முலைப்பத்து

முலைப்பத்து என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் என்றும் வடமொழியில் பிரபந்தங்கள் என்றும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்றாகும். பெண்களின் முலைகளைப் பத்து ஆசிரிய விருத்தங்களினால் அல்லது பத்துக் கலித்துறைப் பாக்களினால் வருணித்துப் பாடுவதே முலைப்பத்து எனப் பாட்டியல் இலக்கண நூல்கள் கூறுகின்றன.[1] இதைப் பயோதரப்பத்து எனவும் சில நூல்கள் குறிப்பிடும்[2]. பயோதரம் என்பது வடமொழியில் முலையைக் குறிக்கும் ஒரு சொல்லாகும்.

குறிப்புகள்

  1. இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 852
  2. நவநீதப் பாட்டியல், முத்துவீரியம்

உசாத்துணைகள்

இவற்றையும் பார்க்கவும்

"https://tamilar.wiki/index.php?title=முலைப்பத்து&oldid=16878" இருந்து மீள்விக்கப்பட்டது