லிப்ட் (2021 திரைப்படம்)

லிஃப்ட் (Lift) என்பது 2021ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த பரபரப்பூட்டும் திரைப்படமாகும். இது வினீத் வரபிரசாத்தின் அறிமுக இயக்கத்தில் உருவானது. இந்த படத்தில் கவின், அமிர்தா ஐயர் ஆகியோர் நடித்துள்ளனர். இது 1 அக்டோபர் 2021 அன்று ஹாட் ஸ்டார் வழியாக நேரடியாக வெளியிடப்பட்டது. இந்த படம் பொதுவாக விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. மேலும், முக்கிய நடிகர்களின் நடிப்பை பாராட்டினார்கள்.[1]

லிப்ட்
இயக்கம்வினீத் வரபிரசாத்
தயாரிப்புஎப்சி
இசைபிரிட்டோ மைக்கேல்
நடிப்புகவின்
அமிர்தா ஐயர்
ஒளிப்பதிவுஎஸ். யுவா
படத்தொகுப்புஜி. மதன்
கலையகம்ஈகா என்டர்டெயின்மென்ட்
விநியோகம்ஹாட் ஸ்டார்
வெளியீடுஅக்டோபர் 1, 2021 (2021-10-01)
ஓட்டம்134 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தயாரிப்பு

இப்படத்தை அறிமுக இயக்குனர் வினீத் வரபிரசாத் தான் இயக்கவிருப்பதாக அறிவித்தார். கவின் முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாகவும் அறிவித்தார். மேலும் கவின் பிக் பாஸ் தமிழ் 3 மூன்றாவது பருவத்திலிருந்து வெளியேற்றப்பட்ட உடனேயே படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.[2] கோவிட்-19 பெருந்தொற்று தொடங்குவதற்கு 20 நாட்களுக்குள் படத்தின் முதன்மை புகைப்படம் எடுக்கப்பட்டது. மேலும், படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த சிறிது காலத்திலேயே தயாரிப்புக்கு பிந்தைய பணிகள் தொடர்ந்தன.[3]

ஒலிப்பதிவு

படத்தில் இரண்டு பாடல்கள் உள்ளன.[4] "இன்னா மைலு" என்ற தலைப்பில் முதல் பாடல் 22 ஏப்ரல் 2021 அன்று வெளியிடப்பட்டது, இது யூடியூப்பில் 30 மில்லியன் பார்வைகளைப் பெற்று உடனடி வெற்றி பெற்றது.[5]

மேற்கோள்கள்

  1. Pudipeddi, Haricharan (1 October 2021). "Lift movie review: Kavin's film about possessed elevator is average attempt at horror". ஹிந்துஸ்தான் டைம்ஸ். Archived from the original on 2 October 2021. பார்க்கப்பட்ட நாள் 2 October 2021.
  2. Sunder, Gautam (30 September 2021). "Actor Kavin on making his comeback with 'Lift,' and why director Nelson is his rockstar". தி இந்து. https://www.thehindu.com/entertainment/movies/actor-kavin-on-making-his-comeback-with-lift-and-why-director-nelson-is-his-rockstar/article36753585.ece. 
  3. "Kavin & Amritha Aiyer's Lift cleared with a U/A certificate". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 9 September 2021. Archived from the original on 15 September 2021. பார்க்கப்பட்ட நாள் 2 October 2021.
  4. "Lift". JioSaavn. 22 April 2021. Archived from the original on 20 August 2021. பார்க்கப்பட்ட நாள் 4 October 2021.
  5. "'Lift' first single: Trendy 'Inna Mylu' by Sivakarthikeyan is entertaining". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 22 April 2021. Archived from the original on 2 October 2021. பார்க்கப்பட்ட நாள் 2 October 2021.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=லிப்ட்_(2021_திரைப்படம்)&oldid=37276" இருந்து மீள்விக்கப்பட்டது