வருத்தமற உய்யும் வழி
தி௫க்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீன சீடர் மறைஞான சம்பந்தர் 16 ஆம் நூற்றாண்டில் எழுதிய நூல்களில் ஒன்று வருத்தமற உய்யும் வழி. 17 குறள் வெண்பாக்களால் ஆனது. சிவபூசை செய்தால், ஐந்தெழுத்தைச் சொன்னால் வருத்தமின்றிச் சிவபுரத்தில் இன்புறலாம் எனக் கூறுகிறது.
இதில் உள்ள பாடல்களில் ஒன்று – எடுத்துக்காட்டு [1]
நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினை
என்றும் சிவன் தாள் இணை.
கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம், பதிப்பு 2005
அடிக்குறிப்பு
- ↑ இந்தக் குறள் அட்டாங்கயோகக் குறள் என்னும் நூலிலும் வந்துள்ளது.