நாகேஸ்வர ராவ், சாரங்கபாணி மற்றும் பலரும் நடித்திருந்தனர். இது தமிழிலும் தெலுங்கிலும் ஒரே நாரத்தில் தயாரிக்கபட்டது. தெலுங்கில் பெள்ளினாட்டி பிரமனாலு என்ற பெயரில் தெலுங்கில் தயாரிக்கப்பட்டது. தமிழில் சில நடிகர்கள் மட்டும் மாற்றபட்டனர். தெலுங்கு திரைப்படம் வெளியாகிய பிறகு அடுத்த ஆண்டு தமிழ்ப் பதிப்பு வெளியானது.[1]
வாழ்க்கை ஒப்பந்தம் | |
---|---|
இயக்கம் | கே. வி. ரெட்டி |
தயாரிப்பு | கே. வி. ரெட்டி ஜெயந்தி பிக்சர்ஸ் |
கதை | பிங்கலி |
இசை | கண்டசாலா |
நடிப்பு | ஏ. நாகேஸ்வர ராவ் சாரங்கபாணி நம்பியார் எஸ். வி. ரங்கராவ் ஏ. கருணாநிதி ஜமுனா ராஜசுலோச்சனா டி. பி. முத்துலட்சுமி |
வெளியீடு | செப்டம்பர் 4, 1959 |
ஓட்டம் | . |
நீளம் | 17692 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தெலுங்கு பதிப்பு 12 திசம்பர் 1958 அன்றும் தமிழ்ப் பதிப்பு 4 செப்டம்பர் 1959 அன்றும் வெளியானது. தெலுங்குப் பதிப்பு வணிகரீதியாக சராசரிக்கும் மேலாக ஓடி வெற்றிபெற்றது. அதே நேரத்தில் தமிழ்ப் பதிப்பு சராசரியாக ஓடியது. ஆனால் முன் விற்பனையின் மூலம் அதன் பணத்தை ஈட்டியது.[1] 6வது தேசிய திரைப்பட விருதுகளில், பெல்லினாட்டி பிரமணலு, தெலுங்கில் சிறந்த திரைப்படத்திற்கான விருதைப் பெற்றது.
கதை
ஒரு மிராசுதாருக்கு பிரதாப் என்ற மகனும், ருக்மணி என்ற மகளும் உள்ளனர். பிரதாப்பின் கல்லூரித் தொழனான கிருஷ்ணனுக்கும் ருக்மணிக்கும் காதல் உருவாகிறது. அவர்களுக்கு சோசலிச தலைவர் ஒருவரால் சீர்திருதத் திருமணம் செய்துவிக்கபடுகிறது. அந்த இணையருக்கு மூன்று குழந்தைகள் பிறக்கின்றன. இந்நிலையில் கிருஷ்ணன் பணிபுரியும் அலுவலகத்துக்கு வேலைக்கு வரும் ராதா என்பவரால் கிருஷ்ணனின் குடும்பத்தில் குழப்பம் நேர்கிறது. அது எவ்வாறு தீர்வுக்கு வருகிறது என்பதே கதையாகும்.
நடிகர்கள்
- கிருஷ்ணனாக அக்கினேனி நாகேஸ்வர ராவ்[2]
- ருக்மணியாக ஜமுனா[2]
- கே. சாரங்கபாணி[2]
- ராதாவாக ராஜசுலோசனா[2]
- மா. நா. நம்பியார்[3]
- டி. பி. முத்துலட்சுமி[3]
- ருக்மணியின் தந்தையாக எஸ். வி. ரங்கராவ்[2]
- ஏ. கருணாநிதி[3]
- சோசலிச தலைவராக தஞ்சை இராமையாதாஸ் (சிறப்புத் தோற்றத்தில்)[1]
தயாரிப்பு
கே. வி. ரெட்டி, தி செவன் இயர் இட்ச் (1955) என்ற அமெரிக்கத் திரைப்படத்தையும் அதன் கதைக் கருத்தையும் விரும்பி, அதே கருப்பொருளில் ஒரு படத்தை எடுக்க விரும்பினார். முதலில், கே. வி. ரெட்டி இந்த படத்தை அன்னபூர்ணா பிக்சர்சின் முதல் படமாகத் தயாரிக்க விரும்பினார். இதை கே. வி. ரெட்டியும், முன்னணி நடிகரான நாகேஸ்வர ராவும் விரும்பிய போதிலும் தயாரிப்பாளர் டி மதுசூதன ராவுக்கு இக்கதையில் நம்பிக்கை இல்லை.[4] இதனால் கே. வி. ரெட்டி சென்னை மாநிலக் கல்லூரியில் தன்னுடன் பயின்ற நண்பர்களான பி. எஸ். ரெட்டி, பட்டாபிராம ரெட்டி ஆகியோருடன் இணைந்து ஜயந்தி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் துவக்கினர்.[5] அந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக இப்படத்தை தயாரித்தனர். ஆங்கிலப் படத்தின் மையக் கருவை மட்டும் எடுத்துக் கொண்டு உள்ளூருக்கு ஏற்ப மாற்றி படத்தை உருவாக்கினர்.[1]
தெலுங்கில் பெல்லினாட்டி பிரமாணாலு என்று பெயரிடப்பட்ட இப்படத்தில் அக்கினேனி நாகேஸ்வரராவ், ஜமுனா ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்தத் திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழில் வாழ்க்கை ஒப்பந்தம் என்ற பெயரில் சில நடிகர்களை மட்டும் மாற்றி எடுக்கப்பட்டு அடுத்த ஆண்டு வெளியானது.[1]
பாடல்கள்
இப்படத்திற்கு கண்டசாலா இசையமைத்திருந்தார். தஞ்சை ராமையாதாஸ் பாடல்களை எழுத கண்டசாலா, திருச்சி லோகநாதன், பி. லீலா, பி. சுசீலா, ஜிக்கி, டி. வி. ரத்தினம் ஆகியோர் பாடியிருந்தனர்.[6]
பாடல் | பாடகர் | நீளம் |
---|---|---|
"பிருந்தாவன வெண்ணிலாவே பேதம் இன்னும் ஏனோ" | கண்டசாலா, பி. லீலா | 2:35 |
"நானல்ல என்பதும்... கனிவுடன் பாராயோ எந்தன்" | கண்டசாலா | 2:31 |
"நீதானே லோகமும் நீதானே சொர்க்கமும்" | கண்டசாலா, பி. லீலா | 3:02 |
"இதய வானில் உதயமான நிலவே" | 2:28 | |
"கிருஷ்ணா... என்னையே மறந்தே" | பி. சுசீலா | 3:21 |
"போனா வராது இது பொழுது போனா கிடைக்காது" | ஜிக்கி | 2:44 |
"வாராய் ஆறுயிர் ராதா என் வாழ்வின் செல்வம்" | கண்டசாலா, பி. சுசீலா | 2:55 |
"ஜெயமே நீ அருள் எங்கள் செந்தமிழ் தாயே" | பி. லீலா | 3:10 |
"ஆராரோ ஆராரோ அன்பே கண் வளராய்" | 3:03 | |
"கொச்சி மலை குடகு மலை எங்கள் நாடு" | டி. வி. ரத்தினம் | 3:23 |
"ரம்பையும் ஊர்வாசியும்" | திருச்சி லோகநாதன் | 3:03 |
வெளியீடும் வரவேற்பும்
வாழ்கை ஒப்பந்தம் 4 செப்டம்பர் 1959 அன்று அதன் தெலுங்கு பதிப்பு வெளியான ஒரு ஆண்டு கழித்து வெளியானது.[1][3] இது முன்னதாக மார்ச் 27 அன்று வெளியிட திட்டமிடப்பட்டது.[7] கல்கியின் காந்தன் திரைப்படம் நாடகம் போன்று இருப்பதை விமர்சித்தார், மேலும் அது தமிழ் திரைப்படத்தின் இந்தக் குறையை நிலைநிறுத்துவதாக உள்ளதாக உணர்ந்தார்.[2] இந்த படம் வணிக ரீதியாக சராசரியாக வெற்றிபெற்றது. இருப்பினும் போட்ட முதலீட்டைப் பெற்றுத் தந்தது.[1]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 Narasimham, M. L. (30 July 2015). "Pellinati Premanalu (1958)". தி இந்து இம் மூலத்தில் இருந்து 20 July 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20220720080605/https://www.thehindu.com/features/cinema/cinema-columns/blast-from-the-past-column-pellinati-premanalu/article7481072.ece.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5
- ↑ 3.0 3.1 3.2 3.3 "1959 – வாழ்க்கை ஒப்பந்தம் – ஜெயந்தி பிக்சர்ஸ் (த-தெ)" (in ta) இம் மூலத்தில் இருந்து 24 January 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20180124005839/http://www.lakshmansruthi.com/cineprofiles/1959-cinedetails48.asp.
- ↑ Pulagam, Chinnarayana. "జగదేక దర్శకుడు" (in te). Sakshi இம் மூலத்தில் இருந்து 3 October 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221003051520/http://telugucinemacharitra.com/%e0%b0%a6%e0%b0%b0%e0%b1%8d%e0%b0%b6%e0%b0%95%e0%b1%81%e0%b0%b2%e0%b0%95%e0%b1%81-%e0%b0%ae%e0%b0%be%e0%b0%b0%e0%b1%8d%e0%b0%97-%e0%b0%a6%e0%b0%b0%e0%b1%8d%e0%b0%b6%e0%b0%95%e0%b1%81%e0%b0%a1%e0%b1%81/.
- ↑ "Star Profiles : Colossal Visionary of films – K V Reddy". 30 June 2012 இம் மூலத்தில் இருந்து 20 January 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130120080236/http://www.telugucinema.com/c/publish/starsprofile/kvreddy_profile.php.
- ↑ G. Neelamegam (in Tamil). Thiraikalanjiyam — Part 1. Manivasagar Publishers, Chennai 108 (Ph:044 25361039). First edition December 2014. பக். 187.
- ↑