காயத்ரி ரெட்டி (நடிகை)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
காயத்ரி ரெட்டி
Gayathri Reddy.jpg
பணி
செயற்பாட்டுக்
காலம்
2016–தற்போது வரை

காயத்ரி ரெட்டி (Gayathri Reddy) ஓர் இந்திய வடிவழகியும், நடிகையும் ஆவார். பெமினா மிஸ் இந்தியா 2016 அழகுப் போட்டியில் இவர் இறுதிப் போட்டியாளராக இருந்தார். 2019ஆம் ஆண்டு பிகில் படத்தின் மூலம் அறிமுகமானார்.

தொழில்

தனது 20 வயதில், காயத்ரி பெமினா மிஸ் இந்தியா 2016இல் இறுதிப் போட்டி வரை சென்றார். மேலும், இரண்டு துணைப் போட்டி விருதுகளை வென்றார்.[1][2][3][4] வருண் தவானின் சிறப்பு நுழைவு மூலம் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இது இந்தியப் பெண்களின் தனித்துவத்தைக் கொண்டாடும் நோக்கம் கொண்டது.[5] காயத்ரி பிகில் (2019) திரைப்படத்தில் அறிமுகமானார். அதில் இவர் பெண் கால்பந்து வீரர்களில் ஒருவரான மாரியாக நடித்தார். இவர் இதற்கு முன் கால்பந்து விளையாடியதில்லை. மேலும் தனது கால்பந்து திறன்களை மேம்படுத்துவதற்காக நாற்பத்தைந்து நாள் பயிற்சியில் பங்கேற்றார். படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து கூறுகையில், "விஜயுடன் பணிபுரிவது ஆரம்பத்தில் மிகவும் கடினமாக இருந்தது. ஏனென்றால் நான் அவரை கோபத்துடன் பார்க்க வேண்டிய காட்சிகள் இருந்தன" என்றார்.[6][7] இவர் தமிழ் மொழித் திரைப்படமான லிப்ட் (2021) திரைப்படத்தில் ஒரு பாத்திரத்தில் நடித்தார்.[8]

மேற்கோள்கள்

  1. "Unveiling the fbb Femina Miss India 2016 finalists - BeautyPageants". Femina Miss India.
  2. "fbb Femina Miss India 2016 Sub-contest winners announced - Beauty Pageants - Indiatimes". Femina Miss India.
  3. "Beauty queen fights against suicide and depression - Beauty Pageants - Indiatimes". Femina Miss India.
  4. "Chennai Times 25 Most Desirable Women in 2016 - Times of India". The Times of India.
  5. "VarunsStyleBuddy campaign's grand finale held in Mumbai - Times of India". The Times of India.
  6. "Gayathri Reddy as Maari". The Hindu. 4 November 2019.
  7. Sunder, Gautam (2 November 2019). "The girls of 'Bigil'". The Hindu.
  8. "Vijay's Bigil actress Gayathri Reddy in Kavin's next film - Times of India". The Times of India.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=காயத்ரி_ரெட்டி_(நடிகை)&oldid=22549" இருந்து மீள்விக்கப்பட்டது