ரிஷி (நடிகர்)
ரிஷி என்பவர் ஒரு இந்திய திரைப்பட, நாடக, தொலைக்காட்சி நடிகர் ஆவார். இவர் சன் தொலைக்காட்சியின் டீலா நோ டீலா நிகழ்ச்சியில் பணியாற்றியதற்காக சிறப்பாக அறியப்படுகிறார். எண்டெமால் இந்தியாவுடனான இவரது இரண்டாவது கதையல்லாத நிகழ்ச்சியாக சன் தொலைக்காட்சியில் கையில் ஒரு கோடி என்ற நிகழ்ச்சியிலும் தோன்றினார்.[1] ரிஷி தமிழ் படங்களில் துணை வேடங்களில் நடித்துள்ளார், குறிப்பாக ஆனந்த தாண்டவம், பயணம் ஆகியவை ஆகும்.
ரிஷி | |
---|---|
பிறப்பு | ரிஷி சந்திரசேகரன இந்தியா, தமிழ்நாடு, சென்னை |
பணி | நடிகர், தொலைக்காட்சி தொகுப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 2003-தற்போது வரை |
தற்போது தென்னிந்தியாவிற்கான விம் லிக்விடின் பிராண்ட் தூதராக உள்ளார்.
ஆரம்ப கால வாழ்க்கை
ரிஷி தமிழரான எஸ். சந்திரசேகரனுக்கும், குஜராத்தி தாயான காயத்ரி சந்திரசேகரனுக்கும் பிறந்த ஒரே பிள்ளையாவார். இவரது தந்தை ஒரு இசைக்கலைஞர், தாயார் தொழில்முறை அல்லாத கவிஞர் ஆவார். இவரது தந்தைவழி தாத்தா 60 களில் காமராசர் தலைமையிலான காங்கிரசின் உறுப்பினரும், அரசியல்வாதியுமான சி. ஆர். சுப்பிரமணியம் ஆவார். 17 வயதில், ரிஷி மேடை ஏற பொறியியல் துறையை விட்டுவிட்டார்.[2]
தொழில்
தொலைக்காட்சி
எண்டெமோலின் டீலா நோ டீலா நிகழ்ச்சியில் சன் தொலைக்காட்சியில் தோன்றுவதற்கு முன்பு ரிஷி ஸ்டார் விஜயில் ஒரு சில புனைகதை மற்றும் புனைகதை அல்லாத நிகழ்ச்சிகளில் தோன்றினார். இவற்றில் தோன்றிய ரிஷியின் பாணியால் இவரின் பெயரானது உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களிடையே ஒரு குடும்பப் பெயராக மாறியது, மலேசியா, கனடாவிலும் ரசிகர்களைப் பெற்றார்.[3] சன் தொலைக்காட்சி குறைந்த செலவினான விளையாட்டு நிகழ்ச்சிகளை நடத்தும் போக்கிலிருந்து மாறியது. இதற்கு முன் பார்த்திராத நிதியையும், வளங்களையும் செலவிடுவதன் மூலம் அதன் வெற்றியில் மட்டுமல்லாமல், தென்னிந்தியாவில் தொலைக்காட்சி வணிகம் மேற்கொள்ளப்பட்ட முறையையும் மாற்றியமைத்தது. 2012 ஆம் ஆண்டில், எண்டெமால் சவுத் சன் தொலைக்காட்சியில் கையில் ஓரு கோடி, ஆர்யூ ரெடி? (மில்லியன் டாலர் மனி டிராப்பின் தமிழ் பதிப்பு) நிகழ்ச்சியில் ரிஷி தொகுப்பாளராக பணிசெய்தார். இது அந்த ஆண்டின் மிக வெற்றிகரமான நிகழ்ச்சிகளில் ஒன்றாகும். எப்படியிருந்தாலும் தொலைக்காட்சியில் பார்வையாளர்களை கவர்கவதற்காக திரைப்பட நட்சத்திரங்களை நியமிக்காமல் தொகுப்பாளராக ரிஷியை நம்பிக்கையுடன் தேர்ந்தெடுத்ததற்காக சன் தொலைக்காட்சிக்கு சிறப்பு பாராட்டு கிடைத்தது. 2009-10 ஆம் ஆண்டில் ரிஷி மிகவும் பிரபலமான தெலுங்கு மொழி தொலைக்காட்சித் தொடரில் முன்னணி பாத்திரத்தில் நடித்தார். சுந்தரகாண்டா அமெரிக்காவில் படமாக்கப்பட்ட முதல் இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சியாகும்.
படங்கள்
எம். ஆர். ராதா, ரகுவரன் ஆகியோரை தனது குழந்தை பருவத்தில் மனதில் பதித்த ரிஷி, எப்போதும் எதிர்மறை வேடங்களில் நடிக்க விரும்பினார். ஆனந்த தண்டவம் படத்தில் அறிமுகமானார். பின்னர் இவர் மந்திரப் புன்னகை, மிரட்டல், நான் சிகப்பு மனிதன் போன்ற சில படங்களில் துணை வேடங்களில் நடித்தார். பின்னர் பயணம் (தெலுங்கில் ககனம்) படத்தில் தோன்றினார்.
நடிகை கரீனாஷாவுடன் பரிதி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனால் படம் திரையரங்குகளில் வெளிவரவில்லை.[4]
மேடையில்
ரிஷி 17 வயதில் நாடகங்களை இயக்கி நடிக்க ஆரம்பித்தார். இவர் 2006 இல் ஷேக்ஸ்பியரின் இலக்கியங்களை செய்தார். இவர் மெட்ராஸ் பிளேயர்களுடன் மெட்ரோப்ளஸ் நாடக விழாவில் இரண்டு முறை தோன்றியுள்ளார். சமீபத்தில், ஹானி நாடகத்தில் அவரது நடிப்புக்காக ரிஷி கடுமையான விமர்சிக்கப்பட்டார் .[5]
திரைப்படவியல்
- குறிப்புகளில் குறிக்கபடா, எல்லா படங்களும் தமிழில் உள்ளன.
படம்
ஆண்டு | படம் | பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
2008 | தொடக்கம் | ஹபீப் | |
2009 | ஆனந்த தண்டவம் | ராதாகிருஷ்ணன் | |
2010 | மந்திரப் புன்னகை | சங்கர் | |
2011 | ககனம் | வினோத் | தெலுங்கு படம் |
பயணம் | |||
2012 | மிரட்டல் | கௌதம் | சிறப்புத் தோற்றம் |
2014 | நான் சிகப்பு மனிதன் | கார்த்திக் | |
யான் | ரேம் | ||
2015 | ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை | கே. ஆனந்த் | சிறப்புத் தோற்றம் |
2016 | ராஜாதி ராஜா | தெலுங்கு படம்; சிறப்புத் தோற்றம் | |
2019 | சத்ரு | மகேந்திரன் |
தொலைக்காட்சி
- நடிகர்
ஆண்டு | தலைப்பு | பாத்திரம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
2005-2006 | இது ஓரு காதல் கதை | அனந்து | தமிழ் | |
2009-2010 | அசோகவனம் | அஜய் | தெலுங்கு மற்றும் தமிழ் | |
2012-2013 | பதமத கலி | தெலுங்கு |
- தொகுப்பாளராக
ஆண்டு | தலைப்பு | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|
2011 | டீலா நோ டீலா | தமிழ் | |
2012 | கைல் ஓரு கோடி - ஆர்யூ ரெடி? | தமிழ் | |
2014-2015 | வேந்தர் வீட்டுகல்யனம் | தமிழ் | |
2015–2016 | சூப்பர் சேலஞ்ச் | தமிழ் | |
2019 | சன் குடும்பம் விருதுகல் 2019 | தமிழ் |
குறிப்புகள்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2016-06-30 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160630191130/http://www.sunnetwork.in/1crore/tamil/.
- ↑ "Meet Tamil TV's hottest host!". https://movies.rediff.com/slide-show/2010/sep/24/slide-show-1-south-interview-with-rishi.htm.
- ↑ "Rishi". https://www.veethi.com/india-people/rishi-profile-920-17.htm.
- ↑ "Parithi Photos - Tamil Movies photos, images, gallery, stills, clips". https://www.indiaglitz.com/tamil-movies-parithi-gallery-13840.html.
- ↑ "A matter of honour". 24 June 2014. https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/a-matter-of-honour/article6142931.ece.