வத்தேகாமம்

7°21′4″N 80°41′0″E / 7.35111°N 80.68333°E / 7.35111; 80.68333

வத்தேகாமம்
மாகாணம்
 - மாவட்டம்
மத்திய மாகாணம்
 - கண்டி
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்

 - 0 மீட்டர்

கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)
மக்கள் தொகை
(2001)
 - நகரம் (2001)
80224

 - 11344
குறியீடுகள்
 - அஞ்சல்
 - தொலைபேசி
 - வாகனம்
 
 - 20810
 - +9481
 - CP
வத்தேகாமம்
வத்தேகாமம் is located in இலங்கை
வத்தேகாமம்
வத்தேகாமம்
ஆள்கூறுகள்: 7°21′4″N 80°41′0″E / 7.35111°N 80.68333°E / 7.35111; 80.68333

வத்தேகாமாம் அல்லது வத்தேகமை இலங்கையின் மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தில் பாததும்பறை வட்டச் செயலாளர் பிரிவில் அமைந்துள்ள ஒரு நகரசபையாகும். வத்தேகாமம் வட்டச் செயலாளர் பிரிவில் காணப்ப்டும் முக்கிய நகரமும் வியாபார மையமுமாகும். வத்தேகாமம் நகரின் அரசியல் உள்ளூராட்சி நகரசபையாலும் நகரச் சூழவுள்ள கிராமிய மற்றும் தோட்டப்புறப் பகுதிகளின் அரசியல் உள்ளூராட்சி பாததும்பறை பிரதேச சபையலும் மேற்கொள்ளப்படுகிறது. நகரசபை மற்றும் பிரதேசபை என்பன கூட்டாக பாததும்பறை பிரதேச செயலார் நிர்வாகப் பிரிவில் அடங்குகின்றன. இது மாவட்ட தலைநகரான கண்டி நகரத்தில் இருந்து வடக்குத் திசையில் அமைந்துள்ளது.

புவியியலும் காலநிலையும்

வத்தேகாமம் மத்திய மலைநாடு என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 485 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது. இங்கு வருடாந்த சராசரி வெப்பநிலை 24 பாகை செல்சியஸ் ஆகும். பெரும்பாலான மழைவீழ்ச்சி தென்மேற்கு பருவக்காற்று மூலம் கிடைக்கிறது. 2500-3000 மி.மீ. வருடாந்த சராசரி மழைவீழ்ச்சியை பெறுகின்றது.

மக்கள்

இது சிங்களவரை பெரும்பான்மையாக கொண்ட ஒரு வட்டச் செயலாளர் பிரிவு ஆகும். இங்குள்ள மக்களில் பெரும்பானமையினர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவராவர். 2001 இலங்கை அரசின் மக்கள் தொகை கணிப்பீட்டில மக்களின அடிப்படையிலான மக்கள் தொகைப் பரம்பல் பின்வருமாறு:

பிரிவு மொத்தம் சிங்களவர் இலங்கைத் தமிழர் இந்தியத் தமிழர் முஸ்லிம்கள் பரங்கியர் ஏனைய
மொத்தம் 11344 8648 979 364 1305 21 24
நகரம் 11344 8648 979 364 1305 21 24

2001 இலங்கை அரசின் மக்கள் தொகை கணிப்பீட்டில் மத அடிப்படையிலான மக்கள் தொகைப் பரம்பல் வருமாறு:

பிரிவு மொத்தம் பௌத்தர் இந்து இஸ்லாம் கத்தோலிக்கம் ஏனைய கிறிஸ்தவம் ஏனைய
மொத்தம் 11344 8468 934 1544 317 81 0
நகரம் 11344 8468 934 1544 317 81 0


கைத்தொழில்

இங்கு நெற்பயிர்ச் செய்கை, மரக்கறிச் செய்கை முக்கிய இடத்தை பெருகிறது.

குறிப்புகள்


உசாத்துணைகள்


இலங்கை மத்திய மாகாணத்தில் உள்ள நகரங்கள்  
மாநகரசபைகள் கண்டி | மாத்தளை | நுவரெலியா
நகரசபைகள் நாவலப்பிட்டி | கம்பளை | கடுகண்ணாவை | வத்தேகாமம் | அட்டன் - டிக்கோயா | தலவாக்கலை - லிந்துலை | உடதலவின்ன
சிறு நகரங்கள் அக்குரணை | கினிகத்தனை | குண்டசாலை | கொட்டகலை | தெல்தோட்டை | தொழுவை | பன்விலை | பேராதனை | மினிப்பே | வட்டவளை | இரம்படை | புசல்லாவை | உலப்பனை | பொகவந்தலாவை
"https://tamilar.wiki/index.php?title=வத்தேகாமம்&oldid=38894" இருந்து மீள்விக்கப்பட்டது